இரஷ்ய பொருளாதாரம் பற்றிய பிரம்மிக்கதக்க 13 உண்மைகள்!

|

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு சோவியத் யூனியன் அமெரிக்காவிற்கு போட்டியாக உலகளாவிய வல்லரசாக உருவானது. ஆனால் 1990களின் முற்பகுதியில் சோவியத் யூனியன் பிளவுபட்டு ரஷ்யா உருவானபோது, அதன் பொருளாதாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருந்தது. தொடர்ந்து வந்த பல தசாப்தங்களில்,அந்த கம்யூனிஸ்ட் நாடு பல பொருளாதார போராட்டங்களை அனுபவித்தது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை - பாகிஸ்தான் சோதனை: வடகொரியாவுக்கு வேதனை.!

ஒவ்வொரு நாளும் 700 மக்களை இழக்கும் ரஷ்யா: பிரம்மிக்கதக்க 13 உண்மைகள்

ரஷ்யா உலகளாவிய வல்லரசாக மீண்டும் முயற்சிக்கும்போது, அது பணமதிப்பு ஏற்ற இறக்கங்கள், குறையும் மக்கள்தொகை மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றை சார்ந்துள்ள பொருளாதாரம் போன்ற பல பிரச்சனைகளை சந்தித்துவருகிறது.

ரிலையன்ஸ் ஜியோ ஜிகா டிவியில் இத்தனை வசதிகளா.!

இரஷ்ய பொருளாதாரம் பற்றிய பிரம்மிக்கதக்க 13 உண்மைகள் இதோ உங்களுக்காக..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

1)ஒவ்வொரு நாளும் 700 மக்களை இழக்கும் இரஷ்யா

ரஷ்ய மக்கள்தொகை ஒரு நாளைக்கு சுமார் 700 பேர், அல்லது ஆண்டுதோறும் 250,000 பேர் என்ற விகிதத்தில் குறைந்து வருகிறது. மூர்மான்ஸ்க் போன்ற சில நகரங்கள், சோவியத் யூனியன் பிளவுபட்டதில் இருந்து 30% க்கும் அதிகமான மக்கள் தொகை சரிவு சந்தித்துள்ளன.

காலநிலை நில அமைப்பு மாற்றம் குடியேற்றவிகதம் குறைதல், சுகாதார மற்றும் உணவு விதிமுறைகளை செயல்படுத்துவதில் அரசாங்கத்தின் தோல்வி ஆகியவை இதற்கு காரணமாக இருக்கும் நிலையில், இதுதொடர்த்தால் வரும் ஆண்டுகளில் இரஷ்ய பொருளாதாரத்தை நிச்சயம் பாதிக்கும்.

2)460 பில்லியன் டாலருக்கு அதிகமான இருப்பு நிதி

ரஷ்யாவிடம்460 பில்லியன் டாலர் அளவிற்கு இருப்புநிதி உள்ள நிலையில், கடன் அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 29% மற்றும் 15.9 மாத இறக்குமதிக்கு ஈடாக உள்ளது.

விஞ்ஞானத்தால் கூட விளக்க முடியாத 9 மர்மான நிகழ்வுகள்!

இந்த அடிப்படை பொருளாதார புள்ளிவிவரங்கள் மூலம் ரஷ்யாவின் பொருளாதார வளர்ச்சி 1.5% என்ற குறைந்த விகிதத்தில் இருந்தாலும், உலகளாவிய அதிர்ச்சிகளை தாங்கிக்கொள்ளும் என நம்புகின்றனர் வல்லுநர்கள்.

3) சோவியத் யூனியன் உடைந்தபிறகு 45% சரிந்த ரஷ்ய பொருளாதாரம்

1991 ல் சோவியத் பிளவை தொடர்ந்து பொருளாதார சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதால், 1989 முதல் 1998 வரை ரஷ்ய உற்பத்தி 45% வீழ்ச்சியடைந்தது, . 2000 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, அதன் முந்தைய சரிவு அளவில் 30% மற்றும் 50% வரை இருந்தது.

பல காரணிகள் பிந்தைய மாற்றங்களின் மந்தநிலைகளுக்கு காரணமாக இருந்தாலும், இது மோசமான பொருளாதார கொள்கைகளுடன் ஒரு குழப்பமான நேரத்தை உருவாக்கியது.

4) ரஷ்யாவின் ஏற்றுமதிகளில் 59% எண்ணெய் மற்றும் எரிவாயு

எண்ணெய் வளமிக்க ரஷ்யாவின் பொருளாதாரம் அதையே பெரிதும் நம்பி உள்ளது. கடந்த ஆண்டு இறுதியில், ரஷ்ய எண்ணெய் உற்பத்தி எப்போதும் இல்லாதவகையில் ஒரு நாள் 11.16மில்லியன் பேரல்களாக இருந்தது. 2017 ஆம் ஆண்டு ரஷ்யாவின் ஏற்றுமதியில் 59% மற்றும் அதன் மொத்த வருவாயில் 25% எரிவாயுவால் கிடைத்தது.

5)வறுமையில் வாழும் 13% இரஷ்யா

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடந்த ஆண்டு தனது தேசத்திற்கான உரையில், தற்போது வ 13 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் மீது வறுமை தாக்கத்தை ஏற்படுத்தியதாக, அதை பாதியாக குறைப்போம் எனவும் தெரிவித்தார். அதிகாரப்பூர்வ மாநில புள்ளிவிவரங்களின் படி வறுமைகோட்டிற்கு கீழ் 19.3 மில்லியன் ரஷ்யர்கள் உள்ளனர். சோவியத் யூனியன் பிளவின்போது 35%ஆக இருந்த வறுமை தற்போது பெருமளவில் குறைந்துள்ளது.

6)70 க்கும் மேற்பட்ட பில்லியனர்கள் உள்ள இரஷ்யா

ரஷ்யாவில் பொருளாதார சமத்துவமின்மை அதிகமாக உள்ளது மற்றும் மாஸ்கோவும் உலகளாவிய நகரங்களின் பட்டியலில் மிக அதிகமான பில்லியன்களுடன் முதலிடத்தில் உள்ளது. இப்பொழுது 70 க்கும் அதிகமான பில்லயனர்கள் இரஷ்யா முழுவதும் உள்ளனர். கம்யூனிஸ்ட் பொருளாதாரத்திலிருந்து வெளியே வந்ததால் நாட்டில் ஊழல் அதிகரித்த 1990 களில் பல பில்லியனர்கள் தங்கள் செல்வத்தை பெற்றனர்.

7) பத்தாண்டுகளில் 50% மதிப்பு குறைந்த ரஷ்யாவின் நாணயம் ரூபிள்

ரஷ்ய பொருளாதாரம் 2014 முதல் 2017 வரை நிலவிய குறிப்பிடத்தக்க நிதி நெருக்கடியால் பாதித்ததன் விளைவாக, அதன் ரூபிள் நாணயத்தின் மதிப்பு பாதியாக குறைந்தது. கடந்த ஆண்டு ரஷ்யாவின் மத்திய வங்கி அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபிள் மதிப்பு இரண்டாண்டுகளில் இல்லாத வகையில் 69.40 என குறைந்ததற்கு அமெரிக்காவை குற்றஞ்சாட்டியது. 2013 ஆம் ஆண்டு டாலருக்கு நிகரான ரூபிள் மதிப்பு 31 ஆக இருந்தது.

6 புதிய நீண்ட நாள் பிளானை அறிவித்து அதிரவிட்ட ஏர்டெல் டிஜிட்டல் டிவி.!

8)ரஷ்யாவில் சராசரி மாத ஊதியம் $ 670

ரஷ்யா பொருளாதார உற்பத்தியின் அடிப்படையில் டாப் 10 நாடுகளில் உள்ளது. ஆனால் உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது அதிக மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகமாக இருந்தாலும், சராசரி மாத ஊதியம் $ 670 அல்லது 42,413 ரூபிள் ஆகும்.

2016 ல் இது 437டாலராக இருந்த நிலையில், கிட்டத்தட்ட 50% அதிகரித்துள்ளது.

ரஷ்யர்கள் 2018 ஐ காட்டிலும் 2013 ஆம் ஆண்டில் 40% அதிகமான பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்க முடிந்தது என்பதால், ரூபிளின் நிலையில்லா தன்மையால் ரஷ்யர்களின் ஊதியங்கள் பெருமளவில் அதிகரித்தது.

9) இரஷ்ய பர்னிச்சர் சந்தையில் 20% வைத்திருக்கும் ஐகியா

ஸ்வீடிஷ் சூப்பர்ஸ்டார் நிறுவனமான ஐகியா 2000 ஆம் ஆண்டில் ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் தனது முதல் அங்காடியை திறந்த நிலையில், விரைவில் அது டாப் கடைகளில் ஒன்றாக ஆனது. அடுத்த 18 ஆண்டுகளில் ஐகியா மேலும் இரு கடைகளை மாஸ்கோவிலும் நாடு முழுவதும் மொத்தம் 14 கடைகளையும் திறந்துள்ளது. ரஷ்யர்கள் தங்கள் பணத்தை மேலும் நீட்டிக்கும் வகையிலா, ஐகியா இப்போது ரஷ்ய பர்னிச்சர் சந்தையில் 20%ஐ வைத்துள்ளது.

10)கடந்த 20 ஆண்டுகளில் 50%குறைந்த வோட்கா நுகர்வு

2000வது ஆண்டின் துவக்கத்தில் ரஷ்யர்கள் 214.6 மில்லியன் டெகா லிட்டர் ஓட்கா அதாவது 567 மில்லியன் கேலன்கள் வாங்கினர்.

2015 ஆம் ஆண்டில், அந்த எண் 100 மில்லியன் டெகா லிட்டர்களாக குறைந்தது. அதே நேரத்தில் ஷாம்பெயின் நுகர்வு 18.3 மில்லியன் டெகா லிட்டரில் இருந்து 23.6 மில்லியனுக்கு உயர்ந்துள்ளது.

11) 315000 டன் ஆஸ்பெஸ்டாஸ் தயாரித்த இரஷ்யா

இரஷ்ய நகரான அஸ்பெஸ்ட் பெயருக்கேற்ப ஆஸ்பெஸ்டோஸ் -ஐ பெருமளவில் உற்பத்தி செய்கிறது.இதனால் பல்வேறு சுகாதார பாதிம்புகள் இருந்தாலும்,கடந்தாண்டை காட்டிலும் இந்த ஆண்டு ஆஸ்பெஸ்டோஸ் உற்பத்தி அதிகரித்தது.315000 டன் ஆஸ்பெஸ்டாஸ் தயாரித்த நிலையில், அதில் 80% வெளிநாடுகளில் விற்கப்பட்டுள்ளது.

12) ஜிம்பாப்வே வைர உற்பத்தியில் கால் பில்லியன் டாலர் முதலீடு செய்த இரஷ்யா

பனிப்போரின் போது அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் ஆசியாவில் செல்வாக்கு செலுத்த போட்டியிட்டது போல, இப்போது ரஷ்யா தனது பார்வையை ஆப்பிரிக்காவை நோக்கி திருப்பியுள்ளது. ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை அந்த கண்டத்தில் ஆதிக்கம் செலுத்த பெரும் முதலீடுகளை செய்துள்ளன.

ஜனவரி மாதம் ரஷ்யா ஜிம்பாப்வே வைர துறையில் $ 267 மில்லியன் முதலீடு செய்தது.

13) குளிர்கால ஒலிம்பிக்கிற்காக 50பில்லியன் டாலர் செலவளித்த இரஷ்யா

குளிர்கால ஒலிம்பிக்ஸ் ரஷ்ய நகரமான சோஷியில் நடைபெறவதால்,அதற்கு அந்நகரம் தயாராவதற்கு 50 பில்லியன் டாலர் செலவழித்தது.இந்த முதலீடு புதிய விளையாட்டு அரங்கங்கள் மற்றும் ஹோட்டல்களின் கட்டுமானத்திற்கு மட்டுமல்லாமல், சாலைகள், பாலங்கள், குறைந்த அழுத்த எரிவாயு குழாய்கள் மற்றும் பிற உள்கட்டமைப்பு திட்டங்கள் ஆகியவற்றை கொண்டிருக்கிறது.

2018 இல் ரஷ்யா பிஃபா உலகக் கோப்பையை நடத்திய போது, 11 பில்லியன் டாலரை கட்டுமானம் மற்றும் தயாரிப்பு வேலைக்காக செலவளித்தது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
13 mind-blowing facts about Russia's economy: Read more about this in Tamil GizBot

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more