மாதிரி இல்ல ஒரிஜினல்- பூமிக்கு வந்துட்டாங்க: 12 நாட்கள் விண்வெளியில் வெற்றிகரமாக நடந்த படப்படிப்பு

|

விண்வெளி சுற்றுப்பாதையில் முதல் முதலாக திரைப்படத்தின் படப்பிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இதற்காக விண்வெளிக்கு சென்ற படக்குழுவினர் 12 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பினர்.

விண்வெளி நோக்கி பறந்த விண்கலம்

விண்வெளி நோக்கி பறந்த விண்கலம்

நடிகை யூலியா பெரெசில்ட், இயக்குனர் கிளிம் ஷிபென்கோ மற்றும் விண்வெளி வீரர் ஆன்டன் ஷ்கேப்லெரோவ் ஆகியோருடன் சோயுஸ் எம்எஸ்-19 விண்கலம் விண்வெளி நோக்கி பறந்தது. ரஷ்யாவின் புகழ் பெற்ற இயக்குனர்களில் ஒருவர் கிளிம் ஷிபென்கோ, இவர் தனது திரைப்படத்தை செட் ஏதும் போடாமல் நேரடியாக விண்வெளிக்கு சென்று படமாக்க இருக்கிறார். சுற்றுப்பாதையில் படமாக்கப்படும் முதல் திரைப்படம் இதுவாகும். இந்த படத்திற்கு தி சேலஞ்ச் என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் கதை அம்சம் குறித்து பார்க்கையில் இது விண்வெளி ஏற்படும் மருத்துவ நெருக்கடியை மையமாக வைத்து இருக்கும் என கூறப்படுகிறது.

ரஷ்ய நடிகையும் திரைப்பட இயக்குனரும்

ரஷ்ய நடிகையும் திரைப்பட இயக்குனரும்

ரஷ்ய நடிகையும் திரைப்பட இயக்குனரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 12 நாட்கள் தங்கியிருந்து அங்கு படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். விண்வெளியில் படப்பிடிப்பு நிகழ்த்தப்பட்ட முதல் திரைப்படம் இதுவாகும். இந்த படத்தில் இடம்பெறும் ஏணைய காட்சிகள் விண்வெளியில் தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது.

சிறிய புன்னகையுடன் வெளிவந்த இயக்குனர்

இயக்குனர் ஷிபென்கோ கவலையாக இருப்பது போல் தோன்றினார். இருப்பினும் அவர் காப்ஸ்யூலை விட்டு வெளியேறும் போது சிறிய புன்னகையுடன் இருந்தார். கேமராக்களுக்கு கையை அசைத்துபடி மருத்துவ பணியாளர்களால் பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டார். அதேபோல் இந்த திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் பெரெசில்ட், இவர் 3000 விண்ணப்பதாரர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் காப்ஸ்யூலில் இருந்து கைதட்டல் மற்றும் பூங்கொத்துடன் வெளியே வந்தார்.

வெளியே வருவதற்கு மனமே இல்லை

விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெளியே வருவது வருத்தமாக இருப்பதாக நடிகை குறிப்பிட்டார். 12 நாட்கள் அதிகம் என்று முன்னதாக தோன்றியது ஆனால் இந்த நாட்கள் முடிந்ததும் வெளியே வருவதற்கு மனமே இல்லை என ரஷ்ய தொலைக்காட்சிக்கு கூறினார். வாழ்க்கையின் ஒரு முறை அனுபவம் என அவர் குறிப்பிட்டார்.

சுற்றுப்பாதையில் படமாக்கப்படும் முதல் திரைப்படம்

நடிகை யூலியா பெரெசில்ட், இயக்குனர் கிளிம் ஷிபென்கோ மற்றும் விண்வெளி வீரர் ஆன்டன் ஷ்கேப்லெரோவ் ஆகியோருடன் சோயுஸ் எம்எஸ்-19 விண்கலம் விண்வெளி நோக்கி பறந்தது. ரஷ்யாவின் புகழ் பெற்ற இயக்குனர்களில் ஒருவர் கிளிம் ஷிபென்கோ, இவர் தனது திரைப்படத்தை செட் ஏதும் போடாமல் நேரடியாக விண்வெளிக்கு சென்று படமாக்கியுள்ளார். சுற்றுப்பாதையில் படமாக்கப்படும் முதல் திரைப்படம் இதுவாகும். இந்த படத்திற்கு தி சேலஞ்ச் என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் கதை அம்சம் குறித்து பார்க்கையில் இது விண்வெளி ஏற்படும் மருத்துவ நெருக்கடியை மையமாக வைத்து இருக்கும் என கூறப்படுகிறது.

மிஷன் இம்பாசிபிள் நடிகர் டாம் க்ரூஸ்

கடந்த ஆண்டு மிஷன் இம்பாசிபிள் நடிகர் டாம் க்ரூஸ், நாசா மற்றும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் மூலம் ஹாலிவுட் திரைப்பட படப்பிடிப்பு திட்டத்தை ரஷ்ய குழு தற்போது செய்து காட்டியிருக்கிறது. நடிகை யூலியா பெரெசில்ட் (37) திரைப்பட இயக்குனர் கிளிம் ஷிபென்கோ (38) ஆகியோருடன் கஜகஸ்தானில் உள்ள பைகானூர் ஏவுதளத்தில் இருந்து சோயூஸ் விண்கலம் மூலம் விண்வெளிக்கு பறந்தனர்.

சோயுஸ் விண்கலம் மூலம் பயணம்

சோயுஸ் விண்கலம் மூலம் பயணம்

இதற்கு படக் குழுவினர் சோயுஸ் விண்கலம் மூலம் பயணம் செய்தனர். விண்வெளி வீரரை காப்பாற்ற ஐஎஸ்எஸ்-க்கு ஒரு பெண் அனுப்பப்படுகிறார் என்ற காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. திரைப்படத்தின் பட்ஜெட் உட்பட பிற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. விண்வெளி வீரரை காப்பாற்ற ஐஎஸ்எஸ்-க்கு அனுப்பப்பட்ட ஒரு பெண் அறுவை சிகிச்சை நிபுணரை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல் ஐஎஸ்எஸ்-ல் இருக்கும் இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்கள் இந்த படத்தில் சிறிய வேடங்களில் நடித்ததாகவும் கூறப்படுகிறது.

12 நாட்கள் படப்பிடிப்பு

12 நாட்கள் படப்பிடிப்பு

12 நாட்கள் படப்பிடிப்புக்கு பிறகு பூமிக்கு திரும்பிய படக்குழுவினர் உடன் ஓலெக் நோவிட்ஸ்கி என்ற விண்வெளி வீரரும் தனது 190 நாட்கள் விண்வெளி பயணத்தை முடித்தி திரும்பினார். இந்த காட்சி படத்தில் துல்லியமாக பொருந்தும் பட்சத்தில் விண்வெளி தொடர்பான கதைத்தளம் அமைக்கப்பட்டு படக்குழுவினர் விண்வெளிக்கு செல்லத் தொடங்குவார்கள் என கூறப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
12 Shoot Over in Space: Actress, Director Reached Earth After Complete Shooting in ISS

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X