ஆதாரங்கள் : எதிர்காலத்தை கணித்த 'ஸ்டார் ட்ரெக்' (1979)..!
இன்னும் கொஞ்சம் காலம் கழித்து 'இது' நடக்கும் என்று யாராவது கணித்து சொன்னால் 'ஒரு பயலும் நம்ப மாட்டான்', ஆனால் சொன்னபடியே நடக்கும் போது தான் நம்ப மறுத்தவர்களின் 'டவுசர் கிழியும்'..!
நடந்து முடிந்த, கடந்த காலத்தை நினைவில் வைத்துக் கொள்ளுவதே மிக சிரமம் என்ற நிலையில், எதிர்காலத்தை கணிப்பது என்பது சாதாரண விடயம் இல்லை என்பதுதான் நிதர்சனம். அப்படியாக, மிகவும் அசாதாரணமான முறையில் எதிர்காலத்தில் இதெல்லாம் சாத்தியம் என்பதை கணித்து, அவைகளை காட்சிகளில் திணித்த திரைப்படம் தான் 1979-ஆம் ஆண்டு வெளியான 'ஸ்டார் ட்ரெக்' (Star Trek).!

சைபார்க்ஸ் :
2002-ஆம் ஆண்டு தான் ஆர்கானிக் மற்றும் பயோமெட்ரானீக்ஸ் ஆகிய இரண்டும் கலந்து உருவாக்கப்படும் செயற்கை உடல் பாகங்கள் (சைபார்க்ஸ்) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஆனால், அதை 1979-ஆம் ஆண்டே ஸ்டார் ட்ரெக் காட்சிப்படுத்தியிருந்தது.

ஐயன் என்ஜீன்கள் :
ஆழமான விண்வெளி ஆய்வுகளை நிகழ்த்த தற்போது நாசா பயன்படுத்தும் ஐயன் ப்ரபல்ஷன் (Ion Propulsion) ஆனது ஸ்டார் ட்ரெக் திரைப்படத்தில் இருந்து உருவான ஒரு யோசனை ஆகும்.

செல்போன் :
கையடக்க செல் போன்களின் உருவக்கத்திற்கு அடித்தளம் போட்டதும் ஸ்டார் ட்ரெக் திரைப்படம் தான்..!

ட்ரைகார்டர் :
சென்சார் ஸ்கேனிங், தரவு பகுப்பாய்வு (data analysis), மற்றும் பதிவு செய்ய - போன்ற பல வேலைகளை செய்யும் ட்ரைகார்டர்கள் (Tricorders) ஸ்டார் ட்ரெக் திரைப்படத்தை பார்த்து தான் உருவாக்கம் பெற்றனர்.

கூகுள் கிளாஸ் :
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் கிளாஸ்-ன் முன்னோட்டம், ஸ்டார் ட்ரெக் திரைப்பட யுத்த காட்சி ஒன்றில் அரங்கேற்றப்பட்டது.

மெடிக்கல் இமேஜிங் :
ஆக்கிரமிப்பு இல்லா (அதாவது வலியில்லா) மருத்துவப் படிமவியல் (Non-Invasive Medical Imaging) தொழில்நுட்பத்திற்கு விதைப்போட்டது ஸ்டார் ட்ரெக் திரைப்படம் தான்.

ஃப்ளாட் ஸ்க்ரீன் :
மாபெரும் எல்இடி-க்களை தற்போது எங்கு வேண்டுமானாலும் பார்க்க முடியும். ஆனால் 1979-களில் ஸ்டார் ட்ரெக் திரைப்படத்தில் மட்டுமே காண முடியும்

டாப்ளேட் :
நம்பித் தான் ஆக வேண்டும், ஏனெனில் ஆதாரம் இருக்கிறது. 'டாப்ளேட்'களை முதன்முதலில் காட்சிப்படுத்தியது ஸ்டார் ட்ரெக் தான்..!

ப்ளூடூத் இயர் பிஸஸ் :
ப்ளூடூத் மூலம் தொடர்பில் இணைந்து பேசிக்கொள்ள கூடிய ப்ளூடூத் இயர்பிஸஸ் கருவிகளை (Bluetooth Earpieces) அசாதாரணமான முறையில் ஸ்டார் ட்ரெக் காட்சிப்படுத்தியிருந்தது.

ஹைப்போஸ்ப்ரே :
ஊசியின் பயன்பாடு இன்றி மருந்தை உடலுள் செலுத்தும் முறையான ஹைப்போஸ்ப்ரே (Hypospray`) மருத்துவ தொழில்நுட்பத்தின் ஆதாரம் ஸ்டார் ட்ரெக் தான்..!

ட்ராக்டர் பீம் :
ஆற்றல் மிக்க பீம்களை (hypothetical beam of energy) கொண்டு பொருட்களை நகர்த்தும் அறிவியல் புனைகதை தொழில்நுட்பமான 'ட்ராக்டர் பீம்'தனை (Tractor Beam) அறிமுகம் செய்தது ஸ்டார் ட்ரெக் தான்..!

கோல்ட்-ப்ரஸ்டு லேட்டினம் :
தற்கால இ-கோல்ட் (கோல்ட்-ப்ரஸ்டு லேட்டினம் - Gold-Pressed Latinum) முறையை தனது செலாவணியாகும் பணமாக காட்சிப்படுத்தியிருந்தது ஸ்டார் ட்ரெக்..!

மேலும் படிக்க :

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications