இந்தியாவில் 13,000 மொபைல் போனுக்கு ஒரே IMEI., ஷாக்கான போலீஸார்: அடுத்தது என்ன?

|

இந்தியாவில் சுமார் 13,000 மொபைல் போன்களுக்கு ஒரே ஐஎம்இஐ இருப்பது போலீஸாரால் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மொபைல் போனுக்கும் தனி ஐஎம்இஐ

ஒவ்வொரு மொபைல் போனுக்கும் தனி ஐஎம்இஐ

பொதுவாக ஒரு வாகனத்திற்கு தனியாக எண்கள் ஒதுக்கப்படுவது போல் ஒவ்வொரு மொபைல் போனுக்கும் வெவ்வேறு ஐஎம்இஐ இருக்கும். மொபைலில் பொருத்தப்பட்டிருக்கும் சிம்கார்டையும் தாண்டி மொபைல் போனுக்கு ஐஎம்இஐ பிரதான ஒன்று.

ஐஎம்இஐ எண் தான் டிராக் செய்ய கைக்கொடுக்கும்

ஐஎம்இஐ எண் தான் டிராக் செய்ய கைக்கொடுக்கும்

செல்போன்கள் காணாமல் போகியிருந்தாலோ அல்லது ஏதேனும் குற்றச் சம்பவத்தில் ஈடுபடும் போது செல்போனின் ஐஎம்இஐ எண் தான் டிராக் செய்ய கைக்கொடுக்கும். நாம் திரைப்படத்தில் கூட இதுபோன்று பல்வேறு காட்சிகளை பார்த்திருப்போம்.

ஐபோன் ஷோரூம் சூறையாடல்: ஐபோன்கள் திருட்டு., ஆப்பிள் சொன்ன ஒரே வார்த்தை., ஆடிப்போன கொள்ளையர்கள்!ஐபோன் ஷோரூம் சூறையாடல்: ஐபோன்கள் திருட்டு., ஆப்பிள் சொன்ன ஒரே வார்த்தை., ஆடிப்போன கொள்ளையர்கள்!

சினிமாப்பட காட்சிகள்

சினிமாப்பட காட்சிகள்

செல்போனின் சிம்கார்டை மாற்றி இடம்பெயர்ந்த நபர் அந்த செல்போனை மாற்றுவதற்கு மறந்துவிட்டார். அந்த செல்போன் ஐஎம்இஐ நம்பரை வைத்து சிம்கார்டை டிராக் செய்து அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தோம் என்பது போன்று இருக்கும். அதன்படி ஒவ்வொரு மொபைல் போனுக்கும் தனித்தனி ஐஎம்இஐ என்பது கட்டாயம்.

சுமார் 13000 மொபைல் போனுக்கு ஒரே ஐஎம்இஐ

சுமார் 13000 மொபைல் போனுக்கு ஒரே ஐஎம்இஐ

இந்த நிலையில் சுமார் 13000 மொபைல் போனுக்கு ஒரே ஐஎம்இஐ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம் மீரட் நகர் பகுதி காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவர் மொபைல் போன் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த மொபைல் போன் பழுதடைந்த காரணத்தால், அதை கடைக்கு சென்று மீண்டும் கொடுத்துள்ளார்.

மொபைல் மற்றும் அதன் அட்டைப்பெட்டியில் வேறுவேறு ஐஎம்இஐ

மொபைல் மற்றும் அதன் அட்டைப்பெட்டியில் வேறுவேறு ஐஎம்இஐ

இந்த மொபைல் போன் பழுதுநீக்குவதில் சிரமம் ஏற்பட்ட காரணத்தால் கடைக்காரர்கள் வேறு மொபைல் கொடுத்துள்ளனர். இந்த மொபைல் போனை வாங்கிச் சென்று காவலர் சோதிக்கும் போது, மொபைல் மற்றும் அதன் அட்டைப்பெட்டியில் வேறுவேறு ஐஎம்இஐ இருப்பதை கண்டறிந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

சைபர் கிரைம் பிரிவினரிடம் கொடுத்து சோதனை

சைபர் கிரைம் பிரிவினரிடம் கொடுத்து சோதனை

இதனால் சந்தேகம் அடைந்த அந்த காவலர் மொபைல் போனை சைபர் கிரைம் பிரிவினரிடம் கொடுத்து சோதித்துள்ளார். அப்போது மொபைல் போனில் உள்ள ஐஎம்இஐ எண்ணில் சுமார் 13000 மொபைல் போன்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த போலீஸார் இந்த விவகாரம் கடுமையான பாதுகாப்பு பிரச்சனை என்பது குறித்து உணர்ந்தனர்.

நிறுவனத்தின் அலட்சியச் செயல்

நிறுவனத்தின் அலட்சியச் செயல்

சுமார் 13000 மொபைல் போன்களும் ஒரே ஐஎம்இஐ-ல் இருப்பது மொபைல் போன் நிறுவனத்தின் அலட்சியச் செயல் எனவும் இதை சாதமாக பல்வேறு குற்றவாளிகள் பயன்படுத்த வாய்ப்புள்ளது எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது

பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது

பொதுவாக தனித்தனியே ஒவ்வொரு மொபைல் எண்ணுக்கும் ஐஎம்இஐ இருக்க வேண்டும் என்பது சர்வதேச விதிமுறை ஆகும். அப்படி இருக்கையில் இதுபோன்று ஒரே ஐஎம்இஐ-ல் சுமார் 13000 மொபைல் போன் இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

ஜியோ பேஸ்புக் Vs வோடபோன் கூகுள் இப்போ ஏர்டெலில் அமேசான் ரூ.15000 கோடி முதலீடு: நமக்கு என்ன நன்மை!ஜியோ பேஸ்புக் Vs வோடபோன் கூகுள் இப்போ ஏர்டெலில் அமேசான் ரூ.15000 கோடி முதலீடு: நமக்கு என்ன நன்மை!

வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

இதுகுறித்து தகுந்த சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும். இதுதொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர்கள் குழு அழைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source: newindianexpress.com

Best Mobiles in India

English summary
13,000 mobile phones are running on same IMEI number in india

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X