Just In
- 23 hrs ago
போக்கோ எக்ஸ் 2 ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.!
- 24 hrs ago
டேட்டா ரோல்ஓவர் சலுகையை நீட்டித்த வோடபோன் ஐடியா.!
- 1 day ago
பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்றவற்றில் இன்னும் சில நாட்களுக்கு 'இந்த' பிரச்சனைகள் இருக்கும்: காரணம் இதுதான்.
- 1 day ago
விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
Don't Miss
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 25.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் போராடி தான் வெற்றியைப் பெற முடியும்…
- News
சசிகலா குணமாகி நல்ல முறையில் தமிழகத்திற்கு வர பிரார்த்தனை செய்கிறோம்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
- Automobiles
மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25!! நம்மூர் ஆர்15 போல இருக்கு!
- Finance
அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி?
- Sports
தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு!
- Movies
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
100 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம்.! எப்போது அறிமுகம்?
ஸ்மார்ட்போன்களில் கொடுக்கப்படும் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மேம்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதன்படி சில நிமிடங்களில் ஒரு நாளைக்குத் தேவைப்படும் சார்ஜை இதன் மூலமாக ஏற்றிக் கொள்ள முடியும்.

ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களான ஒன்பிளஸ், ஒப்போ, விவோ, சியோமி, சாம்சங் மற்றும் ஹூவாய் சமீப காலமாக பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் அதிக கனவம் செலுத்த துவங்கி இருக்கின்றன. குறிப்பாக சியோமி மற்றும் ஒன்பிளஸ் நிறுவனங்கள் அதிநவீன ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து அத்துடன் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை வழங்க அதிக கவனம் செலுத்துகின்றன.
Vivo Y30 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைக்குறைப்பு: 4 கேமரா, 5000 mAh பேட்டரி!

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பாஸ்ட் சார்ஜிங் மட்டுமின்றி வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பமும் பிரபலமான ஒன்றாக மாறி வருகிறது. மேலும் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் வயர்லெஸ் சார்ஜிங்கில் 100 வாட் மின்திறனை வழங்கும் தொழில்நுட்பம் விரைவில் சாத்தியமாகும் என்று கூறப்படுகிறது.

சில ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 100 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை தங்களின் ஸ்மார்ட்போன்களில் வழங்க 2021 ஆண்டை இலக்காக நிர்ணயித்து இருப்பதாக தெரிகிறது.

இதுவரை எந்த ஸ்மார்ட்போனிலும் 100 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படவில்லை. சியோமி நிறுவனம் தற்சமயம் 55 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்நிறுவனம் விரைவில் 100 வாட் திறனை வழங்க முடியும் என கூறப்படுகிறது.

குறிப்பாக சியோமி வரிசையில் ஒப்போ நிறுவனமும் இணையலாம் என தெரிகிறது. ஒப்போ நிறுவனம் 65 வாட் ஏர்வூக் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. இது 4000 எம்ஏஎச் பேட்டரியை வயர்லெஸ் முறையில் 30 நிமிடங்களில் சார்ஜ் செய்துவிடும். ஆனாலும் இதுவரை இந்த அம்சம் சந்தையில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இன்னொரு அட்டகாசமான தொழில்நுட்ப வசதி கூட உள்ளது, இதற்கு ரிவர்ஸ் வயர்லெஸ்(Reverse Wireless Charge)' என்று பெயர். முதன் முதலாக ஹூவாய் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போனில் கொண்டு வரப்பட்டது. பின்னர், சாம்சங் S10+ போனில் வந்தது. அதாவது போனின் பின்புறத்தில் மற்றொரு போனை வைத்தால் போதும். போனில் இருக்கும் சார்ஜை அப்படியே மாற்றிக் கொள்ளலாம். ஆனால் இரு போன்களிலும் ரிவஸ்ர வயர்ஸ் சார்ஜ் வசதி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் மின்சாரம் தொடர்பான இரண்டு அலகுகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். அவை மின்னழுத்தத்தை அளக்க உதவும் வோல்ட் (volt) மற்றும் மின்னோட்டத்தை அளக்க உதவும் ஆம்பியர் (ampere). ஒவ்வொரு சார்ஜரிலும் இந்த அலகுகளைப் பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பார்கள். வோல்ட் அளவை ஆம்பியர் அளவுடன் பெருக்கினால் வாட்ஸ் கிடைக்கும். வாட்ஸ் என்ற அலகு திறனை அளக்கப் பயன்படுத்துப்படுகிறது. அதன் மூலமாக
ஒரு சார்ஜரின் திறனை அறிந்து கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக ஒரு சார்ஜரில் 5V மற்றும் 2A என்று குறிப்பிடப்பட்டுள்ளது என வைத்துக் கொள்வோம். அந்த இரண்டையும் பெருக்கினால் 10W என்ற அளவு கிடைக்கும். 10W என்பதுதான் அந்த சார்ஜரின் திறன். இது சராசரியான வேகத்தில் மொபைலை சார்ஜ் செய்து கொள்ள உதவும். சந்தையில் இருக்கும் பெரும்பலமான ஸ்மார்ட்போன்கள் 10W சார்ஜிங் திறனைக் கொண்டவைதான். எனவே அவற்றுடன் இந்த திறன் கொண்ட சார்ஜரே கொடுக்கப்பட்டிருக்கும். அடுத்ததாக பாஸ்ட் சார்ஜிங் கொண்ட ஸ்மார்ட்போனுடன் கொடுக்கப்பட்ட சார்ஜரின் திறன் என்பது அதிகமாக இருககும்.

எடுத்துக்காட்டாக ஒன்பிளஸ் 7ப்ரோ ஸ்மார்ட்போனுடன் கொடுக்கப்பட்ட சார்ஜரை எடுத்துக் கொள்வோம். அதன் வோல்ட் அளவு 5 (V) மற்றும் ஆம்பியர் அளவு 4 (A) இந்த இரண்டையும் பெருக்கினால் 20W கிடைக்கும். இதன் மூலமாக ஒரு சார்ஜரின் திறனை அறிந்து கொள்ள முடியும்.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190