ஆந்திராவை ஸ்பெஷலாக கவனித்த அம்பானி.. அடுத்தடுத்து செய்த தரமான செய்கை!

|

குஜராத் அளவிற்கு இல்லை என்றாலும் கூட முகேஷ் அம்பானி (Mukesh Ambani), ஆந்திர மாநிலத்தை கொஞ்சம் ஸ்பெஷலாகத் தான் கவனித்து உள்ளார்!

உங்களில் சிலருக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கலாம். குஜராத்தின் 33 மாவட்டங்களிலும் ஜியோவின் ட்ரூ 5ஜி நெட்வொர்க் (Jio True 5G Network) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது!

ஸ்பெஷல் கவனிப்பு!

ஸ்பெஷல் கவனிப்பு!

வேறு எந்த மாநிலத்திற்கும் இல்லாத "ஸ்பெஷல் ஆன கவனிப்பு" குஜராத்திற்கு மட்டும் ஏன்? என்கிற கேள்விக்கான பதில், நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்று நம்புகிறோம்!

இதற்கிடையில் ஆந்திரா பிரதேசத்திற்கும் கூட இதே போன்ற ஒரு ஸ்பெஷலான கவனிப்பு கிடைத்தது. அந்த கவனிப்பு - குஜராத்திற்கு கொடுத்த அளவு இல்லை; ஆனாலும் ஜியோ நிறுவனம் தனது 5ஜி சேவைகளை ஆந்திராவில் உள்ள 4 நகரங்களில் அறிமுகப்படுத்தியது

அறியாதோர்களுக்கு, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருமலை திருப்பதி, விசாகப்பட்டினம், விஜயவாடா மற்றும் குண்டூர் ஆகிய நகரங்களில் ஜியோ 5ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அம்பானியே வந்து சொன்னாலும் கூட நம்பிடாதீங்க.. 5ஜி தொடர்பான 4 பச்சை பொய்கள்!அம்பானியே வந்து சொன்னாலும் கூட நம்பிடாதீங்க.. 5ஜி தொடர்பான 4 பச்சை பொய்கள்!

அடுத்த 1 வாரத்திற்குள்!

அடுத்த 1 வாரத்திற்குள்!

ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள 4 நகரங்களில் ஜியோ 5ஜி அறிமுகம் செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள், ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் தனது ட்ரூ 5ஜி நெட்வொர்க்கை (True 5G Network) மேலும் 11 இந்திய நகரங்களுக்கு விரிவுபடுத்தி உள்ளது.

அந்த பட்டியலில், நீங்கள் வசிக்கும் நகரமும் உள்ளதா? புதிதாக சேர்ந்த 11 நகரங்களோடு சேர்த்து ஜியோவின் 5ஜி சேவைகள் ஆனது மொத்தம் எத்தனை நகரங்களில் அணுக கிடைக்கிறது? இதோ விவரங்கள்:

நேற்றுவரை 11.. இன்று முதல் 26!

நேற்றுவரை 11.. இன்று முதல் 26!

ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி சேவைகள் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்டு, தொடர்ச்சியாக நாடு முழுவதும் உள்ள நகரங்களில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

நேற்றுவரையிலாக ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவைகள் ஆனது, நாடு முழுவதும் 15 நகரங்களில் அணுக கிடைத்தது. தற்ப்போது ஜியோ 5ஜி சேவைகள் ஆனது மேலும் 11 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

5G Towers: உண்மையை உளறிட்டாங்க! ஏர்போர்ட் அருகில் 5ஜி டவர்களை வைக்க வேண்டாம்! மீறினால்?5G Towers: உண்மையை உளறிட்டாங்க! ஏர்போர்ட் அருகில் 5ஜி டவர்களை வைக்க வேண்டாம்! மீறினால்?

அந்த 11 நகரங்களின் பெயர்கள் என்ன?

அந்த 11 நகரங்களின் பெயர்கள் என்ன?

லக்னோ, திருவனந்தபுரம், மைசூரு, நாசிக், அவுரங்காபாத், சண்டிகர், மொஹாலி, பஞ்ச்குலா, ஜிராக்பூர், கரார் மற்றும் டெராபஸ்ஸி ஆகிய 11 நகரங்களில் ஜியோ நிறுவனம் அதன் 5G நெட்வொர்க்கை அறிமுகம் செய்துள்ளது.

அதுமட்டுமின்றி - மொஹாலி, பஞ்ச்குலா, ஜிராக்பூர், கரார், டெராபஸ்ஸி, திருவனந்தபுரம், மைசூரு, நாசிக், அவுரங்காபாத், சண்டிகர் போன்ற நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்திய முதல் மற்றும் ஒரே ஆப்ரேட்டராகவும் ரிலையன்ஸ் ஜியோ மாறியுள்ளது!

5ஜி-க்கான நகரங்களை ஜியோ எப்படி தேர்வு செய்கிறது?

5ஜி-க்கான நகரங்களை ஜியோ எப்படி தேர்வு செய்கிறது?

எந்தெந்த நகரங்கள் முக்கியமான சுற்றுலாத் தலங்களாகவும், நமது நாட்டின் முக்கிய கல்வி மையங்களாகவும் உள்ளனவோ அதுவே ஜியோ நிறுவனத்தின் முக்கிய குறிகள் ஆகும்.

அதுமட்டுமின்றி, இ-கவர்னன்ஸ் (e-governance), கல்வி, ஆட்டோமேஷன், ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ், கேமிங், சுகாதாரம், விவசாயம், ஐடி போன்ற ஆகிய துறைகளில் எந்தெந்த நகரங்களின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கிறதோ அந்த நகரங்களை முதலில் சென்றடைய வேண்டும் என்றும் ஜியோ நினைக்கிறது.

Google-ல உங்க சேர்ச் ஹிஸ்டரி கொஞ்சம் கேவலமா இருக்குமா? இனி அதை மட்டும் டெலிட் பண்ணா போதாது! இதையும் செய்யணும்!Google-ல உங்க சேர்ச் ஹிஸ்டரி கொஞ்சம் கேவலமா இருக்குமா? இனி அதை மட்டும் டெலிட் பண்ணா போதாது! இதையும் செய்யணும்!

ஜியோவின் ட்ரூ 5ஜி நெட்வொர்க் கிடைக்கும் அனைத்து நகரங்களின் பட்டியல் இதோ:

ஜியோவின் ட்ரூ 5ஜி நெட்வொர்க் கிடைக்கும் அனைத்து நகரங்களின் பட்டியல் இதோ:

- சென்னை
- பெங்களூரு
- டெல்லி
- காசியாபாத்
- குருகிராம்
- நொய்டா
- மும்பை
- கொல்கத்தா
- வாரணாசி
- ஹைதராபாத்
- புனே
- நாததுவாரா
- கொச்சி
- குஜராத் (முழுவதும்)
- விசாகப்பட்டினம்
- திருமலை திருப்பதி
- விஜயவாடா
- குண்டூர்
- லக்னோ
- திருவனந்தபுரம்
- மைசூர்
- நாசிக்
- அவுரங்காபாத்
- சண்டிகர்
- மொஹாலி
- பஞ்சகுலா
- ஜிராக்பூர்
- காரர்
- டெராபஸ்ஸி

மேற்கண்ட நகரங்களில் உள்ளீர்கள் என்றால்.. ஜியோ 5ஜி கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

மேற்கண்ட நகரங்களில் உள்ளீர்கள் என்றால்.. ஜியோ 5ஜி கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

ஸ்பெஷலாக ஒன்றும் செய்ய வேண்டாம்! ரிலையன்ஸ் ஜியோவின் 5G சேவைகள் ஆனது நிறுவனத்தின் அனைத்து 4G பயனர்களுக்கும் கிடைக்கின்றன.

அதாவது ஜியோவின் 4G பயனர்கள், நிறுவனத்தின் 5G நெட்வொர்க்கை அணுக 5ஜி சிம் கார்டுக்கு அப்கிரேட் ஆக வேண்டிய அவசியமில்லை என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமே தெளிவுபடுத்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
11 More Cities Now Gives You Jio 5G Network After Jio 5G services launched in 4 cities across Andhra Pradesh

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X