புது ரூல்ஸ்.. பேங்க் அக்கவுண்ட்டில் 100 சதவீத பணம்.. PF மெம்பர்கள் முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க!
இபிஃஎப்ஓ (EPFO) என்கிற ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees Provident Fund Organisation) ஆனது சிறப்பு சூழ்நிலைகளின் (Special Circumstances) கீழ் 100 சதவீத பிஎப் பணத்தை பேங்க் அக்கவுண்டுக்கு மாற்றுகிறது. இந்த புதிய விதிகளின்படி முழு பணத்தையும் எடுக்கலாம்.
பிஎப் அக்கவுண்ட் வைத்திருக்கும் ஊழியர்கள் அதிகபட்சம் 75 சதவீத பிஎப் பணத்தை மட்டுமே எடுக்க முடியும். 25 சதவீத பணத்தை அப்படியே வைத்திருக்க வேண்டும். இந்த விதிகளின்படியே பிஎப் அக்கவுண்ட்டில் இருந்து பேங்க் அக்கவுண்டுக்கு பணம் மாற்றப்படுகிறது. இதில் புதிய விதிகள் அமலாகி இருக்கின்றன.

இந்த விதிகளின்படி சிறப்பு சூழ்நிலைகளை காரணம்காட்டி 100 சதவீத பிஎப் பணத்தை எடுத்து கொள்ளலாம். ஆகவே, இதன்படி பணத்தை எடுக்கும்போது சிறப்பு சூழ்நிலைக்கான ஆதாரத்தையும் தெரிவிக்க வேண்டி இருக்கும். இந்த புதிய விதிகளின்படி யாருக்கு 100 சதவீத பிஎம் பணத்தை எடுக்க அனுமதி கிடைக்கும் என்பது குறித்த விவரங்களை பார்ப்போம்.
இயற்கை பேரிடர் (Natural Disaster), பெருந்தொற்று (Pandemic), பணிநிறுத்தம் (Lockout) அல்லது வேலையின்மை (Unemployment) போன்ற சிறப்பு சூழ்நிலைகளில் மட்டுமே 100 சதவீத பிஎப் பணத்தை எடுக்க அனுமதி கொடுக்கப்படும். ஆனால், பிஎம் மெம்பர்கள் அதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டும். மேலும், ஆதாரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
பிஎம் மெம்பர்கள் வேலை பார்க்கும் நிறுவனம் 15 நாட்களுக்கு மேல் மூடப்பட்டிருத்தல் (Lockout/closure) மற்றும் ஊதியமில்லாமல் வேலையின்றி இருத்தல் அல்லது வேலைநிறுத்தம் காரணமாக அல்லாமல், இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊதியம் பெறாமல் இருத்தல் ஆகியவற்றின்போது 100 சதவீத பிஎப் பணத்தை பேங்க் அக்கவுண்டுக்கு மாற்ற முடியும்.
இதற்கு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட படிவம் ஏ மற்றும் படிவம் பி ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். உறுப்பினர் பணிநீக்கம், பணியிலிருந்து விடுவிப்பு அல்லது ஆட்குறைப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டு இருந்தால் 100 சதவீத பணத்தை எடுக்கலாம். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் நகலை ஆதாரமாக கொடுக்கலாம்.
மேலும், வழக்கு நிலுவையில் உள்ளதை உறுதிப்படுத்தும் ஆவணத்தையும் கொடுக்கலாம். 6 மாதங்களுக்கும் மேலாக நிறுவனம் மூடப்பட்டு, ஊழியர்கள் வேலையில்லாமல் இருக்கும்போது, படிவம் ஏ மற்றும் படிவம் பி ஆகியவற்றை கொடுத்து 100 சதவீத பணத்தை எடுக்கலாம். இதை நிறுவனத்திடம் இருந்து பெற்று கொள்ளலாம்.
குடும்ப உறுப்பினர் அல்லது பிஎப் மெம்பருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்படும்போது, 100 சதவீத பணத்தை எடுக்கலாம். இதில் நிறுவனம் மற்றும் மருத்துவரால் கையொப்பமிடப்பட்ட சி படிவம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதுபோன்ற சூழ்நிலைகளில் பிஎப் உறுப்பினர்களின் தேவையை பூர்த்தி செய்ய இபிஃஎப்ஓ விதிகளை மாற்றி இருக்கிறது.
இருப்பினும், சாதாரண சூழ்நிலைகளில் உறுப்பினர்கள் தங்களது இபிஎஃப் (EPF) பணத்தில் இருந்து 75 சதவீதம் வரை மட்டுமே எடுக்க முடியும். இந்த 75 சதவீத தொகையை திரும்பப் பெறுவதற்கு ஆதாரங்கள் சமர்பிக்கப்பட வேண்டியது கிடையாது. எப்போது வேண்டுமானாலும், கிளைம் செயல்முறையை செய்து கொள்ளலாம்.
ஆனால், சிறப்புச் சூழ்நிலைகளில் முழு தொகையையும் திரும்ப பெறும்போது, குறிப்பிட்ட ஆதாரங்கள் கேட்கப்படும். இதை பிஎப் மெம்பர்கள் நினைவில் வைத்து கொள்ள வேண்டும். அவரச காலங்களில் பிஎப் பணத்தை எடுக்கும்போது, நிராகரிப்பு நடப்பதால் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஆனது இந்த விதிகளை கொண்டு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications