Home
News

வாக்காளர் அடையாள அட்டை மட்டுமில்ல.. ஓட்டு போட ஆதார் கார்டு.. 13 ஆவணங்கள் இருக்கு.. தலைமை தோ்தல் அதிகாரி!

நாடாளுமன்ற தேர்தலில் வெறும் அடையாள அட்டை மட்டுமே வைத்திருந்தால் வாக்கு செலுத்த அனுமதி வழங்கப்படாது. ஆதார், பேன் கார்டு உள்ளிட்ட 13 ஆவணங்கள் எடுத்து கொள்ளப்படும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரதா சாகு திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். இதுகுறித்த விவரம் இதோ.

2024ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. பழைய வாக்காளர்கள், தங்களது வாக்காளர் அடையாள அட்டையை தயார் நிலையில் வைக்க தொடங்கிவிட்டனர்.

ஓட்டர் ஐடி மட்டும் இல்ல.. ஓட்டு போட ஆதார் கார்டு.. பேன் கார்டு!

தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு அப்ளை செய்த வாக்காளர்களும் பட்டியலில் தங்களது பெயர் சேர்க்கப்பட்டுவிட்டதா, வாக்காளர் தகவல் சீட்டு தங்களுக்கு கொடுக்கப்படுமா என்பதை தெரிந்துகொள்ள காத்திருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில், வாக்காளர் அடையாள அட்டைக்கு (Voter ID) பதிலாக 12 மாற்று அடையாள ஆவணங்கள் தொடர்பான அறிவிப்பு வந்துள்ளது.

இதை அந்தந்த மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகள் உறுதி செய்து வருகின்றனர். அதேபோல தமிழ்நாடு தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவும் இதை உறுதி செய்தி இருக்கிறார். இந்த ஆவணங்களில் ஆதார் கார்டு, பேன் கார்டு மட்டுமல்லாமல், ஓட்டுநர் உரிமம், பேங்க் பாஸ்புக் போன்றவறையும் இடம்பெற்றிருக்கிறது.

எந்தெந்த ஆவணங்கள் இடம்பெற்றுள்ளன? ஆதார் கார்டு (Aadhaar Card), பேன் கார்டு (PAN Card) ஓட்டுநர் உரிமம் (Driving License), 100 நாள் வேலை திட்டத்தில் வழங்கப்படும் அடையாள அட்டையான எம்ஜிஎன்ஆர்ஈஜிஏ கார்டு (MGNREGA Card), பேங்க் பாஸ்புக் (Bank Passbook) அல்லது போஸ்ட் ஆபீஸ் பாஸ்புக் (Post Office Passbook) இருக்கிறது.

ஓட்டர் ஐடி மட்டும் இல்ல.. ஓட்டு போட ஆதார் கார்டு.. பேன் கார்டு!

பாஸ்போர்ட் (Passport), தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் ஹெல்த் இன்சூரன்ஸ் ஸ்மார்ட் கார்டு (Health Insurance Smart Card), தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் வழங்கப்படும் என்பிஆர் கார்டு (NPR Card), ஓய்வூதியம் பெறுவோர்களுக்கு வழங்கப்படும் புகைப்படத்துடன் ஓய்வூதிய ஐடி கார்டு (Pensioners ID Card) இடம்பெற்றுள்ளது.

மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய பணியாளர் அடையாள அட்டை (Emloyee ID Card), எம்பி, எம்எல்ஏ, எம்எல்சி உறுபினர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகள் மற்றும் யுடிஐடி கார்டு (UDID Card) ஆகியவையும் இடம்பெற்றுள்ளது.

இந்த யுடிஐடி கார்டு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மூலம் இயலாதோர்களுக்கு (Disabilities) வழங்கப்படுகிறது. மேற்கூறிய அடையாள ஆவணங்களை வாக்காளர் அடையாள அட்டைக்கு பதிலாக ஓட்டுப்போட பயன்படுத்தலாம். ஆனால், வாக்காளர் பட்டியலில் (Voter List) உங்களது பெயர் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும்.

இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் வாக்காளர்களுக்கு புகைப்பட வாக்கு சீட்டுக்கு பதிலாக வாக்களார் தகவல் சீட்டு வழங்கப்பட இருக்கிறது. இந்த சீட்டில் வாக்குச் சாவடி பெயர், வாக்குப்பதிவு நாள் மற்றும் நேரம் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்று இருக்கும். தேர்தல் நடப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பே இந்த வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம் செய்யப்பட்டுவிடும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆகவே, இந்த சீட்டை வைத்திருக்கும் வாக்காளர்கள் மட்டுமே, வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும், மேற்கூறிய ஆவணங்களை பயன்படுத்தி வாக்கு செலுத்த அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு அப்ளை செய்து, அந்த கார்டு வரவில்லை என்றாலும், வாக்களார் தகவல் சீட்டில் பெயர் இடம் பெற்றுவிட்டால், அதை வைத்து மேற்கூறிய ஆவணங்களில் ஒன்றை எடுத்து சென்று வாக்களிக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
12 Documents including Aadhaar Card, PAN Card, Pass Book Not Just Voter ID To Vote Sathyaprada Sahu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X