Home
News

வாடகை வீட்டில் உள்ள Jio பிராட்பேண்ட் கஸ்டமர்களுக்கு இப்படி ஒரு வசதி இருக்கா.. இது தெரியாம போச்சே!

நீங்கள் ஒரு ஜியோ ஃபைபர் (JioFiber) அல்லது ஜியோ ஏர் ஃபைபர் (Jio AirFiber) வாடிக்கையாளர் ஆக இருந்தால், இந்த இரண்டு சேவைகளுமே இப்போது மறுபெயரிடப்பட்ட ஜியோ ஹோம் (JioHome) என்கிற சேவையின் கீழ் அணுக கிடைக்கின்றன என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்து இருப்பீர்கள்.

நம்மில் பலரும் பிராட்பேண்ட் கனெக்ஷன் எடுக்காமல் இருப்பதற்கான காரணம் - ஒருவேளை நம்மில் பலரும் வாடகை வீடுகளில் இருக்கலாம். எப்போது அடுத்த வீட்டிற்கு மாறுவோம் என்று நமக்கே தெரியாது. நிலைமை இப்படி இருக்கும் போது எப்படி பிராட்பேண்ட் சேவைக்குள் நுழைவது? என்கிற கவலையும்.. அதே நேரத்தில் பிராட்பேண்ட் சேவைக்கான தேவையும் உங்களிடம் இருக்கிறதா?

வாடகை வீட்டில் உள்ள Jio பிராட்பேண்ட் கஸ்டமர்களுக்கு இப்படி ஒரு வசதி-ஆ!

ஜியோ ஹோம் (ஜியோ ஃபைபர் / ஜியோ ஏர் ஃபைபர்) சேவையானது அந்த கவலையை நிவர்த்தி செய்கிறது. 12 மாதங்களுக்கு முன்கூட்டியே பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, ஜியோ நிறுவனமானது அவர்களுடைய தற்போதைய கனெக்ஷனை இடமாற்றம் செய்வதற்கான சேவையை வழங்குகிறது. இது நீண்ட கால திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் மன அமைதியை பெற அனுமதிக்கிறது.

ஜியோஏர்ஃபைபர் / ஜியோஃபைபர் இடமாற்ற சேவையை பெறுவது எப்படி? உங்கள் தற்போதைய ஜியோஃபைபர் அல்லது ஜியோ ஏர்ஃபைபர் இணைப்பை இடமாற்றம் செய்ய, ஜியோவின் மொபைல் ஆப் வழியாகவோ அல்லது ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாகவோ உங்கள் மைஜியோ அக்கவுண்ட்டில் லாக்-இன் செய்யவும்.

பின்னர் உங்களுடைய புதிய முகவரியை உள்ளிடவும். குறிப்பிடத்தக்க வகையில் நீங்கள் செல்லும் புதிய இடத்தில் ஜியோஃபைபர் சேவைகள் கிடைக்கவில்லை என்றால், உங்கள் இணைப்பு ஏர்ஃபைபருக்கு மாற்றப்படலாம். ஏர்ஃபைபர் மற்றும் ஃபைபர் இரண்டும் இல்லை என்றால், நிச்சயமாக நீங்கள் சிக்கலை சந்திக்க நேரிடும்.

ஜியோஏர்ஃபைபர் / ஜியோஃபைபர் இடமாற்ற சேவையை பெற நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான். நீங்கள் அழைப்பு விடுக்கவோ அல்லது எந்த மெஸேஜையும் அனுப்பவோ தேவையில்லை. எல்லாவற்றையும் மொபைல் ஆப் ல்லது ஜியோ நிறுவனத்தின் வலைத்தளம் வழியாகவே செய்யலாம். ஜியோவின் வலைத்தளத்தில், இதைச் செய்வதற்கான படிப்படியான வீடியோவும் உள்ளது.

ஒருவேளை நீங்கள் மாதாந்திர திட்ட சேவைகளில் இருந்தால், தற்போதைய சேவைக்கான இணைப்பை துண்டிக்க சொல்லிவிட்டு, உங்கள் புதிய இடத்திற்கு புதிய இணைப்பை முன்பதிவு செய்யலாம். ஜியோவின் ஏர்ஃபைபர் சேவை இப்போது இந்தியாவின் பல பகுதிகளில் அணுக கிடைக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆக பெரும்பாலும் இந்த செயல்முறை வெற்றியில் தான் முடியும்.

ஜியோ தொடர்பான மற்ற சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை, இந்நிறுவனமானது 6ஜி மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையில் எப்போதுமே மற்றவர்களை விட முன்னணியில் இருக்க வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளது. இது பங்குதாரர்களுக்கு நிலையான வருமானத்திற்கு வழிவகுக்கும் ஒரு உத்தி என்று நேற்று (ஆகஸ்ட் 7) வெளியிட்ட தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த அறிக்கை, ஜியோ நிறுவனமானது எதிர்கால தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களிலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. குறிப்பாக 6ஜி தொழில்நுட்பத்தை தீவிரமாக ஆராய்ந்து, மேம்படுத்தி வருகிறது. 6ஜி விஷயத்தில் - 6ஜி மேம்பாடு மற்றும் 6ஜி பயன்பாட்டில் உலகளாவிய தலைவராக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஜியோ பணியாற்றி வருகிறது. இதுவரை ஜியோ நிறுவனம் 3,341 க்கும் மேற்பட்ட காப்புரிமைகளை தாக்கல் செய்துள்ளது, இதில் 25 நிதியாண்டில் 1,654 காப்புரிமைகள் அடங்கும்.

ஜியோ பிளாட்ஃபார்ம்கள் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் ஆனது இந்த நிதியாண்டில் 154 காப்புரிமைகளை பெற்றுள்ளன. கடந்த மார்ச் 31 நிலவரப்படி, ஜியோ நிறுவனம் 485 காப்புரிமைகளை வைத்திருந்தது. ஜியோவின் கூற்றுப்படி, 5ஜி மற்றும் 6ஜி தொழில்நுட்பங்களில் இந்தியாவின் மிகப்பெரிய காப்புரிமை வைத்திருப்பது ஜியோ நிறுவனம் தான்!

More from GizBot

Best Mobiles in India

English summary
12 Months Plan JioFiber Jio AirFiber JioHome Customers Can Relocate Existing Service Via App Website
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X