Home
News

108mp Vs 12mp: ஆண்ட்ராய்டு கேமராவை விட ஐபோன் கேமரா ஏன் சிறந்தது?- கேமராவில் இதை கவனிப்பது மிக அவசியம்!

பல்வேறு நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு புதுப்புது அம்சங்களோடு வெவ்வேறு விலைப் பிரிவின் கீழ், ஆண்ட்ராய்டு போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. ஆனாலும் கூட எந்தவொரு மாடலாலும் ஆப்பிளின் ஐபோனுக்கு அருகில் நெருங்க முடியவில்லை என்பதே நிதர்சனம். இதற்கு ஒரு சின்ன எடுத்துக் காட்டு சொல்லலாம். ஆண்ட்ராய்டு போன்களில் உள்ள 108 எம்பி கேமராவில் எடுக்கப்படும் புகைப்படம் ஐபோனின் 12 எம்பி கேமரா புகைப்படத்துக்கு ஈடாகாது. அது எப்படி என்ற கேள்வி வருகிறதா? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

ஒரு மெகாபிக்சலில் 10 லட்சம் பிக்சல்கள்

ஒரு மெகாபிக்சலில் 10 லட்சம் பிக்சல்கள்

கேமராவில் உள்ள ஒரு மெகாபிக்சல் என்பது 10 லட்சம் பிக்சல்களை உள்ளடக்கியது. புகைப்படத்தை ஆழமாக ஜூம் செய்யும் போது காட்சி மங்களாகி கட்டம் கட்டமாக தோன்றும். அந்த ஒவ்வொரு கட்டமும் ஒரு பிக்சல் ஆகும். அதன்படி நீங்கள் 10 மெகாபிக்சல் கேமராவில் புகைப்படம் எடுத்தால் அதில் 1 கோடி பிக்சல்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி என்றால் 108 மெகாபிக்சல் கேமராவில் சுமார் 10 கோடி பிக்சல்கள் வரை இருக்கும்.

108 எம்பி கேமராவில் சுமார் 10 கோடி பிக்சல்கள்

108 எம்பி கேமராவில் சுமார் 10 கோடி பிக்சல்கள்

மெகாபிக்சல்கள் அதிகமாக செல்ல செல்ல நீங்கள் புகைப்படத்தை ஜூம் செய்தால், எடுக்கும் புகைப்படத்தில் துல்லியத்தை பெறலாம். குறைந்த மெகாபிக்சல் கேமராவில் புகைப்படத்தை பதிவு செய்யும்பட்சத்தில் இரண்டு அல்லது மூன்று ஜூம்களிலேயே புகைப்படம் மங்கலாகி விடுவதை பார்க்க முடியும். அப்படி என்றால் 108 எம்பி கேமராவில் சுமார் 10 கோடி பிக்சல்கள் இருக்கிறது அதுதானே சிறந்த கேமரா? என்கிற கேள்வி வரலாம். ஆனால் அதுதான் இல்லை.

சென்சாரை கவனிப்பது மிக அவசியம்

சென்சாரை கவனிப்பது மிக அவசியம்

கேமராவை பொறுத்தவரை எத்தனை மெகாபிக்சல் என்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட அதன் சென்சார்களும் முக்கியம். காரணம் அனைத்து பிக்சல்களையும் ஒருங்கிணைத்து துல்லியமான காட்சிகளை வழங்குவது சென்சார் தான். ஸ்மார்ட்போன் வாங்கும் போது கேமரா விவரங்களை சற்று ஆராய்ந்தால் இந்த தகவல் நமக்கும் கிடைக்கும். பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் சாம்சங் சென்சார் மற்றும் சோனி சென்சார்கள் தான் பயன்படுத்தப்படுகிறது.

பிக்சல்களை ஒருங்கிணைக்கும் சென்சார்

பிக்சல்களை ஒருங்கிணைக்கும் சென்சார்

ஆனால், ஐபோனில் 12 மெகாபிக்சல் கேமராக்கள் மட்டுமே பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கு ஈடாக 108 மெகாபிக்சல் கேமராவின் புகைப்படங்கள் இல்லை. காரணம், கேமராவில் உள்ள சென்சார் தான். கேமராவில் பதிவு செய்யப்படும் காட்சிகளின் பிக்சல்கள் அதில் பொருத்தப்பட்டிருக்கும் சென்சாரில் தான் ஒருங்கிணைக்கப்படுகிறது. அதாவது அனைத்து பிக்சல்களையும் முறையாக ஒருங்கிணைப்பது சென்சார் தான். எனவே சென்சார் அளவு எத்தனை பெரிதாக இருக்கிறதோ பிக்சல் (ஒவ்வொரு கட்டம்) அளவும் அவ்வளவு பெரிதாக இருக்கும். அப்படியாக ஐபோனில், சென்சாரின் அளவு பெரிதாக இருக்கிறது. அதுகுறித்து சற்று விளக்கமாக பார்க்கலாம்.

ஐபோனில் பிரத்யேகமாக ஒரு பெரிய சென்சார்

ஐபோனில் பிரத்யேகமாக ஒரு பெரிய சென்சார்

108 எம்பி கேமராவில் எடுக்கப்படும் சுமார் 10 கோடி பிக்சல்களையும் ஒருங்கிணைப்பது அந்தந்த டிவைஸ்களில் இருக்கும் சென்சார்கள் தான். மறுபுறம் ஐபோனில் பிரத்யேகமாக ஒரு பெரிய சென்சார் பயன்படுத்தப்பட்டு, 12 எம்பி கேமரா வழியாக காட்சிகளை பதிவு செய்யும். இப்படியாக இது ஒரு கோடி பிக்சல்களை மட்டுமே ஐபோனின் பெரிய சென்சாரில் ஒருங்கிணைக்கப்படுகிறது. அப்படி செய்யும் பட்சத்தில் என்ன நடக்கும் தெரியுமா?.

சென்சார் அளவும் பெரிது, பிக்சல் அளவும் பெரிது

சென்சார் அளவும் பெரிது, பிக்சல் அளவும் பெரிது

108 எம்பி கேமராவில் பதிவாகும் ஒவ்வொரு கட்டமும் (பிக்சல்) சுமார் 0.8 மைக்ரான் என்ற அளவில் பதிவாகும். அதேபோல் ஐபோனின் 12 எம்பி கேமராவில் எடுக்கப்பட்டும் ஒவ்வொரு கட்டமும் (பிக்சல்) 1.4 மைக்ரான் என்ற அளவில் பதிவாகும். சென்சார் அளவும் பெரிது, பதிவாகும் பிக்சல் அளவும் பெரிது. இதனால் தான் ஐபோனின் புகைப்படங்கள் தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்கிறது.

ஐபோனின் 12 எம்பி கேமரா சிறப்பாக இருக்க காரணம்?

ஐபோனின் 12 எம்பி கேமரா சிறப்பாக இருக்க காரணம்?

இப்போது ஒரு கேள்வி வரும் - அப்படி என்ன சென்சார் ஐபோனில் பயன்படுத்தப்படுகிறது என்று? ஐபோனில் சோனி சென்சார் தான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆண்ட்ராய்டு பயன்படுத்தப்படும் சோனி சென்சார் தன்மை வேறு, ஐபோனின் சோனி சென்சார் தன்மை வேறு. ஆண்ட்ராய்டு போன்களுக்கு சந்தையில் இருக்கும் போட்டித் தன்மையை சமாளிக்கவும் வாடிக்கையாளர்களை கவரவும் மெகாபிக்சல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதே சமயம், ஐபோன் ஆனது தனித்து செயல்பட்டு பிரத்யேகமாக புதுமைகளை புகுத்தி தரத்தை மேம்படுத்தி வருகிறது.

File Images

More from GizBot

Best Mobiles in India

English summary
108mp Vs 12mp: Why Iphone 12mp Camera is better than android's 108mp Camera
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X