அவரே கன்ஃப்யூஸ் ஆகிட்டாரு: ஆர்டர் பண்ணது ஒரு டஜன்.,வந்தது 12-அப்புறமும் பணத்த திரும்ப கேட்கிறாரு?-ஒரு டுவிஸ்ட்

|

வாடிக்கையாளர் ஒருவர் ஒரு டஜன் மாஸ்க்கை ஆர்டர் செய்துள்ளார். அதேபோல் வணிக உரிமையாளர் 12 மாஸ்க்குகளை அனுப்பியுள்ளார். இருப்பினும் ஆத்திரம் அடைந்த வாடிக்கையாளர்கள் பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். இந்த அனைத்துக்கும் குழப்பமாக இருந்தது டப் சென் என்ற ஒரு வார்த்தையே ஆகும்.

வாடிக்கையாளரின் கணித அறிவு

வாடிக்கையாளரின் கணித அறிவு

வாடிக்கையாளரின் மெட்ரிக் முறை சார்ந்த அறிவே இந்த குழப்பத்திற்கு காரணமாக இருக்கிறது. வணிக உரிமையாளர் பயன்படுத்திய டப் சென் என்ற வார்த்தை இந்த குழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வணிக உரிமையாளர், வாடிக்கையாளர் ஆகிய இருவருக்கும் நடந்த வாதத்தின் மூலம் இது தெரியவந்துள்ளது.

வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட குழப்பம்

வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட குழப்பம்

பொதுவாக ஆன்லைன் தளங்களில் எந்த தவறும் செய்யவில்லை என்றாலே வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவது கடினம், இதில் வணிக உரிமையாளர் பயன்படுத்திய ஒரு குறிப்பிட்ட மாடல் வார்த்தையால் மிகப் பெரிய குழப்பமே ஏற்பட்டிருக்கிறது. அந்த வார்த்தை ஒருசார்ந்த பிழையாகவும் காண்பிக்கப்படுகிறது. வாடிக்கையாளரின் கணிதம் சார்ந்த ஞானமே இந்த குழப்பத்திற்கு முக்கிய காரணம்.

ஆன்லைன் ஆர்டர் பழக்கம்

ஆன்லைன் ஆர்டர் பழக்கம்

ஆன்லைன் ஆர்டர் பழக்கம் மக்களிடையே அதிகரித்துக் கொண்டே வருகிறது. மளிகை பொருட்களில் தொடங்கி, மருந்து, உணவு, உடை, கேட்ஜெட் பொருட்கள் உட்பட அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் ஆன்லைன் ஆர்டர் தேவை அதிகரிதுள்ளது என்றே கூறலாம்.

அதிகரிக்கும் ஆன்லைன் ஆர்டர் முறை

அதிகரிக்கும் ஆன்லைன் ஆர்டர் முறை

கொரோனா காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் முறை என்பது சற்று கூடுதலாகவே அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் நேரில் சென்று ஷாப்பிங் செய்ய தயங்கி வருகின்றனர். இதையடுத்து ஆன்லைன் ஷாப்பிங் வழியாக பொருட்களை வாங்கவே ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.

ஏது தண்ணிய காணமா?- செவ்வாய் கிரகத்தில் இருந்த அவ்வளவு நீரும் எங்கபோச்சு?- அதிர்ச்சி பதில்!ஏது தண்ணிய காணமா?- செவ்வாய் கிரகத்தில் இருந்த அவ்வளவு நீரும் எங்கபோச்சு?- அதிர்ச்சி பதில்!

ஜடாஸ் வால்ட் என்ற ஆன்லைன் தளம்

ஜடாஸ் வால்ட் என்ற ஆன்லைன் தளம்

ஆன்லைன் தளங்களில் ஆர்டர் செய்யும்போது சில தவறுகள் நடப்பது உண்டு. அந்த புகார்களும் நடவடிக்கைகளும் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருவது வழக்கம். அதன்படி ஜடாமெக்ரே என்பவர் ஜடாஸ் வாலட் என்ற ஆன்லைன் ஷாப்பிங் தளம் ஒன்றை நடத்திவருகிறார். இந்த தளத்தில் சர்ட்டுகள், பெல்ட் மற்றும் மாஸ்க்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆன்லைன் தள குழப்பம்

மெக்ரே ஆன்லைன் தளத்தின் மூலம் நடந்த குழப்பம் குறித்து வாடிக்கையாளரிடம் மேற்கொண்ட உரையாடலை பகிர்ந்துள்ளார். மெக்ரே, வாடிக்கையாளர் அனுப்பிய புகார் மெயில் குறித்து மனஉளைச்சல் அடைந்ததாக கூறினார். அதில் வணக்கம், நான் ஒரு டசன் மாஸ்க் ஆர்டர் செய்தேன், ஆனால் தனக்கு 12 மாஸ்க்குகள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது எனவே என்னுடை பணத்தை திரும்பக் கொடுங்கள். எனக்கு அனைத்தும் தேவை, சிறிய தொழில்களுக்கு உதவ நினைத்தேன் இனி உங்கள் வேலைக்கு உதவமாட்டேன். நீங்கள் மக்களை கருத்தில் கொள்வதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஒரு டசன் மாஸ்க்., 12 டெலிவரி

இதையடுத்து இந்த மெயிலுக்கு பதிலளித்த மெக்ரே, நீங்கள் டசன் மாஸ்க் ஆர்டர் செய்துள்ளீர்கள், எனவே டசன் என்றால் 12தான். சரியாகத்தான் அனுப்பியுள்ளேன். பணம் திரும்பக் கொடுக்க முடியாது, உங்களின் கோரிக்கைக்காக 5 டாலர் கூப்பன் சலுகையாக வழங்குகிறேன் என தெரிவித்துள்ளார். இருப்பினும் இதில் தனக்கு விருப்பமில்லை என வாடிக்கையாளர் பதிலளித்துள்ளார்.

டப்சென் என்ற வார்த்தை விளக்கம்

அதேபோல் மேலும் பதிலளித்த வாடிக்கையாளர், தனக்கு 20 தேவைப்பட்டது, டசன் என்றால் 12 என கேள்விப்பட்டதே இல்லை எனவும் விலைப்பட்டியலை கவனிக்கவில்லை எனவும் அதைப்படிக்கும்போது டப் சென் என குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் டப் என்றால் 20 என அர்த்தம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பூரிக்க வைக்கும் கணிதம் சார்ந்த அறிவு

வாடிக்கையாளரின் கணிதம் சார்ந்த அறிவை அவரால் புரிந்துக் கொள்ளமுடியவில்லை என்றாலும் ஆன்லைன் வணிகத்துறைக்கு ஏணைய ஆதரவு கிடைக்கிறது. மேலும் வணிக தளத்தில் டப் சென் என்ற வார்த்தையை புதிதாகத் தொடங்க அவர் முடிவு செய்துள்ளார், வாடிக்கையாளர் 20 சதவீதம் தள்ளுபடி பெற டப்சென் என்ற குறியீட்டை பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
12 Mask Delivery for those Who Order a Dozen Masks Online: Still Customer Demands Refund

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X