Vodafone இவ்ளோ நாள் எங்க இருந்த.. மாதம் ரூ.166 செலவில்.. 1 ஆண்டுக்கான டென்ஷன்-ஃப்ரீ SIM ஆக்டிவ் பிளான்!
சமீபத்தில் வோடாபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது அதன் 2 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் (ரூ179 மற்றும் ரூ.199) திட்டங்களின் நன்மைகளில் திருத்தம் செய்திருந்தது. ஆனாலும் அவைகள் 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியை (28 Days Validity) கொண்ட திட்டங்கள் என்பதால் அதைப்பற்றி உங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்றால்.. ஒருவேளை நீங்கள் 1 ஆண்டு வேலிடிட்டி (1 Year Validity) கொண்ட திட்டத்தை தேடுகிறீர்கள் என்றால்.. சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.
ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து நாட்டின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக உள்ள வோடபோன் ஐடியாவிடம் (Vi) மாதந்தோறும் வெறும் ரூ.166 என்கிற செலவில் 1 ஆண்டு காலத்திற்கு செல்லுபடியாகும் ஒரு தரமான ரீசார்ஜ் உள்ளது. அது ரூ.1999 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் (மாதத்திற்கு 166 ரூபாய் 58 பைசா x 12 மாதங்கள் = ரூ.1999) ஆகும்.

முதல் மற்றும் முக்கியமான விஷயம் என்னவென்றால்.. இதுவொரு டென்ஷன்-ப்ரீ ரீசார்ஜ் (Tension Free Recharge) ஆகும். ஒரு வருட காலத்திற்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்பவர்கள் சிம் கார்ட்டை ஆக்டிவ் (Active SIM Card) ஆக வைத்திருக்க வேண்டிய காலக்கெடு மற்றும் கவலையை 12 மாதங்ககளுக்கு மறந்துவிட்டு, நிம்மதியாக டெலிகாம் சேவைகளை அனுவபவிக்கலாம்
இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ரூ.1999 திட்டத்தின் நன்மைகளை பொறுத்தவரை, இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), மொத்தமாக 24 ஜிபி டேட்டா (Total 24GB Data) மற்றும் மொத்தம் 3600 எஸ்எம்எஸ்கள் (Total 3600 SMS) ஆகிய நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் கூடுதல் நன்மைகள் எதுவும் தொகுக்கப்படவில்லை. முன்னரே குறிப்பிட்டபடி இந்த திட்டம் 365 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியை (365 Days Service Validity) வழங்கும்.
உங்கள் சிம் கார்ட்டை ஆக்டிவ் ஆக வைத்திருக்க மலிவான திட்டங்கள் உள்ளன, ஆனால் அவைகால் 1 வருட செல்லுபடியாகும் காலத்துடன் வருவதில்லை. வாய்ஸ் கால்கள் மற்றும் அவ்வப்போதான எஸ்எம்எஸ் நன்மைகள் மட்டுமே உங்களுக்கு முக்கியம் என்றால்.. டேட்டா நன்மை பற்றிய அதிக கவலை உங்களுக்கு இல்லை என்றால்.. இந்த ரூ.1999 திட்டத்தை கண்களை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்யலாம்.
ரூ.199 மற்றும் ரூ.179 ப்ரீபெய்ட் திட்டங்களின் (Vodafone Idea Rs 199 and Rs 179 Plans) மீதான திருத்தங்களை பொறுத்தவரை. இந்த இரண்டு திட்டங்கள் மீதும் வழக்கமான நன்மைகளுடன் கூடுதல் நன்மைகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த சலுகை தேர்ந்தெடுக்கப்பட்ட சில சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும், இது குறிப்பிட்ட டெலிகாம் வட்டத்திற்கு ஏற்றதாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதாவது இது இந்தியா முழுவதும் கிடைக்கும் சலுகை அல்ல.
வழக்கமாக வோடாபோன் ஐடியாவின் ரூ.199 திட்டமானது 2 ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை மொத்தம் 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்கும். தற்போது இந்த திட்டம் ஒவ்வொரு நாளும் கூடுதலாக 1ஜிபி டேட்டாவை வழங்குவதாக கூறப்படுகிறது, இதன் மூலம் ரூ.199 திட்டத்தின் கீழ் கிடைக்கும் மொத்த டேட்டா 30ஜிபி ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மறுகையில் உள்ள ரூ. 179 ப்ரீபெய்ட் திட்டமானது வழக்கமாக 1 ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை மொத்தம் 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்கும். தற்போது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 4 நாட்கள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த திட்டத்தின் நீட்டிக்கப்பட்ட செல்லுபடியின் கீழ் 1ஜிபி டேட்டா நன்மையை பயன்படுத்த முடியாது என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








