Home
News

1000GB டேட்டா வெறும் 329 ரூபாய்க்கா? நம்ப முடியாத திட்டத்தை வழங்கி Jio-வுக்கு ஆப்பு வைத்த BSNL..

ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக இப்போது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் பல புதிய திட்டங்களை அதன் போர்ட்போலியோவில் சேர்த்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது ரூ.500 விலைக்கு கீழ் அட்டகாசமான நன்மைகளை வழங்கும் மலிவு விலை பிராட்பேண்ட் திட்டங்களை கொண்டுள்ளது.

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சூப்பர் மலிவு பிராட்பேண்ட் திட்டங்களை வழங்குகிறது. அரசு நடத்தும் தொலைத்தொடர்பு ஆபரேட்டர் இந்தியாவின் மிகப்பெரிய இணைய சேவை வழங்குநர்களில் (ISP) ஒன்றாக திகழ்கிறது. இது 500 ரூபாய்க்கு கீழ் உள்ள ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களை (BSNL Fiber Broadband Plans) நீங்கள் தேடுகிறீர்களானால் இந்த பதிவு உங்களுக்கானது.

1000GB டேட்டா வெறும் 329 ரூபாய்க்கா? Jio-வுக்கு ஆப்பு வைத்த BSNL..

பிஎஸ்என்எல் நிறுவனம் உங்களுக்கான பல விருப்பங்களை வழங்குகிறது. அதே நேரத்தில், ஜியோ (Jio Broadband Plan) மற்றும் ஏர்டெல் பிராட்பேண்ட் (Airtel Broadband Pack) இதேபோன்ற விலையில் வெறும் பேக்அப் திட்டங்களைக் கொண்டுள்ளன. அவை BSNL இலிருந்து நீங்கள் பெறுவதை விட மலிவு விலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் விஷயம் என்னவென்றால், இந்தத் திட்டங்கள் மேலும் மலிவு விலையில் இருப்பதால், அவற்றின் வேகம் மற்றும் டேட்டா நன்மைகள் குறைந்த விலையில் உங்களுக்கு கிடைக்கிறது. சரி, இப்போது பிஎஸ்என்எல் வழங்கும் நான்கு சூப்பர் மலிவு விலை பிராட்பேண்ட் திட்டங்களைப் பற்றி பார்ப்போம் வாங்க. பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.329, ரூ.399, ரூ.449 மற்றும் ரூ.499 போன்ற திட்டங்களை வழங்குகிறது.

BSNL வழங்கும் மிகவும் மலிவு விலை பிராட்பேண்ட் திட்டமாக ரூ.329 திட்டம் (BSNL Rs 329 Plan) திகழ்கிறது. இந்த திட்டம் அதன் பயனர்களுக்கு 1TB அல்லது 1000GB வரையிலான டேட்டாவை 20 Mbps வேகத்துடன் வழங்குகிறது. அதன் பிறகு, வேகம் 4 Mbps ஆக குறைகிறது. இந்த திட்டத்துடன் ஒரு நிலையான வரி வரம்பற்ற குரல் அழைப்பு இணைப்பும் உள்ளது.

1000GB டேட்டா வெறும் 329 ரூபாய்க்கா? Jio-வுக்கு ஆப்பு வைத்த BSNL..

பின்னர் பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.399 திட்டம் (BSNL Rs 399 Plan) உள்ளது. இந்த திட்டத்தில், பயனர்கள் 30 Mbps வேகத்துடன் 1TB வரை மாதாந்திர டேட்டாவைப் பெறுகிறார்கள். 1டிபி-க்கு பிறகு டேட்டா வேகம் 4 Mbps ஆக குறைகிறது. மேலும் பயனர்கள் இலவச நிலையான வரி குரல் அழைப்பு இணைப்பைப் பெறுகிறார்கள். இந்த திட்டம் நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள பயனர்களுக்காகவும், தனிநபர்களுக்காக்கவும் மட்டுமே விற்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

இந்தப் பட்டியலில் உள்ள அடுத்த திட்டம் பிஎஸ்என்எல் ரூ.449 திட்டமாகும் (BSNL Rs 449 Plan). இந்த திட்டம் அதன் பயனர்களுக்கு 30 Mbps வேகத்துடன் 3.3TB மாதாந்திர டேட்டாவைப் பெறுகிறார்கள். அதன் பிறகு, வேகம் 4 Mbps ஆக குறைகிறது. இலவச நிலையான வரி குரல் அழைப்பு இணைப்புடன் பயனர்கள் வரம்பற்ற குரல் அழைப்பைப் பெறுகிறார்கள்.

1000GB டேட்டா வெறும் 329 ரூபாய்க்கா? Jio-வுக்கு ஆப்பு வைத்த BSNL..

கடைசியாக, பட்டியலில் பிஎஸ்என்எல் ரூ.499 திட்டம் (BSNL Rs 499 Plan) உள்ளது. இதன் மூலம், பயனர்கள் 3.3TB மாதாந்திர டேட்டாவுடன் 40 Mbps வேகத்தைப் பெறுகிறார்கள். அதிவேக டேட்டாவைப் பயன்படுத்திய பிறகு வேகம் 4 Mbps ஆகக் குறைகிறது. இந்த திட்டத்தில் இலவச நிலையான வரி குரல் அழைப்பு இணைப்பும் உள்ளது.

மேலே உள்ள அனைத்து திட்டங்களுடனும், குரல் அழைப்புக்கான லேண்ட்லைன் கருவியை வாடிக்கையாளர் தனித்தனியாக வாங்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது. இதை BSNL இலவசமாக வழங்காது என்பதும் குறிப்பிடத்தக்கது. தேவையான சாதனங்களை பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்தே நீங்கள் குறைந்த விலையில் வாங்கலாம் என்பதும் கவனிக்கத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
1000GB Best BSNL Broadband Plan Under Rs 500 To Recharge Now In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X