பிரமாண்ட மர்ம பள்ளம்: இது 9-வது முறை., நீடிக்கும் அதீத மர்மங்கள்- உறைந்தபோகும் விஞ்ஞானிகள்!

|

ரஷ்யாவின் ஒன்பாவது முறையாக மர்ம பள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. தொடர்ந்து இந்த பள்ளம் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். விஞ்ஞானிகள் இடையே இந்த பள்ளம் குறித்து தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

நாளுக்கு நாள் ஆச்சரியங்களும், அதிசியங்களும்

நாளுக்கு நாள் ஆச்சரியங்களும், அதிசியங்களும்

பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாக இருக்கும் பூமியில் நாளுக்கு நாள் ஆச்சரியங்களும், அதிசியங்களும் நிகழ்ந்துக் கொண்டேதான் இருக்கிறது. புதுப்புது கண்டுபிடிப்புகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அதேபோல் ரஷ்யாவில் தொடர்ந்து மர்ம பள்ளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் மர்ம நிகழ்வு

ரஷ்யாவில் மர்ம நிகழ்வு

கடந்தாண்டு ரஷ்யாவில் மர்ம நிகழ்வு ஒன்று கண்டறியப்பட்டது. அது பூமியில் பள்ளம் உருவாகியது ஆகும். இந்த பள்ளமானது ஷின்க்ஹோல் அதாவது பூமியில் ஏற்பட்ட பெரிய அளவிலான பள்ளமாகும். இதுபோன்ற பள்ளம் மேற்கத்திய நாடுகளில் பூகம்பம் நிகழும் அடிக்கடி நிகழும் ஜப்பானில் அவ்வப்போது ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.

98 அடி ஆளம் கொண்ட பள்ளம்

98 அடி ஆளம் கொண்ட பள்ளம்

ரஷ்யாவில் கடந்தாண்டு துலு என்ற நகரத்தில் சுமார் 48 அடி விட்டமும், 98 அடி ஆளமும் கொண்ட இந்த பள்ளம் கொண்டது. இந்த பள்ளம் அனைத்து பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.

9 முறையாக ரஷ்யாவில் மர்ம பள்ளம்

9 முறையாக ரஷ்யாவில் மர்ம பள்ளம்

இதுபோல் ரஷ்யாவில் 2013 ஆம் ஆண்டு முதலே மர்ம பள்ளங்கள் கண்டறியப்பட்டு வருகினறன. அதன்வரிசையில் தற்போது 9 முறையாக ரஷ்யாவில் மர்ம பள்ளம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பள்ளங்கள் எதனால் உருவாகிறது, எப்படி உருவாகிறது என்ற கேள்விகள் உட்படுத்தி விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

மனிதர்களை போல் போதைக்கு அடிமையாகும் டால்பின்கள்! விஞ்ஞானிகள் போட்டு உடைத்த உண்மை!மனிதர்களை போல் போதைக்கு அடிமையாகும் டால்பின்கள்! விஞ்ஞானிகள் போட்டு உடைத்த உண்மை!

ரஷ்யாவின் தொலைக்காட்சி குழு

ரஷ்யாவின் தொலைக்காட்சி குழு

ரஷ்யாவில் சைபீரியா பகுதியில் 9-வது மர்ம பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தை ரஷ்யாவின் தொலைக்காட்சி குழுவினர் படம் பிடித்துள்ளனர். சைபீரியாவின் தந்த்ரா பகுதியில் சுமார் 100 அடி ஆழமும், 70 அடி விட்டமும் கொண்ட பிரமாண்ட பள்ளம் என தெரியவிக்கப்பட்டுள்ளது.

பறக்கும் தட்டுகள் பூமியில் தரையிறங்கி இருக்கலாம்

பறக்கும் தட்டுகள் பூமியில் தரையிறங்கி இருக்கலாம்

2013 ஆம் ஆண்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட 9-வது பெரிய பள்ளமாக இது உள்ளது. இந்த பள்ளமானது விண்கல் விழுந்து ஏற்பட்டிருக்கலாம், பறக்கும் தட்டுகள் பூமியில் தரையிறங்கி இருக்கலாம், ராணுவ ரகசிய நிலத்தடி அறைகளாக இருக்கலாம் போன்ற பல்வேறு காரணங்கள் பரவி வருகிறது.

பள்ளம் குறித்த ஆராய்ச்சிகள்

பள்ளம் குறித்த ஆராய்ச்சிகள்

இந்த பள்ளம் குறித்த ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் மீத்தேன் வாயு வெடிப்பினால் கூட இந்த பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என நோக்கிலும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

source: cnn.com

Pic Courtesy: Socialmedia

Best Mobiles in India

English summary
100 Foot Huge Crater Spotted on Russia: How the Hole Formed Scientists Research

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X