Home
News

என்ன இப்படி இறங்கிட்டாங்க! வெறும் ரூ.330 க்கு 1000GB டேட்டா.. BSNL கிட்ட இருந்து இப்படி ஒரு பிளான்-ஆ!

என்னது? பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்திடம் இப்படி ஒரு திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறதா? என்று ஆச்சரியப்பட வைக்கும் படியான ஒரு திட்டத்தை பற்றித்தான் நாம் இங்கே விரிவாக பார்க்க உள்ளோம். அதென்ன திட்டம்? அதன் விலை என்ன? இது என்னென்ன நன்மைகளை வழங்கும்?

நாங்கள் இங்கே பேசுவது பிஎஸ்என்எல் ரூ.329 திட்டத்தை பற்றித்தான். இது பிஎஸ்என்எல் ஃபைபர் பிராட்பேண்ட் (Fiber Broadband) சேவையின் கீழ் கிடைக்கும் மிகவும் மலிவான திட்டமாகும். இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் ரூ.329 ஒரு நுழைவு நிலை பிராட்பேண்ட் பிளான் (Entry-Level Broadband Plan) ஆகும்.

வெறும் ரூ.330 க்கு 1000ஜிபி டேட்டா.. BSNL கிட்ட இப்படி ஒரு பிளான்-ஆ!

1000GB டேட்டாவை வழங்கும் BSNL ரூ.329 திட்டம்

ரூ.329 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் இந்த பிஎஸ்என்எல் ஃபைபர் பிளானின் கீழ், மாதந்தோறும் 1டிபி அளவிலான டேட்டா கிடைக்கும். அதாவது 1000ஜிபி டேட்டா கிடைக்கும். இது 20எம்பிபிஎஸ் (20Mbps) இண்டர்நெட் ஸ்பீடை வழங்கும். ஒருவேளை இந்த திட்டத்துடன் வரும் மொத்த டேட்டாவையும் நீங்கள் பயன்படுத்தாவிட்டால், அதன் பின்னர் இண்டர்நெட் ஸ்பீட் 4Mbps ஆக குறைக்கப்படும்.

டேட்டவை தவிர்த்து வேறு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

டேட்டா நன்மையை தவிர்த்து ரூ.329 திட்டமானது கூடுதல் கட்டணமின்றி (அதாவது இலவசமாக) லேண்ட்லைன் கனெக்ஷனையும் (Landline Connection) வழங்கும். ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கூற்றுப்படி லேண்ட்லைன் கனெக்ஷனிற்கு தேவைப்படும் கருவிகளை (Instruments) நீங்கள் பணம் செலுத்தி தான் வாங்க வேண்டியிருக்கும்!

இந்த BSNL திட்டம் யாருக்கெல்லாம் சிறந்த தேர்வாக இருக்கும்?

நீங்கள் பிஎஸ்என்எல் ஃபைபர் பிராட்பேண்ட் சேவையின் கீழ் புதிய வாடிக்கையாளராக (New Customer) இணைய விரும்பினால் அல்லது இண்டர்நெட் ஸ்பீடை (Internet Speed) பொருட்படுத்தாமல் பெரிய அளவிலான டேட்டா நன்மைகளை தேடுகிறீர்கள் என்றால் ரூ.329 நிச்சயம் உங்களுக்கானது தான்.

அதிலும் குறிப்பாக உங்கள் வீட்டில் நீங்கள் மட்டுமே இண்டர்நெட்டை பயன்படுத்துகிறீர்கள் என்றால் கண்களை மூடிக்கொண்டு இதை ரீசார்ஜ் செய்யலாம். ஏனென்றால் இதுவொரு பேஸிக் ரீசார்ஜ் என்பதால் இதன் கீழ் பல டிவைஸ்களை இணைக்கும் பட்சத்தில் இது சரியாக வேலை செய்யாமல் போகலாம்.

BSNL ரூ.399 திட்டத்தையும் ரீசார்ஜ் செய்யலாம்!

ஒருவேளை உங்களுக்கு 20எம்பிபிஎஸ் என்கிற இன்டர்நெட் ஸ்பீட் போதாது என்றால், 30எம்பிபிஎஸ் என்கிற இணைய வேகத்துடன் பிஎஸ்என்எல் ரூ.399 ஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்தை கருத்தில் கொள்ளலாம். இண்டர்நெட் ஸ்பீடை தவிர்த்து இதன் நன்மைகள் ரூ.329 திட்டத்துடன் ஒற்றுப்போகும். மேலும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள விலைகளில் வரிகள் சேர்க்கப்படவில்லை என்பதையும் நினைவில் கொள்ளவும்.

BSNL Fiber சேவைக்குள் நம்பி நுழையலாமா?

பிஎஸ்என்எல் ஃபைபர் பிராட்பேண்ட் சேவைகள் கடந்த சில ஆண்டுகளில் அதிவேகமாக வளர்ந்துள்ளது என்றே கூறலாம். அதற்கு காரணம் ரூ.329 மற்றும் ரூ.399 போன்ற மிகவும் மலிவான திட்டங்களே ஆகும். நுகர்வோர்களுக்கு என்ன தேவை என்பதை சரியாக புரிந்துகொண்ட அதற்கேற்ப திட்டங்களை வழங்கி வருகிறது.

அதுமட்டுமின்றி ஒவ்வொரு வட்டங்களும் ஏற்ற சிறப்பு திட்டங்களும் அணுக கிடைக்கும். ஆகையால் பிஎஸ்என்எல் ஃபைபர் பிராட்பேண்ட் சேவையின் கீழ் உங்களுக்கு பலவகையான விருப்பங்கள் இருக்கும். அதிலும் குறிப்பாக நீங்கள் வசிக்கும் பகுதியில் பிஎஸ்என்எல் நெட்வொர்க் நன்றாக உள்ளது என்றால், பிஎஸ்என்எல் ஃபைபர் பிராட்பேண்ட் சேவைக்குள் நம்பி நுழையலாம்!

More from GizBot

Best Mobiles in India

English summary
1000GB Data For Just Rs 330 This BSNL Broadband Plan Is Too Good For Entry Level Users
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X