அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி, ஜப்பான் முதலிடம்..!

|

நார்வே, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற மிகவும் வளர்ந்த நாடாக இருந்தாலும் சரி, பிற வளரும் நாடாக இருந்தாலும் சரி முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் குறைத்துக் கொள்ளவே கூடாது. அப்படியாக ஒரு நாட்டின் முன்னேற்றத்தை தீர்மானிக்கும் முக்கிய கூறுகள் என்ற பட்டியலில் - தொழில்நுட்பம், ஒரு நிலையான இடத்தை பெற்று விட்டது என்பதே நிதர்சனம்.

ஆதாரங்கள் : அமெரிக்கா நிலாவுக்கு போகவே இல்லயாம்..!?

தொழில்நுட்பம் மூலம் நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது என்பது வளர்ச்சிக்கான ஒரு நல்ல அடையாளம் எனலாம். அப்படியாக 2015- ஆம் ஆண்டின் தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேறிய நாடுகள் பட்டியல் வெளியாகி உள்ளது. அந்த பட்டியலில் மிகவும் எதிர்பார்த்த 'போட்டி' நாடுகளோடு, சில எதிர்பார்க்காத நாடுகளும் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 4-வது இடத்தில் உள்ள நாடு நிச்சயம் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

12. சீனா :

12. சீனா :

அடுத்த சூப்பர் பவர் நாடு என்று கூறப்படும் சீனா, சமீப காலமாக தொழில்நுட்ப துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது.

12-வது இடம் :

12-வது இடம் :

மேலும் ரோபாட்டிக்ஸ், குறைக்கடத்திகள், அதிவேக ரயில்கள், சூப்பர் கம்ப்யூட்டர், மரபியல், வாகனங்கள் மற்றும் விண்வெளி ஆய்வு திட்டம் ஆகியவைகளில் சிறந்து விளங்குவதால் தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேறிய நாடுகள் பட்டியலில் 12-வது இடத்தில் உள்ளது சீனா.

11. நெதர்லாந்து :

11. நெதர்லாந்து :

தொலைத்தொடர்பு அமைப்புகள் , கணினிகள், மின்னணு அளவீடு மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள், மருத்துவ மற்றும் அறிவியல், மின் நிலைமாற்றம் கியர் மற்றும் மின்மாற்றிகள் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவதால் பட்டியலில், நெதர்லாந்து 11-வது இடத்தில் உள்ளது.

 10. சிங்கப்பூர் :

10. சிங்கப்பூர் :

உயர் தொழில்நுட்ப தேசம் என்றும், வணிக நட்பு நாடு என்றும் சிங்கப்பூர் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

பத்தாவது இடம் :

பத்தாவது இடம் :

மேலும் அதன் உலகின் அதிவேக இன்டர்நெட், அதீத ஸ்மார்ட்போன் பயன்பாடு ஆகிய காரணங்களால் பட்டியலில், சிங்கப்பூர் பத்தாவது இடத்தில் உள்ளது.

09. கனடா :

09. கனடா :

உயிரி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி ஆய்வு நிபுணத்துவம் ஆகியவைகளில் சிறந்து விளங்குவதால், கனடா பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் உள்ளது.

08. ஐக்கிய இராச்சியம் (UK) :

08. ஐக்கிய இராச்சியம் (UK) :

ஐக்கிய இராச்சியம் - உலகின் முதல் தொழில்துறை நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

எட்டாம் இடம் :

எட்டாம் இடம் :

மேலும் சமீபத்திய உருவாக்கமான ஆளில்லா போர் விமானங்கள் மற்றும் பிஏஇ ஸிஸ்டம்ஸ் தரானீஸ் ஆகியவைகள் ஐக்கிய இராச்சியத்தை பட்டியலில் எட்டாம் இடத்தில் வைத்துள்ளது.

07. ஃபின்லாந்து :

07. ஃபின்லாந்து :

உயர்-தொழில்நுட்ப திட்டங்கள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியவைகளில் சிறந்து விளங்குவதால் தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேறிய நாடுகளின் பட்டியலில், ஃபின்லாந்து ஏழாவது இடத்தில் உள்ளது.

06. ரஷ்யா :

06. ரஷ்யா :

கனரக இயந்திர துறையில் உலக அரங்கில் 'பிக் டாடி' என்று ரஷ்யா அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஆறாம் இடம் :

ஆறாம் இடம் :

விண்வெளி தொழில்நுட்பம், சிறந்த உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு அமைப்பு, ஏவுகணை அமைப்புகள் மிகவும் திறமையான ஆகியவைகளில் சிறப்பாக திகழ்வதால் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது ரஷ்யா.

05. ஜெர்மனி :

05. ஜெர்மனி :

கடந்த 10 ஆண்டுகளாக ஜெர்மனி ஒரு தொழில்நுட்ப தேசமாக திகழ்கிற்து என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாம் இடம் :

ஐந்தாம் இடம் :

அதிலும் வாகன தொழில்நுட்ப துறையில் ஜெர்மனியை உலகின் முன்னோடி எனலாம். மேலும் பொறியியல் துறை, விண்வெளி பயணம், நானோ தொழில்நுட்பம் ஆகியவைகளில் சிறந்து செயல்படுவதால், ஜெர்மனி பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளது.

04. இஸ்ரேல் :

04. இஸ்ரேல் :

இஸ்ரேலின் 35% ஏற்றுமதி தொழில்நுட்பம் சார்ந்தது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காம் இடம் :

நான்காம் இடம் :

அது மட்டுமின்றி விண்வெளி அறிவியல், பாதுகாப்பு துறை , நவீன மின்சார கார் உள்கட்டமைப்பு, ரீசார்ஜ் நிலையங்களில் நெட்வொர்க் ஆகியவைகளில் சிறந்து விளங்குவதால் இஸ்ரேல் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது.

03. தென் கொரியா :

03. தென் கொரியா :

எல்ஜி, ஹூண்டாய், சாம்சங் ஆகியவைகளின் பிறப்பிடம் தென் கொரியா ஆகும் என்பதின் மூலம் அதன் தொழில்நுட்ப வளர்ச்சியை புரிந்து கொள்ள முடியும்.

மூன்றாம் இடம் :

மூன்றாம் இடம் :

அது மட்டுமின்றி ரோபோடிக்ஸ் மற்றும் அதிவேக இன்டர்நெட் ஆகிய காரணகளுக்காக பட்டியலில் தென் கொரியா மூன்றாம் இடம் பெற்றுள்ளது

 02. அமெரிக்கா :

02. அமெரிக்கா :

அமெரிக்கா விண்வெளி தொழில்நுட்பத்தில், உலக அரங்கில் ஒரு தனி ராஜாங்கமே வைத்து நடத்துகிறது என்று கூறலாம்.

இரண்டாம் இடம் :

இரண்டாம் இடம் :

விண்வெளி ஆய்வுகளில் மட்டுமின்றி, மருந்துகள், பாதுகாப்பு அமைப்பு மற்றும் தொலைதொடர்பு ஆகியவைகளிலும் உலக அளவில் சிறந்து விளங்குவதால் அமெரிக்கா பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

01. ஜப்பான் :

01. ஜப்பான் :

ஜப்பான் - அறிவியல் ஆராய்ச்சியின் உச்சத்தில் இருக்கும் நாடு என்றே கூறலாம்.

முதல் இடம் :

முதல் இடம் :

வாகனங்கள், மின்னணு, இயந்திரங்கள், பூகம்ப பொறியியல், ஒளியியல், தொழில்துறை ரோபாட்டிக்ஸ், உலோகங்கள் மற்றும் அரை கடத்திகள் ஆகிய தொழில்நுட்ப வளர்ச்சிக்காக பட்டியலின் முதல் இடத்தில் உள்ளது ஜப்பான்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
2015-ஆம் ஆண்டின் தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேறிய நாடுகள் பட்டியல். மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X