கூகுள் டாக்ஸ் தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் 11 அம்சங்கள்.!

Written By:
  X

  ரெகுலராக இண்டர்நெட்டை உபயோகிப்பவர்களுக்கு கூகுள் டாக்குமெண்ட் குறித்து தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. நம்முடைய அன்றாட பணிகளில் கூகுள் டாக்குமெண்டின் பயன் அளப்பறியாது. ஆனால் இதில் அடங்கியுள்ள ஏராளமான வசதிகள் குறித்து பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

  கூகுள் டாக்ஸ் தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் 11 அம்சங்கள்.!

  "இப்போ.. இப்போவே" அன்இன்ஸ்டால் செய்ய வேண்டிய 5 ஆப்ஸ்கள்.!

  கூகுள் டாக்குமெண்டில் உள்ள ஆட்ஸ்-ஆன் பகுதியில் அடங்கியுள்ள ஏராளமான வசதிகளில் தற்போது 11 முக்கிய வசதிகள் குறித்து பார்ப்போம்

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  டெம்ப்ளேட்ஸ்: (Templates)

  கூகுள் டாக்குமெண்டில் ஏராளமான இலவச டெம்ப்ளேட்டுக்கள் குவிந்து கிடக்கின்றனர். வேலைக்கு அப்ளிகேசன் போட பயோடேட்டா தயாரிக்க, பிசினஸ் லட்டர் எழுத, புரொஜக்ட் சப்மிட் செய்ய, மீட்டிங்கில் நோட்ஸ் எடுக்க என ஏராளமான டிசைன்களில் டெம்ப்ளேட்டுக்கள் கூகுள் டாக்குமெண்டில் குவிந்து கிடக்கின்றன. அவற்றை உங்கள் தேவைக்கேற்ப எடுத்து பயன்படுத்தி பாருங்கள். புது அனுபவமாக இருக்கும்

  க்ளியர் ஃபார்மேட்டிங் வசதி: (Clear Formatting)

  வேறொரு இணையதளத்தில் இருந்தோ அல்லது டாக்குமெண்டில் இருந்தோ, கூகுள் டாக்குமெண்டில் காப்பி பேஸ்ட் செய்யும்போது அதில் உள்ள டெக்ஸ்ட் அல்லாத ஒருசில ஃபார்மேட்டுக்களை நீங்கல் மேனுவலாக ஃபார்மேட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கூகுள் டாக்குமெண்டில் ஃபார்மேட் என்ற பகுதிக்கு சென்று அதில் உள்ள க்ளியர் ஃபார்மேட் என்பதை க்ளிக் செய்தால், அனைத்து வித்தியாசமான ஃபார்மேட்களும் டெக்ஸ்ட் ஆக மாறிவிடும்

  ரிசர்ச் டூல்: (Research tools)

  நீங்கள் டாக்குமெண்ட்டில் ஒரு குறிப்பிட்ட வகை கட்டுரையை எழுதி கொண்டிருக்கும்போது திடீரென அதில் ஒரு சந்தேகம் ஏற்பட்டால் அதை ஆன்லைனில் தேடுவீர்கள். அதற்கென நீங்கள் தனியாக ஒரு டேப் ஓப்பன் செய்து தேட வேண்டாம். கூகுள் டாக்குமெண்டில் உள்ள ரிசர்ச் டூல் உங்களுக்கு உதவும். இதற்கு நீங்கள் டூல்ஸ் - ரிசர்ச் சென்றால் தேர்வு செய்யப்பட்ட வார்த்தை அல்லது வாக்கியம் குறித்த தகவல்களை நீங்கள் ஆன்லைனில் டாக்குமெண்டில் இருந்து வெளியேறாமலேயே தெரிந்து கொள்ளலாம்

  புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

  ஃபுட்நோட்ஸ் (Footnotes):

  ஒரு டாக்குமெண்ட் எழுதி கொண்டிருக்கும்போது அதில் இடைச்செறுகலாக ஏதாவது இணைக்க வேண்டியது இருந்தால் நாம் ஃபுட்நோட்ஸ் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருப்போம். இணைக்க வேண்டிய இடத்தில் ஒரு நம்பரை போட்டுவிட்டு அதற்கான டெக்ஸ்ட்களை கடைசியில் பதிவு செய்வோம். இந்த ஃபுட்நோட் வசதியும் கூகுள் டாக்குமெண்டில் உள்ளது

  சஜஸ்ட்டிங் மோட் (Suggesting Mode):

  மைக்ரோசாப்ட் வேர்டில் இருக்கும் கமெண்ட் பகுதி போல கூகுளில் சஜஸ்ட்டிங் மோட் உள்ளது. உங்களது டாக்குமெண்ட் குறித்த மற்றவர்களின் விமர்சனங்கள் பதிவு செய்யப்படும் பகுதிதான் இது. இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எடிட்டிங் மோடி சென்று அதில் உள்ள பென்சில் ஐகானை க்ளிக் செய்து அதில் சஜஸ்ட்டிங் மோட் என்று ஒரு ஆப்சன் இருக்கும். அதை எனேபிள் செய்தால் போதும்

  ரிவிசன் ஹிஸ்ட்ரி (Revision History):

  நீங்கள் உருவாக்கிய ஒரு டாக்குமெண்டிலோ அல்லது மற்றவர்கள் உருவாக்கிய ஒரு டாக்குமெண்டிலோ சில திருத்தங்கள் செய்ய வேண்டுமானால் இந்த வசதியை தேர்வு செய்யலாம். திருத்தங்கள் தேவையில்லை மீண்டும் பழைய டாக்குமெண்டே வேண்டும் என்றாலும் அதற்கும் இதில் ஆப்சன் உண்டு. இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது File → View Revision History சென்றால் போதும்

  வாய்ஸ் டைப்பிங்: (Voice Typing):

  கூகுள் டாக்குமெண்டில் வாய்ஸ் டைப்பிங் இருப்பது பலருக்கு தெரியாது. கூகுள் க்ரோம் பயன்படுத்தி ஒரு மைக்ரோபோன் இருந்தால் போதும் நீங்கள் வாய்ஸ் மூலம் டைப்பிங் செய்யலாம். கமா, புல்ஸ்டாப் வேண்டும் என்றாலும் அந்தந்த வார்த்தைகளை பயன்படுத்தினால் போதும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது கூகுள் டாக்குமெண்டில் Tools → Voice Typing சென்று வாய்ஸை ஸ்டார்ட் செய்ய வேண்டியதுதான்

  கமெண்ட்ஸ் (Comments):

  உங்களுடைய டாக்குமெண்ட் பலருக்கு ஷேர் செய்யப்படும்போது அதை படிப்பவர்கள் கூறும் கமெண்ட் மற்றும் அந்த கமெண்ட்டுக்கு நீங்கள் அளிக்கும் பதில் ஆகிய வசதிகளும் இந்த கூகுள் டாக்குமெண்டில் உண்டு. மேலும் டாகுமெண்டில் பதிவு செய்யப்படும் கமெண்ட்ஸ்களை எடிட் செய்யவோ அல்லது டெலிட் செய்யவோ உங்களால் முடியும்

  ஷார்ட் கட்ஸ் (Creat custom shortcuts):

  கூகுள் டாக்குமெண்டில் ஏற்கனவே பலவிதமான ஷார்ட்கட்ஸ்கள் ஏராளமான இருக்கின்றது. இருப்பினும் நீங்கள் விரும்பினால் உங்களுக்கு தேவையான ஷார்ட்கட்ஸ்களை நீங்களே உருவாக்கி கொள்ளலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது Tools → Preferences → Automatic Substition ஆகியவைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

  இமேஜ் எடிட்டிங் (Image Editing):

  கூகுள் டாக்குமெண்டில் இமேஜ் இன்சர்ட் செய்யலாம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த இமேஜ்களை அதில் இருக்கும் டூல்களை கொண்டு எடிட் செய்யலாம். பார்டர், மாஸ்க், ஆகியவை இதில் உள்ள இதுவொரு மினி போட்டோஷாப் என்று கூறலாம்

  டிக்ஷ்னரி (Dictionary):

  கூகுள் டாக்குமெண்ட்டை நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும்போதே, ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் உடனே அதில் உள்ள டிக்ஷனரி டூல் மூலம் அதன் அர்த்தத்தை தெரிந்து கொள்ளலாம். இதற்கு குறிப்பிட்ட வார்த்தையை செலக்ட் செய்துவிட்டு டிக்ஷனரியை பயன்படுத்தினால் போதும்

  புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  Google Docs is a nice platform and here we list 11 features of the app that you did not know so far.

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more