இனி 100 டிவி சேனல்கள் ரூ.153: அதிரடியாக அறிவித்த டிராய்.!

இதைத்தொடர்ந்தது, சேனல்களுக்கு ஜிஎஸ்டியும் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது இருந்தது. இந்நிலையில், 100 டிவி சேனல்கள் ரூ.153க்கு வழங்கப்படும் என்று டிராய் அதிரடியாக அறிவித்துள்ளது.

|

கடந்த சில நாட்களுக்கு முன் 100 டிவி சேனல்களை இலவசமாக வழங்கப்படும் என்று இந்திய தொலைத் தொடர்பு ஒழங்கு முறை ஆணையம் (டிராய்) அறிவித்தது.

இனி 100 டிவி சேனல்கள் ரூ.153: அதிரடியாக அறிவித்த டிராய்.!

இதைத்தொடர்ந்தது, சேனல்களுக்கு ஜிஎஸ்டியும் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது இருந்தது.

இந்நிலையில், 100 டிவி சேனல்கள் ரூ.153க்கு வழங்கப்படும் என்று டிராய் அதிரடியாக அறிவித்துள்ளது.

 ரூ.153 கட்டணம்:

ரூ.153 கட்டணம்:

டிராய் கேபிள் மற்றும் டி.டி.ஹெச். சேவை கட்டணம் பற்றி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், வாடிக்கையாளர்கள் 100 இலவச சேனல்களையோ அல்லது கட்டண சேனல்களையோ ரூ.153.40 கட்டணத்திற்கு தேர்வு செய்து கண்டு களிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டியுடன் கட்டணம்:

ஜிஎஸ்டியுடன் கட்டணம்:

புதிய கட்டணம் மாதம் ரூ.130 ஆகும். அதற்கான ஜி.எஸ்.டி. சேர்த்து மாதம் ரூ.154 ரூபாய் ஆகிறது. புதிய அறிவிப்பின் படி வாடிக்கையாளர்கள் 100 சேனல்களை ஜனவரி 31ஆம் தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும். பின் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சேனல்களுக்கான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது. இந்த விதிமுறைகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலாகும்.

டிடிஹெச் சேனல்கள் தேர்வு:

டிடிஹெச் சேனல்கள் தேர்வு:

இந்த அறிவிப்பில் ஹெச்.டி. சேனல்கள் இடம்பெறாது. முன்னதாக வெளியான தகவல்களில் வாடிக்கையாளர்கள் ஹெச்.டி. சேனல்களையும் தேர்வு செய்யலாம் எனக் கூறப்பட்டது.

100 டிவி சேனல்கள் இலவசம்:

100 டிவி சேனல்கள் இலவசம்:

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கையால், வரும் 29ம் தேதி முதல் கேபிள் டிவி, டிடிஹெச் உள்ளிட்ட டிவி சேனல்களுக்கு கட்டணம் குறைக்கப்படுகின்றது. தங்களது சேனல்களுக்கு கட்டணங்களும் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 100 டிவி சேனல்களும் தற்போது இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

100 சேனல்கள் இலவசம்:

100 சேனல்கள் இலவசம்:

ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் நெட்வொர்க் கெபாசிடி கட்டணமாக 130 ரூபாயும், 18 சதவிகித GST வரியான 23 ரூபாய் 40 பைசாவுடன் சேர்த்து மொத்தம் 153 ரூபாய் 40 பைசா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்துடன் அடிப்படை பேக்கேஜாக தூர்தர்ஷன் உள்பட 100 இலவச சேனல்கள் வழங்கப்படும்.

ஜிஎஸ்டி அமலில் இருக்கின்றது:

ஜிஎஸ்டி அமலில் இருக்கின்றது:

மேலும், கட்டணமற்றவை என வகைப்படுத்தப்பட்டுள்ள சேனல்களின் பட்டியலில் இருந்து, கூடுதலாக வாடிக்கையாளர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு 25 சேனல்களுக்கும், 20 ரூபாய் கட்டணத்தையும் அதற்கான 18 சதவிகித GST வரியாக 3 ரூபாய் 60 பைசா சேர்த்து மொத்தம் 23 ரூபாய் 60 பைசா செலுத்த வேண்டும்.

விலை விவரம் அறிவிப்பு:

விலை விவரம் அறிவிப்பு:

இந்த 25 சேனல்களில் ஏதாவது கட்டண சேனல்களாக இருந்தால், இந்த 23 ரூபாய் 60 பைசாவுடன் சேர்த்து, அந்த கட்டண சேனலுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை தனித்தனியாக ஜி.எஸ்.டி வரியுடன் சேர்த்து செலுத்த வேண்டும். ஒவ்வொரு கட்டண சேனலுக்குமான விலை விவரங்கள், அந்தந்த சேனல் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களிலும் பதிவேற்றப்பட்டுள்ளன.

மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு:

மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு:

கேபிள், DTH, ஐபிடிவி உள்ளிட்ட எந்த இயங்குதளமாக இருந்தாலும், மாற்றங்களின்றி ஒரே மாதிரியாகவே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் சுதந்திரமாக தங்களது விருப்ப சேனல்களை மாதந்தோறும் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டு உள்ளது.

கட்டணம் குறைப்பு:

கட்டணம் குறைப்பு:

ஏற்கனவே பார்வையாளர்களின் விருப்பத்தை கேட்காமலேயே அனைத்து வீடுகளுக்கும் கட்டண சேனல்கள் சென்றடைந்தன. ஆனால், தற்போது வாடிக்கையாளர் விரும்பும் கட்டண சேனல்களுக்கு மட்டுமே அதற்குரிய தொகையை செலுத்தி பார்க்க முடியும் என்பதால், அந்த கட்டண சேனல்கள் தங்கள் பார்வையாளர்களின் எண்ணிக்கையிலும், விளம்பர வருமானத்திலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் கட்டண சேனல்கள், தங்கள் கட்டணத்தை குறைக்கவோ அல்லது கட்டணம் இல்லா சேனலாக மாறவோ வாய்ப்பு உருவாகும் என்று கூறப்படுகிறது.

செட் ஆப் பாக்ஸில் மாற்றம்:

செட் ஆப் பாக்ஸில் மாற்றம்:

இம்மாதம் வருகிற 28 ந்தேதி இரவுடன் அனைத்து கட்டண சேனல்களும் நிறுத்தப்பட்டு, 29ந் தேதி முதல் வாடிக்கையாளர்கள் விரும்பும் கட்டண சேனல்கள் மட்டுமே வழங்கப்படும் என்பதால் கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் இப்போதே தங்கள் கேபிள் ஆபரேட்டர்களை தொடர்பு கொண்டு, தேவையான கட்டண சேனல்களை மட்டும் பார்க்கும் வகையில் செட் ஆப் பாக்சில் மாற்றங்கள் செய்து கொள்ளலாம்.

அனலாக்கில் சேனல்கள் வழங்க தடை:

அனலாக்கில் சேனல்கள் வழங்க தடை:

மேலும் செட் ஆப் பாக்ஸ் இல்லாத அனலாக் கேபிள் இணைப்புகளில் சேனல்கள் வழங்க ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
100 pay or free tv channels for rs 153 month trai : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X