Home
News

தஞ்சை குடமுழுக்கு விவகாரம்: 1000ஆண்டு ரகசியம்-எந்த மொழியில் யாகம் நடக்கிறது?சிந்தித்து தலைநிமிர்வோம்

தஞ்சை பெருவுடையார் கோயிலில் வரும் 5 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்ற உள்ள நிலையில், குடமுழுக்கு விழாவை தமிழ் மொழியில் மந்திரங்களை ஓதி நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து பலரும் கருத்து தெரிவிக்கையில், பிரார்த்தைனை முறை என்று பல முறைகள் இருந்தாலும் கடவுளை அனுகும் மந்திரங்களின் முறை ஒன்றாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். தமிழகத்தில் திருச்செந்தூர், மேல்மருவத்தூர் போன்ற பல கோயில்களிலும் மந்திர முறைகள் வெவ்வேறு மாதிரியாக இருக்கிறது. அவை அனைத்தும் பாரம்பரியமுறை படியே பின்பற்றப்பட்டு வருகின்றன. அதேபோல் தான் தஞ்சை கோயிலும்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன், என்பது போல் கடவுள் மொழிக்கு மூலமானவர், கடவுளுக்கு புரியாத மொழி என்று இல்லை என கருத்து தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் பாரம்பரியத்தை பின்பற்று வருகின்ற நேரத்தில் இதுபோன்ற சர்ச்சைகள் காலப்போக்கில் சென்னையில் உள்ள கோயிலுக்கு சென்னை தமிழில் மந்திரங்கள் ஓத வேண்டும், திருநெல்வேலி கோயில்களில் திருநெல்வேலி தமிழில் மந்திரங்கள் ஓத வேண்டும் என்று வந்து நிற்கும் என சில நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பாரம்பரியத்தை மாற்ற வேண்டாம், அதேசமயம் தமிழை எல்லளவும் எங்கேயும் விட்டுக் கொடுக்க வேண்டாம் தெரிவிக்கின்றனர்.

தஞ்சை பெருவுடையார் அல்லது பெரிய கோயில்

தஞ்சை பெருவுடையார் அல்லது பெரிய கோயில்

நம் முன்னோர்களால் கட்டப்பட்ட பல்வேறு கோவில்களும், கட்டிடங்களும் இன்று உலகப் பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டும் வருகின்றன. இவ்வாறு பாதுகாக்கப்பட்டு வரும் கோவில்களில் ஒன்றான தஞ்சை பெருவுடையார் அல்லது பெரிய கோயில் தன்னுள் மறைத்து வைத்திருக்கும் சில அதிசயங்கள் மற்றும் அதன் பின் மறைந்து கிடக்கும் தொழில்நுட்ப மர்மங்கள் குறித்த தொகுப்பு தான் இது.

அறிந்த தகவல்கள் மற்றும் சிறப்புகள் மிகவும் குறைவு

அறிந்த தகவல்கள் மற்றும் சிறப்புகள் மிகவும் குறைவு

தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் அமைந்திருக்கும் பெரிய கோவில் குறித்து நாம் அறிந்த தகவல்கள் மற்றும் சிறப்புகள் மிகவும் குறைவு தான். நிழல் தரையில் விழாத கட்டிட அமைப்பு, மற்றும் இதற்குப் பயன்படுத்தப்பட்ட கருவிகள் குறித்த மர்மம் இன்றளவும் நீடிக்கின்றது.

எவ்விதமான உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை

எவ்விதமான உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை

தஞ்சைப் பெரிய கோவில் குறித்துப் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இன்று வரை இதன் கட்டமைப்புப் பணிகள், அதற்குப் பயன்படுத்தப்பட்ட கருவிகள் குறித்து எவ்விதமான உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை, மாறாகப் பல்வேறு சாத்தியக்கூறுகள் மட்டும் இருக்கின்றது.

இன்றளவும் பல்வேறு ரகசியங்கள்

இன்றளவும் பல்வேறு ரகசியங்கள்

தஞ்சை பெருவுடையார் கோவில் சோழ பேரரசன் ராஜராஜ சோழனால் கிபி 1006 ஆம் ஆண்டுத் துவங்கி 1010 ஆம் ஆண்டுக் கட்டிமுடிக்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே. இதன் கட்டமைப்பு இன்றளவும் பல்வேறு ரகசியங்களைக் கொண்டிருக்கின்றது.

 கிரானைட் கற்கள் எப்படி வந்தன

கிரானைட் கற்கள் எப்படி வந்தன

இக்கோவில் அமைந்திருக்கும் நிலப்பகுதியில் வெறும் வண்டல் மண் நிறைந்ததாகும், அங்குப் படர்ந்த கருங்கல், உயர்ந்த கிரானைட் கற்கள் எப்படி வந்தன கிரானைட் கற்கள் எதைக் கொண்டு வெட்டப்பட்டன, என்பன போன்ற கேள்விகளுக்கு இன்றளவும் பதில் இல்லை.

1000 ஆண்டுகளுக்கு முன்பே கட்டுமான பணிகளில்

1000 ஆண்டுகளுக்கு முன்பே கட்டுமான பணிகளில்

இன்றளவும் பூமியின் மிகவும் உறுதியானதாகக் கருதப்படும் கிரானைட் கற்களை வைரக் கற்கள் கொண்ட கருவிகள் மூலம் வெட்டப்படுகின்றன, ஆனால் சோழர்கள் இந்தக் கற்களை 1000 ஆண்டுகளுக்கு முன்பே கட்டுமான பணிகளில் பயன்படுத்தி இருக்கின்றனர்.

நுணுக்கமான துளைகள்

நுணுக்கமான துளைகள்

கோவில் முழுவதும் பல்வேறு சிற்பங்கள், சிலைகள் மற்றும் கல்வெட்டுகளும் நிரம்பியிருக்கின்றது. இதோடு மிகவும் நுணுக்கமான துளைகள் சோழர்கள் பயன்படுத்திய கருவிகள் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றது.

 இலை மட்டுமே நுழையும் அளவு துளை

இலை மட்டுமே நுழையும் அளவு துளை

பெருவுடையார் கோவிலின் சுவர்களில் மிகவும் நுணுக்கமான துளைகள் சீராகச் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் இலை மட்டுமே நுழையும் அளவு துளை இருப்பதால் சோழர்கள் எதைக் கொண்டு இதனைச் செய்திருப்பர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எதற்காகச் செதுக்கப்பட்டன

எதற்காகச் செதுக்கப்பட்டன

இது ஒரு பக்கம் இருந்தாலும், இந்தத் துளைகள் எதற்காகச் செதுக்கப்பட்டன என்பதும் கேள்விக்குறியாகவே இருந்தாலும், பல ஆய்வாளர்களும் இது அலங்காரமாகக் கருதி செதுக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கின்றனர்.

பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம்

பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம்

இத்தகைய சிறிய துளைகள் செதுக்கப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மிகவும் பழமை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்றாலும் இது குறித்த மர்மம் இன்றளவும் நீடிக்கின்றது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு

பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு

இந்த நிலையில் தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் ஆலயம் எனப்படும் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு நடத்த கோயில் நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தக் கோயிலில் பெருமளவில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடமுழுக்கிற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.

தமிழ் மொழியில் மந்திரங்களை ஓதி நடத்த வேண்டும்

தமிழ் மொழியில் மந்திரங்களை ஓதி நடத்த வேண்டும்

இதற்கிடையில், அந்தக் குடமுழுக்கு விழாவை தமிழ் மொழியில் மந்திரங்களை ஓதி நடத்த வேண்டும் என ராமநாதபுரத்தை சேர்ந்த ஜி. திருமுருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் பொதுநலவழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நடைபெற்று வருகிறது.

பெரிய கோயில் தேவஸ்தானம்

பெரிய கோயில் தேவஸ்தானம்

பெரிய கோயில் தேவஸ்தானத்தின் சார்பில் நீதிமன்றத்தில் ஒரு குறிப்பு அளிக்கப்பட்டது. அதில், 1980 மற்றும் 1997ல் நடைபெற்ற திருக்குடமுழுக்கு விழாக்களில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளின்படியே இந்தத் திருக்குடமுழுக்கு விழாவும் நடைபெறும் எனக் கூறப்பட்டிருந்தது.

தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் சார்பில்

தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் சார்பில்

தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் சார்பில் அதன் துணை ஆணையர் பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், திருக்குடமுழுக்கு விழாவில் தமிழுக்கு தகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாகவும், குடமுழுக்கின் எல்லா நிகழ்வுகளின்போது திருமுறைகள் ஓதப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

12 திருமுறைகளிலும் இருந்து பாடல்கள் பாடப்படும்

12 திருமுறைகளிலும் இருந்து பாடல்கள் பாடப்படும்

திருக்குடமுழுக்கு நடக்கும்போது, 12 திருமுறைகளிலும் இருந்து பாடல்கள் பாடப்படும். யாக சாலையில் மட்டுமல்ல, மகாகுடமுழுக்கு நடைபெறும்போதும் இவை பாடப்படும். அதனால், மனுதாரர் இது குறித்து பிரச்சனை எழுப்ப வேண்டியதில்லை. குடமுழுக்கு நிகழ்வில் தமிழுக்கு பிரதானமான இடம் தரப்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளது.

கலசம் கோபுரத்தின் மீது ஏற்றும் பணி

கலசம் கோபுரத்தின் மீது ஏற்றும் பணி

இதுதொடர்பான விசாரணை முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெருவுடையார் கோயிலில் வரும் 5 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ள நிலையில் இதற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 27 ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து 29 ஆம் தேதி திசா ஹோமமும், சாந்தி ஹோமமும் நடத்தப்பட்டன. அதேபோல் நேற்று மூர்த்தி யாகமும், சங்கீதா யாகமும் நடைபெற்றன. இவை அனைத்தும் சமஸ்கிருதத்தில் மட்டுமே நடத்தப்பட்டன. அதேபோல் தங்க முலாம் பூசப்பட்ட கோயில் கலசம் கோபுரத்தின் மீது ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
1000 year old secret in tanjore big temple: which language has been practiced in the yagyas
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X