iPhone 15 Pro Max கேட்ட மகள்.. சீசீ என் வாழ்க்கைய அழிச்சுடீங்க.. மறுத்த தந்தை.. எங்க சார் போகுது இந்த தலைமுறை?
11 வயது சிறுமி ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) கேட்டு தந்தையை எதிர்த்த நிகழ்வு இணையத்தை உலுக்கியுள்ளது. சிறுமி கேட்ட ஐபோனை வாங்கி தர மறுத்த தந்தையை "தனது வாழ்க்கையை அழித்துவிட்டாய்" என்று கூறியது விவாதத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த காலத்தில் குழந்தை தானே, அதற்கு என்ன தெரியும்? அதுவொரு பச்சை மண்ணு என்றெல்லாம் இனி சொல்ல முடியாது. காரணம், இந்த காலத்து குழந்தைகள் எல்லாம் நம்மை விட படு உஷாராக இருக்கின்றனர். உஷாராக இருக்கிறார்கள் என்பதை தாண்டி, இன்னும் சில குழந்தைகள் அடம்பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அடம்பிடிப்பது அதிகரித்தால், என்ன நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்படுவார்கள் என்பதற்கான தெளிவான நிகழ்வு ஒன்று தற்போது அரங்கேறியுள்ளது. வெறும் 11 வயது மட்டுமே ஆன ஒரு சிறுமி, கன்சோல் கேம்களை விளையாட வேண்டுமென்று அவருடைய தந்தையிடம் புதிய ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் வாங்கி தர கோரியிருக்கிறார். ஆனால், தந்தை வாங்கி தர மறுத்திருக்கிறார்.
ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) கேட்டு அடம்பிடித்த 11 வயது சிறுமி:
ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) சாதனம் வாங்கி தர மறுத்த தந்தை, தனது வாழ்க்கையையே அழித்து விட்டதாக அந்த 11 வயது சிறுமி கூறியிருக்கிறார். இந்த சம்பவத்தால் மனமுடைந்த தந்தை, இந்த நிகழ்வு குறித்த தகவல்களை ரெடிட் (Reddit) பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இதை படித்த பல பெற்றோர்கள், மற்றும் நெட்வாசிகள் பல கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
எப்படி ஒரு 11 வயது சிறுமிக்கி கன்சோல் கேம்ஸ் விளையாட ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் தான் வேண்டுமென்ற புரிதல் கிடைத்தது என்ற கேள்வி சிலருக்கு தோன்றியிருக்கும். உண்மை என்ன என்பதை இப்போது பார்க்கலாம். ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் போன்களில் மட்டுமே நம்மால் ரெசிடென்ட் ஈவில், டெத் ஸ்ட்ராண்டிங் மற்றும் அசாசின்ஸ் க்ரீட் மிராஜ் போன்ற பெரிய நிகழ் நேர கன்சோல் கேம்களை விளையாட முடியும்.

ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் தான் வேண்டும்.. என்ன காரணம்?
ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மட்டுமே கன்சோல் கேம்களைக் கையாளக்கூடிய ஒரே ஸ்மார்ட்போன்களின் தொகுப்பாக வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேமர்களுக்கு இது ஒரு பெரிய விஷயமாகும். ஆப்பிள் நிறுவனத்தின் சில விளம்பரங்கள் இதற்குவொரு பெரிய காரணம் என்றாலும் கூட, யூடியூப் இல் பல வீடியோக்களை இதை பற்றி விவரித்துள்ளன.
11 வயது சிறுமிக்கு ஏற்கனவே அவருடைய தந்தை ஒரு ஐபோன் 8 ஸ்மார்ட்போன் முன்பே வாங்கி தந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில், அந்த சிறுமி நண்பர்களுடன் மெசேஜ் செய்வது, வீடியோ கால் பேசுவது, சமூக வலைத்தளங்களில் சர்ஃப் செய்வது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. திடீரென, ஒரு நாள் சிறுமி தனது ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் வேண்டுமென்று அடம்பிடித்திருக்கிறார்.
அவருடைய தந்தை அந்த சிறுமிக்கு ஐபோன் 13 வாங்கி தருவதாக சமாதானம் கூறி இருக்கிறார். அதுவே 600 டாலர் மதிப்பாகிறது என்றும் கூறியிருக்கிறார். பார்ப்பதற்கும் அது ஐபோன் 15 போல தான் இருக்கிறது என்றும் அவர் சிறுமியிடம் விளக்கியுள்ளார். இருப்பினும், அந்த சிறுமி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவளது தோழியிடம் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் தான் இருக்கிறது, எனக்கும் அதே தான் வேண்டுமென்று அழுது ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார் அந்த சிறுமி.
இறுதியில், ஆத்திரமடைந்த சிறுமி, தனது தந்தையிடம் அவர் தனது வாழ்க்கையையே அழித்துவிட்டதாக கூறியிருக்கிறார். இத்தகைய செயலால் மனமுடைந்த தந்தை என்ன செய்வதென்று புரியாமல், அவருடைய குமுறலை இணையத்தில் பதிவிட்டு மன ஆறுதலை தேடிவருகிறார். இது பற்றி உங்களுடைய கருத்து என்ன என்று பதிவிடுங்கள்.


Click it and Unblock the Notifications








