தாறுமாறு ஆர்டர்.. 2 டிவியே வாங்கலாம்.. வெறும் ரூ.10,791 போதும்.. பிளிப்கார்ட் அதிரடி ஆஃபர்.. யாருங்க விடுவா?
வெறும் ரூ.10,000 பட்ஜெட்டில் ஃபுல்எச்டி எல்இடி சப்போர்ட் கொண்ட ஆண்ட்ராய்டு டிவியை வாங்க வேண்டும் என்றால், டிசிஎல் 32 இன்ச் எல்இடி டிவி பக்காவான தேர்வாக இருக்கும். இந்த டிவிக்கு பிளிப்கார்ட்டில் அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரம் இதோ.
ரூ.25,000 செலவு செய்து, ஒரு டிவியை வாங்குவதற்கு, ரூ.10,000 பட்ஜெட்டில் 2 டிவியை வாங்கி ஹால், பெட்ரூம் என்று மாட்டிக்கொள்ளலாம் என்பதே பலரது திட்டமாக இருக்கிறது. ஆனால், அந்த பட்ஜெட்டில் எல்இடி டிஸ்பிளே, ஸ்மார்ட் ரிமோட், வாய்ஸ் அசிஸ்டன்ட், கூகுள் பிளே ஸ்டோர் போன்ற அம்சங்களை எதிர்பார்க்க முடியாது. ஆனால், டிசிஎல் (TCL) நிறுவனத்தின் 32 இன்ச் டிவி அதுபோன்ற பிரம்மாண்ட அம்சங்களுடன் கம்மியான விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது.

டிசிஎல் 32 இன்ச் எல்இடி டிவி அம்சங்கள் (TCL 32 inch LED TV Specifications): இந்த டிசிஎல் டிவி 32 இன்ச் (1920 x 1080 பிக்சல்கள்) ஃபுல் எச்டி (Full HD) எல்இடி (LED) டிஸ்பிளே கொண்டுள்ளது, இதுவொரு பெசல்-லெஸ் டிஸ்பிளே மாடலாகும்.
இதில் எச்டிஆர் 10 (HDR 10) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மைக்ரோ டிம்மிங் (Micro Dimming) டெக்னாலஜி வருகிறது. இந்த டெக்னாலஜி வீட்டின் லைட்டிங்குங்கு ஏற்ப பிரைட்னஸை அட்செஸ்ட் செய்துகொள்ளும். ஆகவே, வீடியோ குவாலிட்டி, கிரிஸ்டல் கிளியர் தரத்திலும், கண்களுக்கு எந்தவித உறுத்தலும் இல்லாத வகையில் இருக்கும்.
அதுமட்டுமல்லாமல், 260 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் கொடுக்கப்பட்டுள்ளது. 24 W ஸ்பீக்கர்கள் வருகின்றன. இதில் டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் வருகிறது. அதோடு 50 - 60 Hz ஸ்பீக்கர் ஃபிரிகொன்சி ரேஞ்ச் (Speaker Frequency Range) கிடைக்கிறது.
மேலும், ஸ்டாண்டர்ட் (Standard), மூவி (Movie), மியூசிக் (Music), வாய்ஸ் (Voice), கேம் (Game), ஸ்டேடியம் (Stadium), பர்சனல் (Personal) ஆகிய சவுண்ட் மோட்கள் வருகின்றன. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சப்போர்ட் வருகிறது. கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store)கொடுக்கப்பட்டுள்ளது.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney + Hotstar), நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஜீ5 (Zee5), ஜியோ சினிமா (Jio Cinema) உள்ளிட்ட பெரும்பாலான ஓடிடி (OTT) ஆப்களை பயன்படுத்திக் கொள்ளலாம். ப்ளூடூத் (Bluetooth) மற்றும் வை-பை (Wi-Fi) கனெக்டிவிட்டி வருகிறது.
அதோடு ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) அம்சம் வருகிறது. இந்த டிவியில் 2 எச்டிஎம்ஐ போர்ட் மற்றும் 1 யுஎஸ்பி போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இன்டர்நெட் அக்சஸ் கொண்ட ஸ்மார்ட் ரிமோட் (Smart Remote) வருகிறது. மேலும், கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), பேரென்டல் கன்ட்ரோல் (Parental Control), ஸ்லீப் டைமர் (Sleep Timer), ஆட்டோ பவர் ஆஃப் (Auto Power Off) போன்ற பெரும்பாலான அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த டிவிக்கு 2 வருட வாரண்ட்டி வழங்கப்படுகிறது. இந்த டிவியை வாங்கினால், 48 மணி நேரத்தில் வீட்டில் இன்ஸ்டால் செய்து தரப்படுகிறது. இந்த டிவியின் விலை ரூ.16,000 பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது, ரூ.12,490க்கு கிடைக்கிறது. இந்த விலையிலும் ஃபிளிப்கார்ட் (Flipkart) அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது.
அதாவது, இந்த டிவியை பிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்யும்போது, பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தினால், ரூ.1,199 தள்ளுபடி வழங்கப்படும். அதோடு கேஸ் ஆன் டெலிவரி (Cash On Delivery கொடுக்காமல், முன்கூட்டியே ஆன்லைனில் பணம் கட்டினால், ரூ.500 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், ரூ.11,700 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் கிடைக்கிறது. ஆகவே, ரூ.12,490 க்கு விற்பனையாகும், இந்த டிசிஎல் எல்இடி டிவியை வெறும் ரூ.10,791 க்கு வாங்கிக் கொள்ள முடியும். இவ்வளவு கம்மியான விலைக்கு அசத்தலான அம்சங்களுடன் டிவி கிடைப்பது, வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications








