1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிமு நாகரீகத்து தொலைபேசி..!

|

சிமு நாகரீகத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய கால தொலைபேசி ஆனது தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் தொடங்கி அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் வரையிலாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சுமார் 1200 முதல் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படும் இந்த பண்டைய தொலைபேசி பற்றிய மேலும் பல தகவல்களை கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

சான் சான் :

சான் சான் :

இந்த பண்டைய கால தொலைபேசியானது பெரு நாட்டில் உள்ள சான் சான் என்ற இடுபாட்டு பகுதியில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளது.

அரைக்கோள தொலைபேசி :

அரைக்கோள தொலைபேசி :

கண்டுபிடிக்கப்பட்ட இந்த தொலைபேசியானது மேற்கத்திய அரைக்கோள தொலைபேசி தொழில்நுட்பத்தின் அடித்தளமாகவும் ஒரு முக்கியமான எடுத்துக்காட்டாகவும் பார்க்கப் படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடலோர சிமு நாகரீகம் :

கடலோர சிமு நாகரீகம் :

அதுமட்டுமின்றி பெருவின் ரியோ மோச்சே பள்ளத்தாக்கில் வாழ்ந்த கடலோர சிமு நாகரீகத்து காலத்தில் இது உருவாகியுள்ளது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பழங்குடி சமூகத்தின் உணர்வு :

பழங்குடி சமூகத்தின் உணர்வு :

"இது மிகவும் தனித்துவமான ஒரு கருவியாகும். இதுவரையிலாக ஒன்று மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கருவியானது எழுத்து வடிவம் இல்லாத ஒரு பழங்குடி சமூகத்தின் உணர்வாகும்" என்று கருத்து தெரிவித்துள்ளார் அமெரிக்க இந்திய தேசிய அருங்காட்சியகத்தின் பொறுப்பாளரான ராமிரோ மட்டோஸ்.

'காதலர்கள் தொலைபேசி' :

'காதலர்கள் தொலைபேசி' :

இந்த தொலைபேசியானது, ஒரு அடிப்படை பேச்சு ஒலிபரப்பு சாதனமாக தோன்றுகிறது, கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி 19ஆம் நூற்றாண்டில் பிரபலமான 'காதலர்கள் தொலைபேசி' (இரண்டு கேன்களை சரம் மூலம் இணைத்து இரண்டு பக்கமும் தொடர்பு பரிமாற்றம் செய்துகொள்ளும் தொலைபேசி)..!

பருத்தி- கயிறு :

பருத்தி- கயிறு :

மிகவும் உறுதியான இந்த சிமு நாகரீகத்து சாதனமானது இரண்டு பூசணி ஓடு கொண்டு உருவாக்கப்பட்டு நீளமான பருத்தி- கயிறு மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

75 அடி நீளம் :

75 அடி நீளம் :

இரண்டு பூசணி ஓடும் சுமார் 8.9 சென்டிமீட்டர் நீளத்திலும், அதை இணைக்கும் பருத்தி கயிறானது சுமார் 75 அடி நீளமும் கொண்டு அமைக்கபெற்றுள்ளது.

மின்சாரம் அல்லாத சரம் :

மின்சாரம் அல்லாத சரம் :

கிட்டத்தட்ட இதே போன்ற அமைப்பு தான், தொலைபேசி உருவாக்க ஆராய்ச்சி காலமான 1833-களில் மின்சாரம் அல்லாத சரம் மூலம் உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 மேலும் படிக்க :

மேலும் படிக்க :

பூமி அருகே சுற்றித்திரியும் 230 அடி நீளமுள்ள மர்ம விண்கலம்..!


ஏலியன்கள் தகவல்கள் அனுப்பி 'உள்ளன'..! ஆனால் அவைகள்..?!


நம்மையெல்லாம் 'முட்டாள்' ஆக்கிய 'புத்திசாலிகள்'..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
1,200-year-old telephone, amazing invention of the ancient Chimu civilization. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X