Google Gemini-க்கு கோயிந்தா.. ChatGPT 4-ஐ விட 100 மடங்கு சக்தி வாய்ந்த Orion AI.. இது என்னென்ன செய்யும்?
கடந்த நவம்பர் 2022 இல் அறிமுகமான சாட்ஜிபிடி (ChatGPT) முதல் அதன் லேட்டஸ்ட் வெர்ஷன் ஆன சாட்ஜிபிடி-4 (ChatGPT-4) வரையிலாக.. ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனத்தின் ஜெனெரேட்டிவ் ஏஐ சாட்பாட்கள் ஆனது 2 விஷயங்களை தொடச்சியாக செய்து வருகின்றன. ஒன்று - பயனர்களை ஆச்சர்யப்படுத்துவது; இரண்டாவது - சுந்தர் பிச்சைக்கும், கூகுள் நிறுவனத்திற்கும் தலைவலி கொடுப்பது!
ஆரம்ப கட்டத்தில் இருந்தே.. மனிதனை போலவே பதிலளிக்கும் திறன், வாழ்க்கைக்கான அறிவுரைகளை வழங்குவது, நகைச்சுவையாக பேசுவது, இசையமைப்பது, கவிதைகள் எழுதுவது, கோடிங் எழுவது.. என கிட்டத்தட்ட எல்லாவற்றையும் செய்து சாட்ஜிபிடி ஆனது அனைவரையுமே ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. அதே சமயத்தில் கூகுளின் ஏஐ சாட்பாட் ஆன ஜெமினி ஏஐ, சாட்ஜிபிடி-ஐ சமாளிக்க முடியாமல் திணறியும் வருகிறது!

இதற்கிடையில் ஓப்பன்ஏஐ நிறுவனம் இதுவரை அறிமுகம் செய்ததிலேயே மிகவும் சக்திவாய்ந்த ஒரு புதிய ஏஐ மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. அது ஓரியன் ஏஐ ஆகும். தி வெர்ஜ்ஜின் சமீபத்திய அறிக்கையின்படி, ஓரியன் ஏஐ மாடல் ஆனது சாட்ஜிபிடி 4 மாடலை விட 100 மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும் மற்றும் இது இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
ஓரியன் ஏஐ ஆனது ஆரம்பத்தில் ஓப்பன் ஏஐ உடன் நெருக்கமாக ஒத்துழைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கும். அப்படி பார்க்கும் போது ஓரியன் ஏஐ ஆனது ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் முதன்மை பங்குதாரரான மைக்ரோசாப்ட்டிற்கு முதலில் வந்து சேர்ந்தால், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை!
ஓரியன் ஏஐ ஆனது சாட்ஜிபிடி 4-யின் அப்கிரேடட் வெர்ஷன் ஆக இருந்தாலும் இது சாட்ஜிபிடி 5 என்று அழைக்கப்படுமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. இந்த அணுகுமுறை, ஓப்பன்ஏஐ-யின் முந்தைய வெளியீடுகளான ஜிபிடி-4 மற்றும் ஜிபிடி-3 ஆகியவற்றிலிருந்து மாறுவதை குறிக்கிறது. இவ்விரண்டுமே அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே, சாட்ஜிபிடி மூலம் பரவலாக (அனைவராலும்) அணுகப்பட்டது.
ஆனால் ஓரியன் ஏஐ மாடல் ஆனது வரையறுக்கப்பட்ட வெளியீட்டை காணும். இது குறிப்பாக கார்ப்பரேட் பயன்பாடுகளில், தரவை சேகரிக்கவும், ஏஐ மாடல்களின் பதில்களை நிஜ உலகக் கருத்துக்களுடன் செம்மைப்படுத்தவும் பயன்படுத்தப்படலாம். ஜிபிடி 4-ஐ விட 100 மடங்கு அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும் பட்சத்தில், ஓரியன் ஏஐ ஆனது மிகவும் சிக்கலான பணிகளை கையாளும் மற்றும் செயற்கை பொது நுண்ணறிவை (AGI) அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் மனிதனை போன்ற முறையில் பலவிதமான பணிகளை புரிந்து கொள்ளவும், கற்றுக்கொள்ளவும், அவைகளை செய்யவும் முடியும். ஓரியன் ஏஐ-க்கு பயிற்சி கொடுக்க ஓப்பன்ஏஐ நிறுவனம் "ஸ்ட்ராபெரி" என்றும் அழைக்கப்படும் அதன் ஓ1 மாடலை பயன்படுத்தி உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஸ்ட்ராபெர்ரி ஏஐ ஆனது பதில்களை உருவாக்குவது மட்டுமல்லாமல், இண்டர்நெட்டை ஆட்டோநமஸ் ஆக நேவிகேட் செய்யும் (Autonomously navigate the internet) என்றும் கூறப்படுகிறது. இதைத்தான் ஓப்பன்ஏஐ நிறுவனம் 'டீப் ரிசேர்ச்' (Deep Research) என்று அழைக்கிறது. மேலும் இன்றைய சாட்பாட்களால், நம்பத்தகுந்த வகையில் செய்ய முடியாத சிக்கல்களை கூட ஸ்ட்ராபெர்ரி ஏஐ அமைப்பால் தீர்க்க முடியும்.
தற்போதைய ஏஐ மாடல்களை விட, இதை இன்னமும் சிறந்ததாக்குவது எதுவென்றால் - இந்த டூல் ஆனது கணிதத்தில் (Maths) ஒருபோதும் பயிற்சி பெறாவிட்டாலும் கூட அவற்றை தீர்க்கும் திறன்கொண்டதாக இருக்கிறது. மேலும் சந்தை உத்திகளை வடிவமைத்தல் மற்றும் சிக்கலான வார்த்தை புதிர்களை தீர்ப்பது போன்ற உயர்நிலை பணிகளையும் செய்கிறது. ஒட்டுமொத்தமாக ஓரியன் ஏஐ ஆனது கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏஐ-க்கு (Google Gemini AI) கடும் போட்டியாளர் ஆகவும், ஒரு பெரிய தலைவலியாகவும் இருக்க போகிறது!


Click it and Unblock the Notifications








