அட்டகாசமான 11 ஷார்ட்கட்ஸ்: இத்தனை நாட்கள் இது தெரியாம போச்சே!

விண்டோஸ் பயனர்களுக்கு: கண்ட்ரோல் + செட் என்பதை அழுத்துவதின் மூலம் கணினியில் நீங்கள் செய்த ஒரு செயலை அண்டூ செய்யலாம்.

|

வெற்றிக்கு வேண்டுமானால் ஷார்ட்கட் (குறுக்கு வழி) இல்லாமல் போகலாம். ஆனால் அந்த வெற்றியை அடைய வழிவகுத்து கொடுக்கும் பணி, வேலை அல்லது உத்தியோகதிற்கு ஏகப்பட்ட ஷார்ட்கட்கள் உள்ளன. நம்மில் பலர் ஷார்ட்கட்ஸ்களை சோம்பேறித்தனம் என்று நினைத்து கொண்டு உள்ளன. உண்மையில் அது 'ஸ்மார்ட் வொர்க்' ஆகும்!

அட்டகாசமான 11 ஷார்ட்கட்ஸ்: இத்தனை நாட்கள் இது தெரியாம போச்சே!

இன்னும் நம்பிக்கை வரவில்லையா? சமீபத்தில் ப்ரெயின்ஸ்கேப்பினால் (Brainscape) நிகழ்த்தப்பட்ட ஒரு ஆய்வானது, ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வரை கம்ப்யூட்டரின் முன் பணியாற்றும் ஒரு நபர், ஆண்டுக்கு சுமார் 64 மணி நேரத்தை சுட்டிக்காக (மவுஸ்) செலவு செய்வதாக கண்டு அறிந்து உள்ளது.

எனக்கும் ஷார்ட்கட்ஸ் தெரியுமே!
காப்பி செய்து பேஸ்ட் செய்வதற்கு கண்ட்ரோல் + சி மற்றும் கண்ட்ரோல் + வி, மொத்தமாக செலெக்ட் செய்ய கண்ட்ரோல் + ஏ, மீதி மிச்சம் ஏதுமின்றி முழுமையாக டெலிட் செய்ய ஆல்ட் + டெலிட், அவ்வளவுதானே ஷார்ட்கட்ஸ் என்று மிகவும் பிரபலமான சில விசைப்பலகை குறுக்குவழிகளை அறிந்து வைத்து இருந்தால் மட்டும் போதாது. சில சாமர்த்தியமான ஷார்ட்கட்ஸ்களையும் அறிந்து வைத்திருக்க வேண்டும். அப்படியான ஒரு முயற்சி தான் இந்த தொகுப்பு.

11. ரீடூ செய்வது எப்படி?

11. ரீடூ செய்வது எப்படி?

விண்டோஸ் பயனர்களுக்கு: கண்ட்ரோல் + செட் என்பதை அழுத்துவதின் மூலம் கணினியில் நீங்கள் செய்த ஒரு செயலை அண்டூ செய்யலாம். அதுவே ரீடூ செய்ய என்ன செய்ய வேண்டும்? - வெறுமனே கண்ட்ரோல் + வ்யை (Ctrl + Y) அழுத்தினால் போதும். மேக் பயனர்களுக்கு: கமாண்ட் + ஷிப்ட் + இசெட்

10. ஆக்டிவ் விண்டோவின் ஸ்க்ரீன் ஷர்ட்டை எடுப்பது எப்படி?

10. ஆக்டிவ் விண்டோவின் ஸ்க்ரீன் ஷர்ட்டை எடுப்பது எப்படி?

விண்டோஸ் பயனர்களுக்கு: கணினி திரையின் ஒட்டுமொத்த காட்சியையும் ஸ்க்ரீன் ஷார்ட் எடுக்க கீபோட்ரில் உள்ள பிரிண்ட் ஸ்க்ரீன் (PrtSc) பொத்தான் பயன்படும் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் உங்களின் ஆக்டிவ் விண்டோவையோ மட்டும் ஸ்க்ரீன் ஷார்ட் எடுப்பது எப்படி என்பதை அறிவீர்களா? பெரிதாக ஒன்றுமில்லை - ஆல்ட் + பிரிண்ட் ஸ்க்ரீன் பொத்தானை அழுத்தினால் போதும். மேக் பயனர்களுக்கு: கமாண்ட் + ஷிப்ட் + 4 பொத்தான்களை அழுத்திய பின்னர் ஸ்பேஸ் பொத்தானை அழுத்தவும். இது உங்கள் கர்சரை க்ராஸ்ஹேராக மாற்றும். பின் நீங்கள் கைப்பற்ற விரும்பும் விண்டோவை கிளிக் செய்யவும்.

09. ஸ்நிப்பிங் டூல்

09. ஸ்நிப்பிங் டூல்

விண்டோஸ் 10 க்கு மட்டும்: ஆக்ட்டிவாக உள்ள திரையின் பகுதிகளை கைப்பற்ற, விண்டோஸ் கீ + ஷிப்ட் + எஸ் பொத்தானை அழுத்தி, நீங்கள் சேமிக்க விரும்பும் திரையின் பகுதியை தேர்ந்தெடுக்கவும்.மேக் பயனர்களுக்கு : கமாண்ட் + ஷிப்ட் + 4 ஐ அழுத்தவும்/

08. ஒரு புதிய போல்டரை உருவாக்குவது எப்படி?

08. ஒரு புதிய போல்டரை உருவாக்குவது எப்படி?

விண்டோஸ் பயனர்களுக்கு: ஒரு புதிய போல்டரை உருவாக்க 3 விசைகளை ஒன்றாக அழுத்தினால் போதும் - அது கண்ட்ரோல் + ஷிப்ட் + என் ஆகும். மேக் பயனர்களுக்கு: ஷிப்ட் + கமாண்ட் + என் ஆகும். இது பைன்டரில் ஒரு புதிய போல்டரை திறக்கும்.

07. ஈமோஜி கீபோர்ட்டை வெளிக்கொணர்வது எப்படி?

07. ஈமோஜி கீபோர்ட்டை வெளிக்கொணர்வது எப்படி?

விண்டோஸ் 10 க்கு மட்டும்: விண்டோஸ் கீ உடன் முற்றுப்புள்ளி பொத்தானை அழுத்த எமோஜி விசைப்பலகை வெளிப்படும். இது விண்டோஸ் தளத்தின் முந்தைய பதிப்புகளில் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது. மேக் பயனர்களுக்கு: நீங்கள் எமோஜியை நுழைக்க விரும்பும் டெக்ஸ்ட் பீல்டில் கர்சரை வைக்கவும். இப்போது அவற்றை அணுக கமாண்ட் + கண்ட்ரோல் + ஸ்பேஸ்பாரை அழுத்தவும்.

06. அனைத்து விண்டோக்களையும் மினிமைஸ் செய்வது எப்படி?

06. அனைத்து விண்டோக்களையும் மினிமைஸ் செய்வது எப்படி?

விண்டோஸ் பயனர்களுக்கு: நீங்கள் உடனடியாக அனைத்து திறந்த விண்டோக்களையும் மினிமைஸ் செய்ய வேண்டும் என்றால் - விண்டோஸ் லோகோ கீ + எம் அழுத்தினால் போதும். மேக் பயனர்களுக்கு: ஆப்ஷன் + கமாண்ட் + எம் பொத்தான்களை அழுத்தவும்.

05. விண்டோஸை லாக் செய்வது எப்படி?

05. விண்டோஸை லாக் செய்வது எப்படி?

விண்டோஸ் பயனர்களுக்கு: மினிமைஸ் செய்வது போதாது என்றால் லாக் செய்யலாம். அதை நிகழ்த்த விண்டோஸ் லோகோ கீ + எல் ஐ அழுத்தவும். மேக் பயனர்களுக்கு: கண்ட்ரோல் + ஷிப்ட் + பவர்.

04. புதிய விர்ச்சுவல் டெஸ்க்டாப்பை சேர்ப்பது எப்படி (விண்டோஸ் 10)?

04. புதிய விர்ச்சுவல் டெஸ்க்டாப்பை சேர்ப்பது எப்படி (விண்டோஸ் 10)?

நீங்கள் நிறைய பயன்பாடுகளை திறந்திருந்தால் அல்லது வேறுபட்ட பணிகளை உங்கள் கணினியில் பயன்படுத்தினால், விர்ச்சுவல் டெஸ்க்டாப் அம்சம் ஆனது ஒத்திவைக்கப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு வசதியான வழியை வழங்குகின்றன. அப்படியான ஒரு புதிய விர்ச்சுவல் டெஸ்க்டாப்பை ஆட் செய்ய, விண்டோஸ் லோகோ கீ + கண்ட்ரோல் + டி பொத்தான்களை அழுத்தவும். விண்டோஸ் லோகோ கீ + எப்4 பொத்தானை அழுத்த தற்போதைய மெய்நிகர் டெஸ்க்டாப் மூடப்படும்.

03. க்ரோமில் மறைநிலை பயன்முறையை திறப்பது எப்படி?

03. க்ரோமில் மறைநிலை பயன்முறையை திறப்பது எப்படி?

விண்டோஸ் பயனர்களுக்கு: கூகுள் க்ரோமில் மறைநிலைப் பயன்முறையில் ஒரு புதிய டாப் ஐ திறக்க, கண்ட்ரோல் + ஷிப்ட் + என் ஐ அழுத்தவும். மேக் பயனர்களுக்கு: கமாண்ட் + ஷிப்ட் + என்.

02. சமீபத்தில் மூடப்பட்ட டாப் ஐ திறக்க?

02. சமீபத்தில் மூடப்பட்ட டாப் ஐ திறக்க?

விண்டோஸ் பயனர்களுக்கு: நீங்கள் ஒரு டாப் ஐ தெரியமல் க்ளோஸ் செய்து விட்டால், கவலை வேண்டாம். வெறுமனே - கண்ட்ரோல் + ஷிப்ட் + டி ஐ அழுத்தவும். அது மீண்டும் திறக்கப்படும். இப்படியாக நீங்கள் மூடிய கடைசி 10 டாப்களை மட்டுமே நீங்கள் திறக்கலாம். மேக் பயனர்களுக்கு: காம்மாண்ட் + ஷிப்ட் + டி.

 01. புதிய டாப்க்குள் செல்லாமலேயே இணைப்புகளைத் திறப்பது எப்படி?

01. புதிய டாப்க்குள் செல்லாமலேயே இணைப்புகளைத் திறப்பது எப்படி?

விண்டோஸ் பயனர்களுக்கு:கூகுளில் நீங்கள் ஒரு ​​இணைப்பைக் கிளிக் செய்ய அது ஒரு டாப்பில் திறக்கப்படும். திறக்கிறது. ஆனால், புதிய டாப்க்குள் செல்லாமலேயே இணைப்புகளைத் திறக்க ஒரு வழி இருக்கிறது - பெரிதாக ஒன்றுமில்லை குறிப்பிட்ட இணைப்பை கிளிக் செய்யும் பொது கண்ட்ரோல் பொத்தானை அழுத்திக் கொள்ளவும். மேக் பயனர்களுக்கு: கமாண்ட் பொத்தானை அழுத்திக்கொண்டே இணைப்பை கிளிக் செய்யவும்

Best Mobiles in India

English summary
11 Keyboard Combinations That Can Make Your Life Way Easier: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X