Home
News

சதுரங்க வேட்டை ஸ்டைலில் மோசடி.. FREE-ஆ ஆப்பிள் வாட்ச் கிடைக்கும்னு நம்பி தினமும் 15000 Steps நடந்து யூசர்கள்!

கடந்த 2024 இல், இன்சூரன்ஸ் பிளாட்ஃபார்ம் ஆன ஸூப்பர் (Zopper) நிறுவனமானது ஹெச்டிஎஃப்சி எர்கோவுடன் (HDFC Ergo) இணைந்து இந்தியா கெட்ஸ் மூவிங் என்கிற பிரச்சாரத்தை (India Gets Moving Campaign) தொடங்கியது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் உடற்பயிற்சி செய்வதை ஊக்குவிக்கும் நோக்கத்தின் கீழ் உருவான பிரச்சாரமாகும்.

இந்த பிரச்சாரத்தில் பங்குகொள்பவர்களுக்கு, அவர்களுடைய ஆப்பிள் வாட்ச்சின் இன்வாய்ஸ் வேல்யூவில் 100% கேஷ்பேக் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பிரச்சாரத்தின் கீழ் கிடைக்கும் 100% கேஷ்பேக்கிற்கு தகுதி பெற, பங்கேற்பாளர்கள் தினமும் 15,000 ஸ்டெப்ஸ்களை முடிக்க வேண்டும்; அவற்றை ஆப்பிள் வாட்சை பயன்படுத்தி கண்காணிக்க வேண்டும் மற்றும் பாயிண்ட்ஸ்களை குவிக்க வேண்டும்.

FREE-ஆ ஆப்பிள் வாட்ச் கிடைக்கும்னு தினமும் 15000 Steps நடந்து யூசர்கள்

கடைசியாக வெற்றிகரமான உரிமைகோரல் சமர்ப்பிப்புக்கு 100% கேஷ்பேக் கிடைக்குமென்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்கீழ் பங்கேற்ற பல பயனர்கள் அவர்களுடைய ஸ்டெப்ஸ் எண்ணிக்கையை முடித்து, 100% கேஷ்பேக்கை கோரும் போது, தங்களுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக கூறுகின்றனர். இந்த பிரச்சாரத்தின் கீழ், பயனர்களின் ஸ்டெப்ஸ் கவுண்ட் ஆனது மேனிபுலேஷன் செய்யப்பட்டதாக எச்டிஎஃப்சி எர்கோ குற்றம் சாட்டுகிறது

அதாவது சில பயனர்கள் தங்கள் ஆப்பிள் வாட்ச்களை மற்றவர்களுக்கு கொடுத்து நடக்க வைத்ததாகவும் அல்லது ஸ்டெப்ஸ்களை தவறாக பயன்படுத்த எக்ஸ்டெர்னல் டூல்களை பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டுகிறது. இருப்பினும், பயனர்களின் கோரிக்கையை நிராகரிப்பதற்கான நியாயமான மற்றும் உறுதியான ஆதாரம் எதுவும் வழங்கப்படவில்லை.

ஸூப்பரின் 100% கேஷ்பேக் சலுகையானது, இந்தியா கெட்ஸ் மூவிங் பிரச்சாரத்தில் இணைய ஏராளமான பங்கேற்பாளர்களை ஈர்த்தது. இதற்காகவே சிலர் ஆப்பிள் வாட்சை வாங்கினார்கள். இதில் பலரும் தங்களுக்கு 100% கேஷ்பேக் கிடைக்கும் என்கிற வாக்குறுதியை நம்பினார்கள். ஆனால் பலருடைய உரிமைகோரல்கள் நிராகரிக்கப்படும் போது தான் தாங்கள் நிதி சார்ந்த அழுத்தத்தில் சிக்கி கொண்டதை உணர்ந்துள்ளனர்.

கோரிக்கைகளை நிகாரித்தது தவிர்த்து, எச்டிஎஃப்சி எர்கோ சில பயனர்களுக்கான காப்பீட்டுக் கொள்கைகளை ரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்த வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு சரியான பதில்கள் கிடைக்கவில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. பலமுறை மின்னஞ்சல்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக கேள்விகளை கேட்டாலும், இந்நிறுவனம் பெரும்பாலும் பதிலளிக்கவில்லை.

இதுகுறித்து மணிகண்ட்ரோல் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, இந்த பிரச்சாரத்திற்கு தேவையான ஸ்டெப்ஸ்ளை பயனர்கள் முடித்திருந்தாலும் கூட, உரிமைகோரல்கள் ஏன் மறுக்கப்பட்டன என்பது குறித்து எச்டிஎஃப்சி எர்கோவிடம் கேட்டபோது, சில நபர்களின் விஷயத்தில், நாங்கள் அசாதாரணமான மற்றும் சந்தேகத்திற்குரிய தரவுகளை கண்டோம். ஒரு முழுமையான விசாரணையை நடத்தியதில், குறிப்பிட்ட பங்கேற்பாளர்களால் தரவுகள் மேனிபுலேஷன் செய்யப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.

இது திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறுகிறது. இதன் விளைவாக, குறிப்பிட்ட பங்கேற்பாளர்களின் பாலிசிகளை நிறுத்துவதற்கு நாங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளோம். இதேபோல எந்தவிதமான மேனிபுலேஷனும் செய்யாத அல்லது கண்டறியப்படாத பங்கேற்பாளர்களின் கூற்றுகளை நாங்கள் மதிக்கிறோம் என்று எச்டிஎஃப்சி எர்கோ நிறுவனம் பதில் அளித்துள்ளது.

எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கல்களைத் தடுப்பது எப்படி? இதுபோன்ற சூழ்நிலைகளில் தவிர்க்க, நுகர்வோர்கள் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: முதலில் ஒரு சலுகையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சரியாக படிக்கவும். குறிப்பாக கேஷ்பேக் அல்லது ரிவார்டு திட்டங்களில் பங்கேற்பதற்கு முன், அதை பெறுவதற்கான தகுதிக்கான நிபந்தனைகளை முழுமையாக மதிப்பாய்வு செய்ய வேண்டும்

மேலும் இது போன்ற விளம்பர சலுகைகளின் நம்பகத்தன்மையை மதிப்பிடுவதற்கு, அந்த சலுகையை வழங்கும் நிறுவனத்தின் கடந்த கால பிரச்சாரங்கள் மற்றும் வாடிக்கையாளர் கருத்துக்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். தேவைப்பட்டால் ஆதாரமாக செயல்பட, ஸ்கிரீன்ஷாட்கள், ஸ்டெப்ஸ் கவுண்ட் ஹிஸ்டரி மற்றும் ஜிபிஎஸ் தரவு உள்ளிட்ட தகவல்களை பராமரிக்க வேண்டும் கடைசியாக, கேஷ்பேக் கிடைக்கும் என்கிற வாக்குறுதிகளின் அடிப்படையில் மட்டுமே எந்தவொரு பெரிய கொள்முதலையும் செய்ய வேண்டாம். ஏனெனில் விதிமுறைகள் மாறலாம் அல்லது உங்களுடைய கோரிக்கைகள் மறுக்கப்படலாம். நஷ்டம் உங்களுக்கு தான்!

More from GizBot

Best Mobiles in India

English summary
100 percent Cashback on Apple Watch What Went Wrong in HDFC Ergo Zopper Daily 15000 Steps Campaign
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X