101 ரூபாய் கொடுங்க.. 100GB டேட்டாவை புடிங்க.. 7000 நகரங்களில் உள்ள Jio கஸ்டமர்களுக்கு அடிச்ச லக்!
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் கீழ் கிடைக்கும் ஜியோ ஏர்ஃபைபர் சேவையானது, தற்போது இந்தியா முழுவதும் 7000 நகரங்களில் அணுக கிடைக்கிறது. இது ஜியோ நிறுவனத்தின் 5ஜி பிக்ஸடு வயர்லெஸ் அக்செஸ் சேவை (5G fixed-wireless access service) ஆகும். இந்த சேவை கிடைக்கும் 7000 நகரங்களிலும் உள்ள ஜியோ ஏர்ஃபைபர் கஸ்டமர்களுக்கும்.. வெவ்வெறு விலை மற்றும் நன்மையை வழங்கும் 3 டேட்டா சாஷெட்கள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. அதில் ரூ.101 மதிப்புள்ள திட்டமானது மிகவும் கவனிக்கத்தக்க ஒரு ரீசார்ஜ் ஆக உள்ளது.
ஜியோ ஏர்ஃபைபர் கனெக்ஷனில் பலரும் உணர்ந்த ஒரே பிரச்சனை எஃப்யுபி (FUP) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஃபேர் யூஸேஜ் பாலிசி (Fair usage policy) ஆகும். ஜியோ ஏர்ஃபைபர் சேவைக்கான எஃப்யுபி டேட்டா லிமிட் 1டிபி என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

பெரும்பாலான பயனர்களுக்கு இது போதுமானதாக இருந்தாலும் கூட, சிலருக்கு 1டிபி டேட்டா என்பது எளிதில் தீரக்கூடிய ஒரு அளவாகவே உள்ளது. அப்படிப்பட்ட வாடிக்கையாளருக்கான சிக்கலை தீர்க்கவே, ஜியோ நிறுவனம் அதன் ஏர்ஃபைபர் சேவையின் கீழ் டேட்டா சாஷெட்களை வழங்குகிறது. டேட்டா சாஷெட் என்கிற பெயரை கேட்டு, யாரும் குழப்பம் அடைய வேண்டாம், இவைகள் ப்ரீபெய்ட் பிரிவின்கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் டேட்டா வவுச்சர்களை போன்றது தான்!
ரிலையன்ஸ் ஜியோவின் ஏர்ஃபைபர் சேவையில் மூன்று டேட்டா சாஷெட்கள் உள்ளன. முதல் திட்டத்தின் விலை ரூ.101 ஆகும். மற்ற இரண்டு திட்டங்களின் விலைகள் ரூ.251 மற்றும் ரூ.401 ஆகும். ப்ரீபெய்ட் டேட்டா வவுச்சர்களை போலவே, இந்த 3 டேட்டா சாஷெட்களும் வாடிக்கையாளரின் ஆக்டிவ் திட்டத்தின் வேலிடிட்டி உடன் ஒற்றுப்போகும்; கூடவே எக்ஸ்ட்ரா டேட்டா நன்மையையும் வழங்கும்.
ரூ.101 மதிப்புள்ள டேட்டா சாஷெட் வழியாக உங்களுக்கு 100 ஜிபி டேட்டா கிடைக்கும். முன்னரே குறிப்பிட்டபடி இது ஆக்டிவ் ஆக்க உள்ள திட்டத்தின் செல்லுபடியாகும் காலத்துடன் ஒற்றுப்போகும். இதேபோல, அடுத்ததாக உள்ள ரூ.251 டேட்டா சாஷெட் ஆனது 500 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. கடைசியாக உள்ள ரூ.401 டேட்டா சாஷெட் ஆனது 1டிபி அல்லது 1000ஜிபி டேட்டாவுடன் வருகிறது.
ஜியோ நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் பிரிவின் கீழ் ரூ.15-க்கு 1ஜிபி டேட்டா வவுச்சரை வழங்குவதையும், அதன் ஏர்ஃபைபர் சேவையின் கீழ் ரூ.101 க்கு 101ஜிபி டேட்டாவை வழங்குவதையும் ஒப்பிட்டு பார்த்தால்.. மிகப்பெரிய வேறுபாட்டினை உணர முடியும். ஆனால் ஏர்ஃபைபர் சேவையின் கீழ் உள்ள மெயின் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகள் மிகவும் அதிகமாக இருப்பதால், ரூ.101 க்கு 100ஜிபி டேட்டா கொடுத்தால் மட்டுமே ஏர்ஃபைபர் வாடிக்கையாளர்களை தக்கவைக்க முடியும்.
ஏனென்றால் ஜியோ ஏர்ஃபைபர் ஆனது ஜியோ ஃபைபர் போன்ற பதிவிறக்க வேகத்தை வழங்கினாலும் கூட பதிவேற்ற வேகத்தில் வலுவானதாக இல்லை. எனவே, உங்கள் பகுதியில் ஜியோ ஃபைபர் இருந்தால், ஜியோ ஏர்ஃபைபருக்கு பதிலாக ஜியோ ஃபைபர் சேவைக்கு செல்வதே நல்லது. ஜியோ ஏர்ஃபைபர்-ஐ போலவே ஜியோ ஜியோ ஃபைபர் சேவையும் கூட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி ஜியோ ஏர்ஃபைபர்-ஐ விட அதிக எஃயுபி டேட்டா லிமிட்டையும் வழங்குகிறது.
ஜியோ ஃபைபர் சேவையின் கீழ் ரூ.599 முதல் திட்டங்கள் உள்ளன. இது 30 எம்பிபிஎஸ் ஸ்பீடை வழங்குகிறது. இதற்கு அடுத்ததாக ரூ.899, ரூ.999 மற்றும் 1499 திட்டங்கள் உள்ளன. இவைகள் முறையே 100 எம்பிபிஎஸ், 150 எம்பிபிஎஸ் மற்றும் 300 எம்பிபிஎஸ் ஸ்பீடை வழங்குகின்றன. மறுகையில் உள்ள ஜியோ ஏர்ஃபைபர் சேவையின் கீழும் ரூ.599 க்கு திட்டம் உள்ளது. இதுவும் 30 எம்பிபிஎஸ் ஸ்பீடை வழங்குகிறது. ஆனால் 1டிபி என்கிற எஃப்யுபி டேட்டா லிமிட்டை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications