Home
News

iPhone பிரியர்களுக்கு 2 குட் நியூஸ்.. 12GB ரேம்.. LPDDR5X மெமரி.. அடிமட்டத்துக்கு இறங்கும் Apple!

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் ஐபோன் (iPhone) மாடல்களில் (பேட்டரி கெப்பாசிட்டிக்கு அடுத்தபடியாக) காணப்படும் மிகப்பெரிய குறை ஒன்று உள்ளதென்றால் அது - மெமரி பெர்பார்மென்ஸ் (Memory performance) தான். இந்த குறையை முடிவுக்கு கொண்டுவர ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துவிட்டது போல தெரிகிறது

ஆப்பிளின் ஐபோன் 18 சீரீஸ் (iPhone 18 Series) ஆனது மெமரி பெர்பார்மென்ஸில் ஒரு பெரிய முன்னேற்றத்தை அறிமுகப்படுத்தும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சீன மைக்ரோபிளாக்கிங் தளமான வெய்போவில், நம்பகமான லீக்கர் ஆன டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்த தகவல்களின்படி, ஆப்பிள் நிறுவனம் 2026 மாடல்களை அதிக திறன் கொண்ட சிக்ஸ்-சேனல் LPDDR5X மெமரி கான்ஃபிகிரேஷனில் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடிமட்டத்துக்கு இறங்கும் Apple.. iPhone பிரியர்களுக்கு 2 குட் நியூஸ்!

இது எதிர்காலத்தில் அறிமுகமாகும் ஏஐ அம்சங்கள் மற்றும் மல்டி-டாஸ்கிங்க்கான மெமரி பேண்ட்வித்-ஐ கணிசமாக அதிகரிக்கும். மெமரி பேண்ட்வித்-ஐ விரிவுபடுத்துவது வேகமான ஆப் ஸ்விட்ச்சிங், மென்மையான மல்டிடாஸ்கிங் மற்றும் கணிசமாக மேம்படுத்தப்பட்ட ஏஐ திறன்களை செயல்படுத்த வேண்டும். கடைசியாக ஆப்பிள் அதன் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் உத்தியில் அதிக அளவில் முதலீடு செய்யக்கூடும்!

டிஎஸ்எம்சி-யின் (TSMC) மூன்றாம் தலைமுறை 3என்எம் செயல்முறையை பயன்படுத்தி உருவாக்கப்படும் என்று கூறப்படும் ஏ20 ப்ரோ சிப்புடன் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் ஐபோன் 18 சீரீஸில் உள்ள ப்ரோ மாடல்கள், அதாவது ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் இன்னும் அதிக நன்மைகளை பெறும்.

இதுபோல ஐபோன் 17 சீரிஸில் ஏதேனும் மாற்றங்களை எதிர்பார்க்கலாமா? ஆப்பிள் நிறுவனத்தால் அதன் விநியோகச் சங்கிலி பற்றாக்குறையை சமாளிக்க முடிந்தால், ஐபோன் 17 சீரீஸில் உள்ள அனைத்து மாடல்களிலும் தரநிலையாக 12ஜிபி ரேம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம் 2025 ஆம் ஆண்டிற்கான மிகவும் தீவிரமான வன்பொருள் மேம்படுத்தல்களுக்கு களம் அமைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் 17 சீரீஸ்-ல் புதிய ஏர் மாடல்: ஆப்பிளின் அடுத்த ஐபோன் சீரிஸ் ஆன ஐபோன் 17 சீரீஸின் கீழ் - ஐபோன் 17ஏர் என்கிற மாடல் முற்றிலும் புதிய மாடல் ஆக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஐபோன் 17 சீரீஸின் கீழ் இந்த முறை நான்கு மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது - ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்.

வடிவமைப்பில் சில மாற்றங்கள், கேமராக்கள் மற்றும் டிஸ்பிளேக்களில் சில மேம்பாடுகள் என ஐபோன் 16 சீரீஸில் இருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; குறிப்பாக ஐபோன் 17 ஏர் ஆனது இதுவரை இல்லாத அளவுக்கு மெலிதான ஐபோன் மாடலாக இருக்கும் என்றும், இது 5 மிமீ முதல் 6.25 மிமீ வரை தடிமன் கொண்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இது 6.6 இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஸ்க்ரீன் சைஸ்-ன் அடிப்படையில் இந்த மாடல் ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல்களுக்கு இடையில் வைக்கப்படும். இதற்கிடையில், ஐபோன் 17 மாடலானது ஐபோன் 16 மாடலின் டிசைனை தக்கவைத்து கொள்ளலாம். இருப்பினும் இது இன்னும் திடமான, ஆன்டி ரெஃப்ளெக்டிவ் மற்றும் ஸ்க்ராட்ச் ரெஸிஸ்டன்ட் கோட்டிங்கை பெறும். மேலும் நான்கு மாடல்களுமே ஆல்வேஸ் ஆன் செயல்பாட்டுடன் 120ஹெர்ட்ஸ் ப்ரோமோஷன் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேமரா செட்டப்பில் ஒரு பெரிய அப்டேட்டை எதிர்பார்க்கலாம். ஐபோன் 17 ஏர் மாடலானது ஹாரிசாண்டல் மாட்யூலில் சிங்கிள்-லென்ஸ் கேமராவுடன் வரக்கூடும். அதே நேரத்தில் ப்ரோ மாடல்கள் வழக்கமான ஸ்கொயர் பம்பிற்கு பதிலாக ஒரு ரெக்டாங்குலர் அலுமினிய கேமரா பார்-ஐ கொண்டிருக்கலாம். ஆப்பிளின் மற்ற ஐபோன் சீரீஸ்களின் அறிமுகத்தை கருத்தில் கொண்டால், இந்த சீரிஸ் செப்டம்பர் 2025 இல் அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
12GB RAM in iPhone 17 Series Six channel LPDDR5X memory configuration in iPhone 18 Series Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X