Home
News

சத்தமின்றி End of Life பிரிவில் சேர்க்கப்பட்ட 12 போன்கள்! இனி இந்த Xiaomi, Redmi, Poco மாடலுக்கு என்ன ஆகும்?

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஷாவ்மீ (Xiaomi) அதன் ஷாவ்மீ, ரெட்மி (Redmi) மற்றும் போக்கோ (Poco) பிராண்டுகளின் கீழ் அறிமுகம் செய்த பல பிரபலமான மாடல்களை "சத்தம் இல்லாமல்" ஏஓஎல் பிரிவில் (EOL Category) சேர்த்துள்ளது. ஏஓஎல் என்பது எண்ட் ஆப் லைஃப் (End-of-Life) என்பதன் சுருக்கமாகும்.

எண்ட் ஆப் லைஃப் என்றால் என்ன (What is Mean end of life in Smartphones)? இந்த பிரிவில் சேர்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு என்ன ஆகும் (What Happened to Smartphones Added in End of Life Category)? தற்போது இதன்கீழ் என்னென்ன ஷாவ்மீ, ரெட்மி மற்றும் போக்கோ ஸ்மார்ட்போன்கள் சேர்க்கப்பட்டு உள்ளன? இதோ விவரங்கள்:

சத்தமின்றி End of Life பிரிவில் சேர்க்கப்பட்ட 12 போன்கள்!

எண்ட் ஆப் லைஃப் என்றால் என்ன? ஷாவ்மீ நிறுவனத்தின் படி, எண்ட் ஆப் லைஃப் பட்டியலில் சேர்க்கப்படும் ஸ்மார்ட்போன்களுக்கு எந்த வகையான மென்பொருள் ஆதரவும் கிடைக்காது. அதாவது ஹைப்பர் ஓஎஸ் (HyperOS) அல்லது ஆண்ட்ராய்டு (Android) வெர்ஷன் மேம்படுத்தல்கள் மற்றும் செக்யூரிட்டி பேட்ச்கள் என எதுவுமே கிடைக்காது!

இந்த பிரிவில் சேர்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு என்ன ஆகும்? இன்னும் "ஓப்பன்" ஆக கூறுவதானால், இந்த ஸ்மார்ட்போன்கள் அதிகாரப்பூர்வமாக ஷாவ்மீயின் கீழ் இருக்காது. இந்த மாடல்களை பாதிக்கும் பாதிப்புகள் குறித்த அறிக்கைகளுக்கு ஷாவ்மீ பதிலளிக்காது. இந்த போன்களில் இனி ஆண்ட்ராய்டு வெர்ஷன் மேம்படுத்தல்கள், செக்யூரிட்டி பேட்ச்கள் அல்லது பக் திருத்தங்கள் எதுவும் கிடைக்காது.

தற்போது இதன்கீழ் என்னென்ன ஷாவ்மீ, ரெட்மி மற்றும் போக்கோ ஸ்மார்ட்போன்கள் சேர்க்கப்பட்டு உள்ளன?
1. ஷாவ்மீ எம்ஐ 11 அல்ட்ரா (Xiaomi Mi 11 Ultra)
2. ஷாவ்மீ எம்ஐ 11எக்ஸ் ப்ரோ (Xiaomi Mi 11X Pro)
3. ஷாவ்மீ எம்ஐ 11ஐ (Xiaomi Mi 11i)
4. ஷாவ்மீ சிவி 1எஸ் (Xiaomi Civi 1S)

5. ரெட்மி கே50 ப்ரோ (Redmi K50 Pro)
6. ரெட்மி கே 50 (Redmi K50)
7. ரெட்மி கே40 ப்ரோ பிளஸ் (Redmi K40 Pro+)
8. ரெட்மி கே40 ப்ரோ (Redmi K40 Pro)

9. ரெட்மி நோட் 11 ப்ரோ (Redmi Note 11 Pro)
10. ரெட்மி 10 2022 (Redmi 10 2022)
11. போக்கோ எப்4 ஜிடி (Poco F4 GT)
12. போக்கோ எம்4 ப்ரோ 5ஜி (Poco M4 Pro 5G)

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ஷாவ்மீ நிறுவனம் ஆனது மிகவும் எதிர்பார்க்கப்படும் ஹைப்பர் ஓஎஸ் 2.2 அப்டேட்டை (HyperOS 2.2 Update) ரிலீஸ் செய்ய "கிட்டத்தட்ட" தயாராக உள்ளது. ஹைப்பர் ஓஎஸ் 2.2 அப்டேட்டின் டின் அதிகாரப்பூர்வ சேஞ்ச்லாக் இன்னும் "மறைக்கப்பட்டு" உள்ள நிலையில், சிஸ்டம் முழுவதுமாக பல மேம்பாடுகள் மற்றும் சில யுஐ அப்டேட்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம். கூடவே சில புதிய அம்சங்களையும், ஷாவ்மீ ஈகோசிஸ்டமின் சிறந்த ஒருங்கிணைப்பையும் நாம் காணலாம்.

எந்தெந்த ஷாவ்மீ மற்றும் போக்கோ ஸ்மார்ட்போன்களுக்கு ஹைப்பர் ஓஎஸ் 2.2 அப்டேட் கிடைக்கும்?
1. போக்கோ எப்7 (POCO F7) / ரெட்மி டர்போ 4 ப்ரோ (REDMI Turbo 4 Pro)
2. போக்கோ எம்7 ப்ரோ 5ஜி (POCO M7 Pro 5G) / ரெட்மி நோட் 14 (Redmi Note 14)
3. போக்கோ எக்ஸ்7 (POCO X7) / ரெட்மி நோட் 14 ப்ரோ (Redmi Note 14 Pro)
4. ரெட்மி கே70 (Redmi K70) / போக்கோ எப்6 ப்ரோ (POCO F6 Pro)
5. ரெட்மி கே70இ (Redmi K70E) / போக்கோ எக்ஸ்6 ப்ரோ (POCO X6 Pro)

6. ஷாவ்மீ 14 (Xiaomi 14)
7. ஷாவ்மீ 14 ப்ரோ (Xiaomi 14 Pro)
8. ஷாவ்மீ 14 அல்ட்ரா (Xiaomi 14 Ultra)
9. ஷாவ்மீ 15 (Xiaomi 15)
10. ஷாவ்மீ 15 ப்ரோ (Xiaomi 15 Pro)
11. ஷாவ்மீ 15 அல்ட்ரா (Xiaomi 15 Ultra)

More from GizBot

Best Mobiles in India

English summary
12 Xiaomi Redmi Poco Smartphones added in End of Life No longer Supported category Check the List
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X