Home
News

க்யூரியாசிட்டி ரோவரிடம் சிக்கிய விசித்திரம்..!

"கண்ணால் பார்ப்பது பொய்" - என்ற பழமொழி நிஜமாகவே கொஞ்சம் பழையதாகி விட்டது என்று தான் கூற வேண்டும். 'கண்ணால் காண்பது தான் மெய்' என்றாகி விட்டது, ஏனெனில் கண்ணால் காண்பது தான் சாட்சி. அப்படியான சில சாட்சிகளில் கண்ணால் காண்பதை விட அதிக பலம் வாய்ந்த ஒன்றாய் இருப்பது தான் - புகைப்படங்கள்..!

அப்படியாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசவினால் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய அனுப்பட்ட க்யூரியாசிட்டி ரோவர் எடுத்து அனுப்பிய சில விசித்திரமான புகைப்படங்கள் உலகையே உற்று நோக்க வைத்தது என்பது தான் நிதர்சனம். அவைகளில், மிகவும் விசித்திரமான 10 புகைப்படங்கள் தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுக்கப்பட்டுள்ளன.

01. அடுக்கப்பட்ட கற் குவியல் :

01. அடுக்கப்பட்ட கற் குவியல் :

இங்கிலாந்தில் இருப்பது போன்றே (The StoneHenge) வட்ட வடிவில் அடுக்கப்பட்டு இருக்கும் கற் குவியல்..!

02. மிதக்கும் ஸ்பூன் :

02. மிதக்கும் ஸ்பூன் :

ஆகஸ்ட் மாதம் படம் பிடிக்கப்பட்ட காற்றில் மிதக்கும் இந்த ஸ்பூன் இன்டர்நெட்டையே கலக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

03. மர்ம பெண் உருவம் :

03. மர்ம பெண் உருவம் :

பாறையின் மேலேறி நிற்கும் இந்த மர்ம உருவம் செவ்வாய் கிரக நாகரிகம் சார்ந்த சிலை என்று நம்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

04. ஒளி வீச்சு :

04. ஒளி வீச்சு :

யூஎஃப்ஓ எனப்படும் பறக்கும் தட்டு சார்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிய ஆதரவாய் அமைந்தது தான் ஒளி வீச்சை பிரதிபலிக்கும் இந்த புகைப்படம்.

05. கடற்கன்னி :

05. கடற்கன்னி :

முதலில் நடமாடும் பெண் உருவம் என்று கூறப்பட்ட இந்த மர்ம உருவம் பின் ஒரு விசித்திரமான கடல்கன்னி உருவம் என்ற கோணத்தில் ஆராயப்பட்டு வருகிறது.

06. தலைக்கவசம் : :

06. தலைக்கவசம் : :

செயற்கையாக உருவாக்கப்பட்ட தலைக்கவசம் போன்று காட்சியளிக்கும் ஒரு மர்ம பொருள்.

07. பிரமிட்  :

07. பிரமிட் :

க்யூரியாசிட்டி ரோவர் புகைப்படத்தில் சிக்கிய பிரமிட் போன்ற அமைப்பை கொண்ட பாறை.

08. பறக்கும் தட்டு :

08. பறக்கும் தட்டு :

கீழே விழுந்து நொறுங்கி கிடக்கும் யூஎஃப்ஓ எனப்படும் பறக்கும் தட்டு போன்ற உருவம்.

09. எலி உருவம் :

09. எலி உருவம் :

இதை சிலர் எலி போல் காட்சியளிக்கிறது என்கிறார்கள், சிலர் இது கொறிணி (Rodent) வகை விளங்கு போல் தெரிகிறது என்கிறார்கள்.

10. முகங்கள் :

10. முகங்கள் :

செவ்வாய் கிரகத்தில் உயிர்வாழ்வு சாத்தியம் தான் என்ற விவாதத்தை தூண்டிவிட்ட ஆதாரங்களில் மிகவும் முக்கியமானது தான் முகங்கள் போன்ற அமைப்பை கொண்ட இந்த புகைப்படம். இந்த புகைப்படத்தை 1976-ஆம் ஆண்டு வைக்கிங் 1 விண்கலம் எடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செவ்வாய் கிரகம் சார்ந்த செய்திகளுக்கு :

மேலும் செவ்வாய் கிரகம் சார்ந்த செய்திகளுக்கு :

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

More from GizBot

Best Mobiles in India

English summary
10 weird things photographed by NASA's Curiosity rover. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X