Home
News

11487 ஊழியர்களின் கதறல்; ஐடி கம்பெனிகளின் முகத்திரையை கிழித்த ஆய்வின் முடிவு.!

எந்தெந்த கம்பெனியில் எவ்வளவு வேலைப்பளு.? ஐடி கம்பெனியின் முகத்திரையை கிழித்த ஆய்வின் முடிவு.!

By Muthuraj

நீங்கள் டெக் அல்லது ஐடி துறையில் பணியாற்றி வரும் ஒரு நபர் என்றால், வேலை மற்றும் வாழ்க்கையை எப்படி சமமாக கையாள்வது என்பதை பற்றிய 'வொர்க் - லைஃப் பேலன்ஸ்' (work-life balance) என்கிறவொரு விடயத்தை அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

11487 ஊழியர்களின் கதறல்; ஐடி கம்பெனியின் முகத்திரையை கிழித்த ஆய்வு.!

ஏனெனில் இந்த சமநிலையில் விழும் ஓட்டையானது உங்களுக்கே தெரியாமல், உங்களை மெல்ல மெல்ல அழித்து விடும். இது ஜோக் அல்ல, மிகவும் சீரியஸான மேட்டர்.

பகிரங்கமான முடிவு.!

பகிரங்கமான முடிவு.!

எந்த அளவு சீரியஸான மேட்டர் என்றால் - 30 க்கும் மேற்ப்பட்ட டெக் மற்றும் ஐடி நிறுவனங்களின் பணியாற்றும் சுமார் 11,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டு ஒரு மாபெரும் கணக்கெடுப்பை எடுத்து, அதன் முடிவை பகிரங்கமாக வெளியிடும் அளவு சீரியசான மேட்டர்.!

அதிகம் பாதிக்கப்படும் பகுதியினர் யார்.?

அதிகம் பாதிக்கப்படும் பகுதியினர் யார்.?

பரபரப்பான வாழ்க்கை முறைக்கு பழகிப்போன நாம், வேலை சம்பந்தப்பட்ட மன அழுத்தத்தை கையாள்வதில் இன்னும் திணறிக்கொண்டு தான் இருக்கிறோம். குறிப்பாக உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை செய்யும் நபர்கள் தான், மன அழுத்தத்தின் விளைவாக அதிகம் பாதிக்கப்படும் பகுதியினராக உள்ளனர்.

சாத்தியமில்லாத டார்கெட்.!

சாத்தியமில்லாத டார்கெட்.!

இவ்வகையான மன அழுத்தத்திற்கு பின்புலமாக டெக் மற்றும் ஐடி நிறுவங்களின் வேலை கலாச்சாரம் தான் காரணம். அதாவது எளிமையாக கூறவேண்டுமெனில் 8 மணி நேரத்திற்கும் மேலான வேலை நேரம், கற்பனை கூட செய்து பார்க்க முடியாத, சந்திக்கவே முடியாது என்று தெரிந்தே அளிக்கப்படும் அளவிலான டார்கெட் அல்லது உற்பத்தித்திறன் ஆகியவைகள் ஆகும்.

கேட்கப்படும் எளிமை கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்தால் போதும்.!

கேட்கப்படும் எளிமை கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்தால் போதும்.!

இது சார்ந்த ஆய்வொன்றை நிகழ்த்தும் முனைப்பின் கீழ், பிளைன்ட் எனப்படும் ஆப் வழியாக 30க்கும் மேற்ப்பட்ட உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் 11,000 க்கும் அதிகமான ஊழியர்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வில் பங்குகொள்ள குறிப்பிட்ட ஆப் வழியாக கேட்கப்படும் எளிமை கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்தால் போதும்.

அது என்ன கேள்வி.?

அது என்ன கேள்வி.?

அதாவது, "நீங்கள் பார்க்கும் வேலை மெல்ல மெல்ல பாதிப்படைய செய்கிறதா.? என்கிற கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். அதுவும் கீழே உள்ள இரண்டு விருப்பங்களில் - ஆம் அல்லது இல்லை - ஒன்றை தேர்வு செய்தால் மட்டுமே போதும். அவ்வளவுதான். போதுமான நபர்களிடம் ஆய்வை முடித்த, பிளைன்ட் ஆப் கணக்கெடுப்பின் முடிவுகளை வெளியிட்டது.

கணக்கெடுப்பின் முடிவு.?

கணக்கெடுப்பின் முடிவு.?

வெளியான முடிவானது, சிலருக்கு அதிர்ச்சியாக இருந்தது மற்றும் சிலருக்கு எதிர்பார்த்த ஒன்றாகவே இருந்தது.அதாவது கணக்கெடுப்பில் பங்கேற்றே பாதிகும் மேற்பட்ட ஊழியர்கள் (57.16%) செய்யும் வேலைப்பளு காரணமாக தாங்கள் எரிந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மிகவும் குறைந்த அளவிலான வேலைப்பளு.?

மிகவும் குறைந்த அளவிலான வேலைப்பளு.?

ட்வீட்ச் (65.38%), என்விடியா (65.38%), எக்ஸ்பீடியா (65%), ஸ்னாப்சாட் (60.40%) மற்றும் சிஸ்கோ (59.70%) ஊழியர்கள் அதிக அளவிலான வேலைப்பளுவை சந்திக்கும் மறுபக்கம் புக்கிங்.காம் (50%), யூபர் (49.52%), பேஸ்புக் (48.97%), ட்விட்டர் (43.90%) மற்றும் பேபால் (41.82%) ஊழியர்கள் குறைந்த அளவிலான வேலைப்பளுவை சந்திப்பதாக தெரிய வந்துள்ளது. மிகவும் குறைந்த அளவிலான வேலைப்பளுவை (38.9%) சந்திக்கும் ஊழியர்கள் நெட்ஃபிக்ஸ்-ல் பணியாற்றி வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
11,487 Tech Workers From 30 Big Tech Companies Confirm That 57% Of Them Are Burnt Out By Work. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X