இரவோடு இரவாக 12 Jio திட்டங்கள் நீக்கம்; இதோ முழு பட்டியல்! வேலையை ஆரம்பித்த அம்பானி?

|

எந்த விதமான முன்னறிவிப்பையும் வெளியிடாமல் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம், மொத்தம் 12 ரீசார்ஜ் திட்டங்களை அதன் சேவையில் இருந்து நீக்கி உள்ளது!

ஜியோவின் இந்த திடீர் நடவடிக்கைக்கு என்ன காரணம்? நீக்கப்பட்ட திட்டங்களின் விவரங்கள் என்ன? என்கிற விவரங்கள் இதோ:

நிறுத்தப்பட்ட அனைத்துமே ப்ரீபெய்ட் திட்டங்கள்!

நிறுத்தப்பட்ட அனைத்துமே ப்ரீபெய்ட் திட்டங்கள்!

ஒரு சமீபத்திய அறிக்கையின்படி, ஜியோ நிறுவனம் அதன் சேவையின் கீழ் அணுக கிடைத்த 12 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை நிறுத்தியுள்ளது.

'சைலன்ட்' ஆக நிறுத்தப்பட்டுள்ள இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் ஆனது ரூ.151 முதல் தொடங்கி ரூ.3,119 வரை செல்கின்றன.

Airtel, Jio யூசர்களே மனச தேத்திக்கோங்க.. உண்மையை அம்பலப்படுத்திய ஓபன் சிக்னல்!Airtel, Jio யூசர்களே மனச தேத்திக்கோங்க.. உண்மையை அம்பலப்படுத்திய ஓபன் சிக்னல்!

இன்னொரு ஒற்றுமை!

இன்னொரு ஒற்றுமை!

நீக்கப்பட்ட 12 ஜியோ திட்டங்களும் ப்ரீபெயிட் திட்டங்கள் ஆகும் என்கிற ஒற்றுமையை தவிர்த்து, இன்னொரு ஒற்றுமையையும் கொண்டுள்ளன.

அது என்னவென்றால், இவைகள் அனைத்துமே டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்கும்ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் ஆகும்.

இனிமேல் 2 திட்டங்கள் மட்டுமே!

இனிமேல் 2 திட்டங்கள் மட்டுமே!

இந்த நடவடிக்கைக்கு முன், ஜியோவின் பெரும்பாலான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் ஆனது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவை இலவசமாக வழங்கியது.

ஆனால் இப்போது, இந்​​நிறுவனம் தனது போர்ட்ஃபோலியோவின் கீழ் வெறும் இரண்டு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் கீழ் மட்டுமே டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்கிறது.

10 பைசா செலவு இல்லாமல் 'ஸ்லோ லேப்டாப்' பிரச்சனையை நீங்களே சரி செய்வது எப்படி?10 பைசா செலவு இல்லாமல் 'ஸ்லோ லேப்டாப்' பிரச்சனையை நீங்களே சரி செய்வது எப்படி?

அந்த இரண்டுமே ரூ.1000 க்கு மேல்!

அந்த இரண்டுமே ரூ.1000 க்கு மேல்!

தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை இலவசமாக வழங்கும் ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலை ரூ 1,499 மற்றும் ரூ.4,199 ஆகும்.

ரூ.1,499-ஐ பொறுத்தவரை, இது 84 நாட்களுக்கு தினமும் 2ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் ஒரு திட்டம் ஆகும். தவிர அன்லிமிடெட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் நன்மைகள், ஜியோ ஆப்ஸ் மற்றும் ஒரு ஆண்டிற்கான Disney+ Hotstar ப்ரீமியம் சந்தா போன்ற நன்மைகளை வழங்குகிறது.

மறுகையில் ரூ 4,199 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் உள்ளது!

மறுகையில் ரூ 4,199 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் உள்ளது!

இது 365 நாட்களுக்கு தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்கும் ஒட்டு திட்டம் ஆகும். கூடுதலாக அன்லிமிடெட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் நன்மைகள், ஜியோ ஆப்ஸ் மற்றும் ஒரு ஆண்டிற்கான Disney+ Hotstar ப்ரீமியம் சந்தா போன்ற நன்மைகளையும் வழங்குகிறது.

உங்கள் போனின் இன்டர்நெட் ஸ்பீட்-ஐ வெறும் 30 நொடிகளில் கண்டுபிடிப்பது எப்படி?உங்கள் போனின் இன்டர்நெட் ஸ்பீட்-ஐ வெறும் 30 நொடிகளில் கண்டுபிடிப்பது எப்படி?

நிறுத்தப்பட்ட 12 திட்டங்கள் இதுதான்!

நிறுத்தப்பட்ட 12 திட்டங்கள் இதுதான்!

மைஸ்மார்ட் ப்ரைஸ் வழியாக வெளியான ஒரு அறிக்கையின்படி, கீழ்வரும் 12 திட்டங்களை தான் ஜியோ நிறுத்தி உள்ளது:

ரூ.151 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் டேட்டா ஆட்-ஆன் ரீசார்ஜ் திட்டம்
ரூ. 333 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரீசார்ஜ் திட்டம்
ரூ.499 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரீசார்ஜ் திட்டம்
ரூ. 555 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் டேட்டா ஆட்-ஆன் ரீசார்ஜ் திட்டம்
ரூ. 583 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரீசார்ஜ் திட்டம்
ரூ. 601 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரீசார்ஜ் திட்டம்

ரூ.659 முதல் ரூ.3199 வரை..!

ரூ.659 முதல் ரூ.3199 வரை..!

ரூ. 659 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் டேட்டா ஆட்-ஆன் ரீசார்ஜ் திட்டம்
ரூ.783 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரீசார்ஜ் திட்டம்
ரூ. 799 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரீசார்ஜ் திட்டம்
ரூ. 1,066 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரீசார்ஜ் திட்டம்
ரூ. 2,999 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரீசார்ஜ் திட்டம்
ரூ. 3119 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரீசார்ஜ் திட்டம்

துப்பாக்கியை தூக்கி கொண்டு ஓடும் சீனாவின் ரோபோட் நாய் - வைரல் வீடியோ!துப்பாக்கியை தூக்கி கொண்டு ஓடும் சீனாவின் ரோபோட் நாய் - வைரல் வீடியோ!

ஜியோ ஏன் இந்த ரீசார்ஜ் திட்டங்களை நிறுத்தியது?

ஜியோ ஏன் இந்த ரீசார்ஜ் திட்டங்களை நிறுத்தியது?

இந்த 12 ரீசார்ஜ் திட்டங்களை ஏன் நிறுத்தபட்டது என்கிற விளக்கத்தை ஜியோ இன்னும் வெளியிடவில்லை. ஆனால் இந்த நடவடிக்கை, அடுத்த ஐபிஎல் சீசனுக்கான ஸ்ட்ரீமிங் உரிமைகளுடன் தொடர்பு கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில், முன்னதாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தான் இந்தியன் பிரீமியர் லீக்கின் ஸ்ட்ரீமிங் உரிமையைக் கொண்டிருந்தது. இப்போது அந்த உரிமைகள் ரிலையன்ஸ்-க்கு சொந்தமான வயாகாம் 18-க்கு கிடைத்துள்ளது.

ஆக.. "இனிமேல் டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் தேவை நமக்கு எதற்கு?" என்று ஜியோ நினைத்து இருக்கலாம்!

Best Mobiles in India

English summary
12 Prepaid Recharge Plans Which Offers Disney Plus Hotstar Removed From Reliance Jio Service Here is Why

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X