Home
News

திடீரென வீட்டுக்குள் வந்த குரங்கு.. Alexa உதவியுடன் சமயோஜிதமாகச் செயல்பட்ட சிறுமி.. நடந்தது இதுதான்..

அலெக்ஸா (Alexa) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவான நவீன வகை சாதனம். குறிப்பாக இதை ஒரு குட்டி ரோபோ என்று கூட சொல்லலாம். அதேபோல் இந்த சாதனத்தைச் சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை பயன்படுத்த அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் வீட்டில் குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்த 13 வயது சிறுமி, திடீரென வீட்டுக்குள் நுழைந்த குரங்கை இந்த அதிநவீன அலெக்ஸா சாதனத்தின் (Alexa device) உதவியுடன் விரட்டினார். இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

திடீரென வீட்டுக்குள் வந்த குரங்கு.. சமயோஜிதமாகச் செயல்பட்ட சிறுமி..

அதாவது நிகிதா (Nikita) என்ற 13 வயது சிறுமி அவாஸ் விகாஸ் (Awas Vikas) எனும் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்குச் சென்றிருந்தார். அங்கு குடும்பத்தினர் வீட்டின் வேறு அறையில் இருந்ததாக கூறப்படுகிறது. நிகிதா தன் சகோதரியின் ஒரு வயது மகளுடன் வீட்டின் முதல் தளத்தில் சமையல் அறையின் அருகே விளையாடிக்கொண்டிருந்தார்.

அந்த குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் தான் திடீரென குரங்கு ஒன்று சமையலறைக்குள் நுழைந்து. குறிப்பாக குடும்பத்தினர் வேறு அறையில் இருந்ததால், குரங்கு நுழைந்திருப்பதை அவர்கள் அறியவில்லை என்று கூறப்படுகிறது.

திடீரென வீட்டுக்குள் வந்த குரங்கு.. சமயோஜிதமாகச் செயல்பட்ட சிறுமி..

குறிப்பாக அங்கு வந்த குரங்கு சமையலறையிலிருந்த பாத்திரங்களை எடுத்து வீச ஆரம்பித்தது. அதன்பின்பு குரங்கு நிகிதாவையும், குழந்தையும் நோக்கி நகர்ந்தது. அந்தசமயம் என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்த்துக்கொண்டிருந்த 1 வயதுக் குழந்தை, உடனே அலற ஆரம்பித்தது. அப்போது தான் நிகிதா ஃபிரட்ஜ் மேல் அலெக்ஸா இருப்பதைப் பார்த்தார்.

உடனே நிகிதா, அலெக்ஸாவிடம் குரங்கை அச்சுறுத்தும் விதமாகக் குறைக்குமாறு கட்டளையிட்டார். அதன்படி அந்த அலெக்ஸா சாதனமும் குறைப்பது போன்று ஒலியெழுப்ப, குரங்கு பயந்து அங்கிருந்து கிளம்பியது. குறிப்பாக நிகிதா தன்னுடைய சமயோஜித செயலால் தன் சகோதரியின் மகளைக் காப்பாற்றினார்.

அதன்பின்னர் இதுகுறித்து பேசிய அந்த குடும்ப உறுப்பினர் பங்கஜ் ஓஜா என்பவர், அலெக்ஸாவை நிகிதா இவ்வாறு பயன்படுத்திய எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது என்று தெரிவித்தார்.

வித்தியாசமான டிசைன்களில் அமேசான் நிறுவனம் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்டுடன் கூடிய ஸ்பீக்கர்களை தொடர்ந்து அறிமுகம் செய்துவருகிறது. குறிப்பாக இந்த அலெக்ஸா ஸ்பீக்கர்கள் தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்த அலெக்ஸ் மூலம் இசையைக் கேட்கலாம், செய்திகள், வானிலை, நிலவரத்தை அறிந்துகொள்ளலாம்.

மேலும் இதன் மூலம் அலாரம் வைத்துக்கொள்ளலாம். அதேசமயம் அலெகஸா மூலம் உங்களுடைய வீட்டில் இருக்கும் ஸ்மார்ட் சாதனங்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம். குறிப்பாக உங்களுடைய ஸ்மார்ட் சாதனங்களை இதனுடன் இணைத்துவிட்டால் அச்த சாதனங்களை உங்களின் கட்டளைக்கு இணங்க செயல்பட வைக்கும். இதுதவிர முக்கிய நிகழ்வுகளை உங்களுக்கு நியாபகப்படுத்தும்.

திடீரென வீட்டுக்குள் வந்த குரங்கு.. சமயோஜிதமாகச் செயல்பட்ட சிறுமி..

சிலர் தனிமையில் இருக்கும்போது பெரும்பாலான பொழுதுபோக்காகவும் உற்ற துணையாகவும் இந்த அலெக்ஸாவே இருக்கிறது. அதுவும் இந்த அலெக்ஸா ஆனது பெரியவர்களை விட குழந்தைகளிடம் அதிகம் பயன்பாட்டில் உள்ளது.

குறிப்பாக பிடித்த கதைகளைக் கூற, கணக்குகளுக்குத் தீர்வு காண, நகைச்சுவைகளைச் சொல்வதற்கு, பொது அறிவு கேள்விகளுக்குப் பதில் அளிப்பது, பிடித்த பாட்டுகளைக் கேட்பதற்கும், விளையாடுவதற்கு வீட்டுப்பாடங்களைச் செய்வதற்கு என குழந்தைகளுக்குப் பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
13-year-old girl chased away monkey that entered the house with help of Alexa
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X