உலக நாடுகள் இந்தியாவை திரும்பிபார்க்க வைத்த இந்திய விஞ்ஞானிகள்!
இந்த கண்டிபிடிப்புகள் இல்லாமல் இருந்திருந்தால் நாம் என்ன செய்துகொண்டிருப்போம் என நினைத்தால் பயமாக உள்ளது.
நமது வாழ்வின் ஒவ்வொரு நாளும் நமக்கு தெரியாமலேயே கூட அறிவியல் முக்கிய பங்காற்றிவருகிறது. பல்வேறு பேன்ஸி கேஜட்கள் முதல் அது இல்லாமல் வாழவே முடியாத தொழில்நுட்பங்கள் வரை, சாதாரண பல்பு முதல் விண்வெளி ஆய்வுகள் வரை அனைத்தும் அறிவியல் வழங்கிய பரிசு தான்.

இந்த கண்டிபிடிப்புகள் இல்லாமல் இருந்திருந்தால் நாம் என்ன செய்துகொண்டிருப்போம் என நினைத்தால் பயமாக உள்ளது. நமது வாழ்வை எளிமையாக்க ஆச்சர்ய மனிதர்களைப் பற்றி நாம் நினைத்துப்பார்த்து உண்டா? சர்வதேச அளவில் சாதித்த இந்திய விஞ்ஞானிகள் இதோ.

1. சி.வி ராமன்
திருச்சிராப்பள்ளியில் பிறந்த இவர் 1930ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார். சிவி ராமன் தான் அறிவியலில் நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் மற்றும் முதல் வெள்ளையர் அல்லாதவர்.
இசைக்கருவிகளின் ஒலியியல் பற்றி ஆராய்ந்த இவர், முதன்முதலாக இந்திய மத்தளவகை இசைக்கருவிகளான தபலா மற்றும் மிருதங்கங்களின் இசை இயல்பை ஆராய்ந்தார்.
இவர் கண்டறிந்த ஒளிவிலகல் விளைவு, சிவி ராமன் விளைவு என அழைக்கப்படுகிறது.

2 .ஹோமி ஜே பாபா
பம்பாயில் பிறந்த இவர் குவாண்டம் கொள்கையில் முக்கிய பங்காற்றினார். இந்திய அணு ஆற்றல் ஆணையத்தின் முதல் தலைவர் இவர். இந்திய அணு சக்தியின் தந்தை என போற்றப்பட்டாலும், இந்தியா அணுகுண்டு தயாரிப்பதற்கு எதிராக இருந்தார் என்பதை வெகுசிலரே அறிவர். அதற்கு பதிலாக அணுஉலை தயாரித்தால் நாட்டின் துயரமும், வறுமையும் குறையும் என்றார்.

3. விஸ்வேஸ்வரய்யா
இந்தியாவின் மிக குறிப்பிடத்தக்க பொறியாளரான இவர், மைசூர் திவானாகவும் பணியாற்றியுள்ளார். பாரத ரத்னா விருதுக்கு சொந்தக்காரரான இவர், இந்தியா தொழிற்சாலைகள் மூலமே வளர்ச்சியடைய முடியும் என்றார்.
தானியங்கி குழாய் அடைப்புகள் மற்றும் தொகுதி பாசன அமைப்பு போன்ற பொறியியல் அற்புதங்களை கண்டறிந்த இவரின் பிறந்தநாளான செப்டம்பர் 15,பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.

4.வெங்கட்ராமன் இராதாகிருஷ்ணன்
சென்னை தண்டையார்பேட்டையில் பிறந்த இவர் சர்வதேச புகழ்பெற்ற விண்வெளி ஆய்வாளராகவும், ராயல் ஸ்வீடிஸ்அறிவியல் அகாடமியின் இருந்தார்.
விண்வெளி இயற்பியலாளர் என சர்வதேச அளவில் கூறப்படும் இவர், மிகஎடைகுறைந்த விமானம் மற்றும் படகுகளை வடிவமைத்தவர்.

5.எஸ் சந்திரகேசர்
லாகூரில் பிறந்த இவர், கருத்துளைகளின் கணித கோட்பாட்டிற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசை 1983ல் பெற்றார். இவரின் நட்சத்திரங்களின் ஆற்றலில் உள்ள கதிரியக்கம் பற்றிய ஆய்வு பெரிதும் பாராட்டப்பட்டது.

6.சத்யேந்திரநாத் போஸ்
கொல்கத்தாவில் பிறந்த இந்திய இயற்பியலாளரான இவர், குவாண்டம் மெக்கானிக்ஸ்-ல் சிறப்பு பெற்றவர். ரவீந்திரநாத் தாகூர் தனது ஒரே அறிவியல் நூலான 'விஷ்வ பரிச்சை'யை இவருக்கு அர்பணித்தார். இந்திய அரசு இவருக்கு பத்மவிபூசண் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

7.மேகநாத் சாகா
வங்கதேசத்தின் டாக்கா நகரில் பிறந்த இவர், தனிமங்களின் வெப்ப அயனியாக்கம் தொடர்பான சாகா சமன்பாட்டை கண்டறிந்தவர். மேலும் இவர் சூரிய கதிர்களின் எடை மற்றும் அழுத்தத்தை அளவிடும் கருவியையும் கண்டுபிடித்துள்ளார். இந்திய ஆறுகள் திட்டத்தின் தலைமை வடிவமைப்பாளர் இவர் தான் என தெரியுமா?

8.சீனிவாச இராமானுஜம்
தமிழகத்தை சேர்ந்த கணிதவியலாளரான இவரின் கணித ஆய்வுகள்,எண் கோட்பாடு, முடிவில்லா தொடர் போன்று கணித்திற்கு ஆற்றிய பங்கு அளப்பரியது.
தமிழகத்தில் இவரின் பிறந்தநாளான டிசம்பர்22, மாநில தகவல்தொழில்நுட்ப தினமாக கொண்டாடப்படுகிறது.

9. ஜெகதீஷ் சந்திரபோஸ்
மேற்குவங்கத்தை சேர்ந்த இவர் இயற்பியலாளர், உயிரியலாளர், தாவரவியலாளர் மற்றும் தொல்பொருள் அறிஞர். ரேடியோ மற்றும் மைக்ரோவேவ் அலைகள் பற்றிய ஆய்வு மேற்கொண்ட இவர், செமிகண்டக்டர் பயன்படுத்தி முதல்முதலில் ரேடியோ அலைகளை கண்டறிந்தவர். மேலும் தாவரங்களின் திறனைஅளவிடும் கிரிஸ்கோகிராப்-ஐ கண்டுபிடித்தார்.

10.விக்ரம் சாராபாய்
குஜராத்தின் அகமதாபாத் நகரில் பிறந்த இவர், இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். இந்தியவிண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ உருவாக காரணகர்த்தாவாக இருந்த இவர், நாட்டின் விண்வெளி திட்டங்களின் மேம்பாடுகளுக்கு முக்கிய பங்காற்றியவர். இவருக்கு பத்மபூசன், பத்மவிபூசன் விருதுகளை இந்திய அரசு வழங்கி கவுரவித்துள்ளது.

11. சலீம் அலி
மும்பையில் பிறந்த
பறவையியல் மற்றும் ஒரு இயற்கைவிரும்பியான இவர், முதல்முதலில் அறிவியல்பூர்வமாக நாடுமுழுவதும் பறவைகள் கணக்கெடுப்பை நடத்தினார் மற்றும் இவரின் புத்தகங்கள் நாட்டின் பறவையியல் துறையை மேம்படுத்த உதவியுள்ளது. இவருக்கு இந்திய அரசு பத்மவிபூசன் விருது வழங்கியுள்ளது.

12. ஏபிஜெ அப்துல்கலாம்
இஸ்ரோ மற்றும் டிஆர்டிஓ-வில் விண்வெளி பொறியாளராக பணியாற்றிய இந்திய விஞ்ஞானி. இவர் இந்தியாவின் 11வது குடியரசுத்தலைவராக 2002 முதல் 2007 பணியாற்றியுள்ளார். தனது இந்தியா 2020 புத்தகத்தில் 2020க்குள் இந்தியா வல்லரசாக உருவாக திட்டங்களை கூறியுள்ளார். இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பித்துள்ளது. குழந்தைகள் மீது அதீத அன்பு வைத்திருந்த இவர், 1999 தனது பணியை இராஜினாமா செய்த பிறகு ,2 ஆண்டுகளில் 1,00,000 மாணவர்களை சந்திக்க இலக்கு நிர்ணயித்தார் என்பது தெரியுமா?


Click it and Unblock the Notifications