தந்தையை பிளாக்மெயில் செய்த 11 வயது மகன்.. 10 கோடி வேணும் இல்லைனா 'அந்த' படம் எல்லாம் லீக்..

|

உலகளவில் YouTube ஒரு சிறந்த கல்விகற்றல் தளமாகவும் சமீபத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா தொற்றுக்குப் பின்னர் அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறுகிறது. இத்தகைய தளங்கள் பல மாணவர்களுக்கு உதவியாக இருக்கிறது. இதை பலர் நல்ல வழியில் பயன்படுத்துகிறார்கள், இன்னும் சிலர் தேவையில்லாத விஷயங்களைக் கரைத்துக் குடித்துவிடுகின்றனர்.

யூடியூப் மூலம் ஹேக்கிங் தந்திரங்களைக் கற்ற 11 வயது சிறுவன்

யூடியூப் மூலம் ஹேக்கிங் தந்திரங்களைக் கற்ற 11 வயது சிறுவன்

அப்படி, யூடியூபை தவறாகப் பயன்படுத்திய காசியாபாத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் செய்த காரியம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த சிறுவன் யூடியூப் மூலம் ஹேக்கிங் தந்திரங்களைக் கற்றுக்கொண்டு தனது சொந்த தந்தையின் அக்கௌன்ட்டை ஹேக் செய்து, மிரட்டி பணம் பறிக்க முயன்றதோடு இல்லாமல், அவரை பிளாக்மெயிலும் செய்துள்ளான்.

ரூ. 10 கோடி பணம் கேட்டு மிரட்டல்

ரூ. 10 கோடி பணம் கேட்டு மிரட்டல்

இந்த சிக்கலான நிலைமையைச் சரி செய்ய 10 கோடி பணம் கேட்டு மிரட்டியிருக்கிறான். சிறுவன் கேட்ட 10 கோடி பணம் வழங்கப்படாவிட்டால், தந்தை அக்கௌன்ட்டில் இருந்து எடுக்கப்பட்ட 'பிரைவேட்' புகைப்படங்கள் மற்றும் குடும்ப ரகசியங்களை இணையம் முழுவதும் வெளியிட்டுவிடுவதாக அச்சுறுத்தியுள்ளான். மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்த காரணத்தால் தந்தைக்கு அது அவரின் மகன் தான் என்று கண்டுபிடிக்கமுடியவில்லை.

ஆதார் மையத்திற்கு செல்லும் மக்கள் கவனத்திற்கு: இனி 'இந்த' அப்டேட்-க்கு எந்த ஆவணமும் தேவையில்லை.!ஆதார் மையத்திற்கு செல்லும் மக்கள் கவனத்திற்கு: இனி 'இந்த' அப்டேட்-க்கு எந்த ஆவணமும் தேவையில்லை.!

மிரட்டல் தொகையை கேட்டு அரண்டு போன காவல்துறை

மிரட்டல் தொகையை கேட்டு அரண்டு போன காவல்துறை

எதோ மர்மநபர் தான் தனது அக்கௌன்ட்டை ஹேக் செய்து மிரட்டி பணம் பறிக்க முயல்வதாக நினைத்து தந்தை யாருக்கும் தெரியாமல்,சத்தமில்லாமல் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசும் மிரட்டல் தொகையை கேட்டு அரண்டு போய்விட்டதாம். எது? 10 கோடி கேட்டு மிரட்டலா என்று அதிர்ந்துபோன காவல்துறை, உடனடியாக வழக்கை விசாரிக்க முடிவு செய்தது.

அக்கௌன்ட் பாஸ்வோர்டை மாற்றிய கில்லாடி ஹேக்கர்

அக்கௌன்ட் பாஸ்வோர்டை மாற்றிய கில்லாடி ஹேக்கர்

பாதிக்கப்பட்டவர் தனது மின்னஞ்சல் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும், கணக்கிலிருந்து அவரது தனிப்பட்ட படங்கள் அனைத்தும் எடுக்கப்பட்டுவிட்டதாகவும், படங்களை அணுகிய பிறகு அவரின் அக்கௌன்ட் பாஸ்வோர்டு மற்றும் கணக்குடன் இணைப்பிலிருந்த தொலைப்பேசி எண்ணையும் ஹேக்கர்கள் மாற்றிவிட்டனர் என்று புலம்பியுள்ளார்.

WhatsApp போட்டோஸை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்க இதை பண்ணுங்க! ஈசி டிப்ஸ்!WhatsApp போட்டோஸை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்க இதை பண்ணுங்க! ஈசி டிப்ஸ்!

போலீசார் கவனித்த அதிர்ச்சியூட்டும் விஷயம்

போலீசார் கவனித்த அதிர்ச்சியூட்டும் விஷயம்

பாதிக்கப்பட்டவரின் கூற்றுப்படி, அவரது மின்னஞ்சல் கணக்கு வெள்ளிக்கிழமை (ஜனவரி 1) ஹேக் செய்யப்பட்டது. அதற்கு பின்னர் 10 கோடி ரூபாய் பணம் கேட்டு தொடர்ச்சியாக மிரட்டல் வந்துள்ளது என்று போலீசில் தெரிவித்துள்ளார். போலீசார் இந்த வழக்கைக் கவனமாக விசாரிக்கத் தொடங்கிய போது ஒரு அதிர்ச்சியூட்டும் விஷயத்தை போலீசார் கவனித்துக் குழம்பியுள்ளார்.

ஒரே ஐபி முகவரியா? எங்கயோ இடிக்கிதே..

ஒரே ஐபி முகவரியா? எங்கயோ இடிக்கிதே..

ஹேக்கர்களின் ஐபி முகவரியும், பாதிக்கப்பட்டவரின் ஐபி முகவரியும் வீட்டிற்கு ஒத்ததாக இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த மிரட்டல் வேலையை அவரது குடும்பத்தைச் சேர்ந்த யாரோ ஒருவர் தான் செய்து வருகின்றனர் என்று போலீஸ் கணித்துள்ளது. அச்சுறுத்தல் மின்னஞ்சல் ஒரே வீட்டிலிருந்து அனுப்பப்பட்டது என்று போலீஸ் தெளிவானது.

காவல்துறையிடம் சிக்கிய 11 வயது ஹேக்கர் சிறுவன்

காவல்துறையிடம் சிக்கிய 11 வயது ஹேக்கர் சிறுவன்

போலீசார் குடும்பத்தினரை அழைத்து விசாரணையைத் தொடங்கியபோது குடும்பத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் காவல்துறையிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டான். காசியாபாத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் 5 ஆம் வகுப்பு படித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சைபர் கிரைமில் சிக்குவதைத் தவிர்ப்பது எப்படி என்ற ஆன்லைன் அமர்வில் சிறுவன் கலந்து கொண்டுள்ளான் என்றும் கூறப்பட்டுள்ளது.

குற்றவியல் மிரட்டல், பெண்களை அவமதிப்பது போன்ற வழக்குகள் பதிவு

குற்றவியல் மிரட்டல், பெண்களை அவமதிப்பது போன்ற வழக்குகள் பதிவு

சைபர் கிரைம் கலையில் தேர்ச்சி பெற அவர் யூடியூபில் ஹேக்கிங் தந்திரங்கள் கொண்ட ஆன்லைன் வீடியோக்களை தவறாமல் பார்த்து வந்துள்ளார் என்றும் போலீஸ் தெரிவித்துள்ளது. குற்றவியல் மிரட்டல், பெண்களை அவமதிப்பது மற்றும் சமாதானத்தை மீறுவதற்கு வேண்டுமென்றே அவமதிப்பது போன்ற குற்றங்களின் பெயரில், காஜியாபாத்தின் ஐ.டி சட்டத்தின் பிரிவு 66 டி உள்ளிட்ட ஐபிசியின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு இப்போது பதிவு செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
11-year-old boy learns hacking tricks to blackmail his own father and asked for ransom amount of Rs 10 crores : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X