எல்லாருக்கும் இலவசம்.. தீபாவளி ஆபர்னா இப்படி இருக்கனும்.. அம்பானி சார் ACT Fibernet-ஐ பார்த்து கத்துக்கோங்க!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வழியாக பல மில்லியன் கஸ்டமர்களை கட்டி ஆளும் முகேஷ் அம்பானியே.. "அடேங்கப்பா" என்று வாய் பிளந்து பார்க்கும் அளவிற்கு, ஆக்ட் ஃபைபர்நெட் (ACT Fibernet) நிறுவனமானது ஒரு தரமான 2024 தீபாவளி ஆபரை (2024 Diwali Offer) அறிவித்துள்ளது. பிராந்திய பிராட்பேண்ட் சேவை வழங்குநர் ஆன ஆக்ட் ஃபைபர்நெட், அதன் பயனர்களுக்கு அப்படி என்ன சலுகையை அறிவித்துள்ளது. எல்லோருக்கும் இலவசம் என்றால்.. யார் யாருக்கு என்னென்ன இலவசம்? இந்த சலுகை இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும்? இதோ விவரங்கள்:
தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆக்ட் ஃபைபர்நெட் ஆனது அதன் அனைத்து கஸ்டமர்களின் இண்டர்நெட் ஸ்பீடையும் அப்கிரேட் செய்ய முடிவு செய்துள்ளது. அதாவது ஆக்ட் ஃபைபர்நெட் சேவையின் கீழ் நீங்கள் எந்தவொரு திட்டத்தை ரீசார்ஜ் செய்து இருந்தாலும் கூடம் இந்த தீபாவளி ஆபரின் கீழ் உங்களுடைய பிளானின் இன்டர்நெட் "தானாகவே: ஸ்பீட் அதிகரிக்கப்படும்.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால்.. 100 எம்பிபிஎஸ்-க்கும் குறைவான திட்டங்களில் உள்ள பயனர்களின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது எம்பிபிஎஸ் ஆக அப்கிரேட் செய்யப்படும். இதேபோல 100 - 300 எம்பிபிஎஸ் திட்டங்களில் உள்ள பயனர்களின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 300 எம்பிபிஎஸ்-க்கு மேம்படுத்தப்படும் கடைசியாக, 300 - 500 எம்பிபிஎஸ் ஸ்பீட் திட்டங்களில் உள்ள பயனர்கள் 500 எம்பிபிஎஸ் ஸ்பீட்டிற்கு மேம்படுத்தப்படுவார்கள்.
தங்களுடைய இண்டர்நெட் ஸ்பீடை மேம்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்கள் ஆக்ட் ஃபைபர்நெட் ஆப்பை (ACT Fibernet app) பதிவிறக்கம் செய்யலாம் என்று ஆக்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தீபாவளி ஆபரின் கீழ், அனைத்து பிராந்தியங்களிலும் உள்ள ஆக்ட் ஃபைபர்நெட் வாடிக்கையாளர்களால் தங்கள் திட்டங்களின் இண்டர்நெட் ஸ்பீடை மேம்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ட் நிறுவனத்தின் இந்த [பண்டிகை கால சலுகை அக்டோபர் 31, 2024 வரை அணுக கிடைக்கும். அதாவது அப்கிரேட் செய்யப்பட்ட இண்டர்நெட் ஸ்பீடை நீங்கள் அக்டோபர் 31, 2024 வரை அனுபவிக்கலாம் என்று அர்த்தம். இந்த பண்டிகை காலத்தில், வேகமான இண்டர்நெட் ஸ்பீடை அனுபவிக்கவும், கேமிங், ஸ்ட்ரீமிங் மற்றும் பல செயல்பாடுகளில் ஈடுபடவும் விரும்பும் ஆக்ட் ஃபைபர்நெட் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு சிறப்பான தீபாவளி பரிசாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
ஆக்ட் ஃபைபர்நெட் நிறுவனம் அறிவித்துள்ள இந்த 2024 தீபாவளி பண்டிகை கால சலுகையை நீங்கள் பெற அதிக நாட்கள் இல்லை. இந்த சலுகை இன்னும் சில தினங்களில் முடியவடைய உள்ளது. எனவே, நீங்கள் ஏற்கனவே இந்த சலுகையை பெறவில்லை என்றால், உடனே ஆக்ட் ஃபைபர்நெட் ஆப்பை பதிவிறக்கி, அதில் லாக்-இன் செய்து, உங்கள் பிராட்பேண்ட் திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீடை மேம்படுத்தவும்.
ஆக்ட் ஃபைபர்நெட் சேவைக்கான இணைப்புகளை இந்நிறுவனத்தின் இணையதளம் மூலம் நேரடியாக பதிவு செய்யலாம். இந்நிறுவனம் ஓடிடி (ஓவர்-தி-டாப்) உடன் தொகுக்கப்பட்ட பிராட்பேண்ட் திட்டங்களையும், ஓடிடி அல்லாத திட்டங்களையும் கொண்டுள்ளது. நெட்பிளிக்ஸ் சந்தாவுடன் வரும் சில திட்டங்களும் ஆக்ட் ஃபைபர்நெட் நிறுவனத்திடம் உள்ளன. இதன்கீழ் வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சிகளை நெட்பிளிக்ஸ் வழியாக இலவசமாக, கூடுதல் கட்டணமின்றி பார்க்கலாம்.
இந்த ஆஃபர் குறித்து, ஆக்ட் ஃபைபர்நெட் சிஎம்ஓ, ரவி கார்த்திக் கூறுகையில், ஆக்ட் ஃபைபர்நெட் நிறுவனம் ஆனது சிறப்பான வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதில் நம்பிக்கை கொண்டுள்ளது. இந்த ஆண்டுக்கான, பண்டிகை காலத்தை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சிறப்பாக்கும் வகையில், பயனர்களுக்கான பிளான் ஸ்பீடை மேம்படுத்துகிறோம். இந்த சிறப்பு சலுகையுடன், ஒவ்வொருவரும் மாதம் முழுவதும் தடையற்ற, வேகமான இணைய அனுபவத்தை அனுபவிக்க முடியும் என்பதையும், தங்கள் அன்புக்குரியவர்களுடன் தொடர்ந்து இணைந்திருப்பதையும் நாங்கள் உறுதிசெய்கிறோம்.


Click it and Unblock the Notifications








