ஸ்மார்ட்போனும் உலகத்தை காக்கும்..!

By Meganathan

ஸ்மார்ட்போன் உண்மையில் அற்புத கண்டுப்பிடிப்பு தான் போல, அதுவும் நம்மாளுங்க இதை வச்சு செய்யாத வேலையே கிடையாது எனலாம், இது இப்ப முக்கியமில்லை இந்த கருவியை கொண்டு ஆய்வாளர்கள் என்ன செய்கின்றார்கள் என்று பாருங்கள்.

ஸ்மார்ட்போன் மூலம் அதை செய்யலாம், இதை செய்யலாம் என எல்லோருக்கும் தெரியும், ஆனால் உலகத்தை காப்பாற்ற முடியுமா, முடியும் என்கின்றனர் அறிவியல் வல்லுநர்கள், எவ்வாறு என்பதை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்...

மாசு

மாசு

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் காற்றின் மாசு அளவை கணக்கிடும் சிறிய ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இம்முறையில் சென்சார் தகவல்களை கொண்டு சிட்டிசென்ஸ் எனும் செயலியின் மூலம் காற்றின் தரத்தை கண்டறிய முடியும். இதோடு மக்களும் இந்த செயலியை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோஸ்கோப்

மைக்ரோஸ்கோப்

UCLA ஆய்வாளர்கள் கையடக்க மைக்ரோஸ்கோப் ஒன்றை உருவாக்கியுள்ளனர், இதை கொண்டு வைரஸ் கிருமியை படமாக்க முடியும். குறிப்பாக இந்த சிறிய மைக்ரோஸ்கோப் ஸ்மார்ட்போனில் பொருந்தி கொள்ளும்.

அக்செல்லோமீட்டர்
 

அக்செல்லோமீட்டர்

இத்தாலி நாட்டின் ஜியோஃபிசிக்ஸ் மற்றும் வல்கனாலஜி துறையை சேர்ந்த நிலநடுக்க வல்லுநர்கள் ஐபோன் 4 மற்றும் ஐபோன் 5 கருவிகளில் இருக்கும் MEMS சிப்களை கொண்டு நிலநடுக்கம் சார்ந்த தகவல்களை சேகரிக்க முடியும் என்று கண்டறிந்திருக்கின்றனர். இதன் மூலம் நிலநடுக்கம் சார்ந்த தகவல்களை வேகமாக சேகரிப்பதோடு பல உயிர்களை காக்க முடியும் என்றும் இதற்கான எளிய முறை தொழில்நுட்பம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் கூறப்படுகின்றது.

கண் பார்வை

கண் பார்வை

ஸ்மார்ட்போனுடன் இணைந்து வேலை செய்யும் கருவியினை எம்ஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர், இந்த கருவி லேசார் மூலம் மக்களின் கண் பார்வை சார்ந்த பிரச்சனைகளை கண்டறியும். இந்த கருவி ரூ.150க்குள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வானிலை

வானிலை

வானிலை அறிக்கைகளை துல்லியமாக கண்டறிய சாட்கேம் எனும் செயலி கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் வானிலை நிலவரங்களை கச்சிதமாக அறிந்து கொள்ள முடியும் என்கின்றனர் விஸ்கான்சின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

தகவல்

தகவல்

தகவல்களை சேகரிக்க பயனுள்ளதாக இருக்கும் எபிகலெக்ட் எனும் செயலியை லண்டனில் இருக்கும் இம்பீரியல் கல்லூரியின் நோய்த் தொற்று அறிவியல் துறையினர் கண்டறிந்துள்ளனர், இதன் மூலம் ஸ்மார்ட்போன்களை கொண்டு குறுகிய காலத்தில் அதிகளவிலான தகவல்களை சேகரிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி

விண்வெளி

ஸ்மார்ட்போன்களை கொண்டு விண்வெளி ஆய்வு பணிகளின் செலவுகளை குறைக்க முடியுமா என்ற சோதனையில் இரு திட்டங்கள் தற்சமயம் செயல்பாட்டில் இருக்கின்றது.

விண்கல்

விண்கல்

ஸ்மார்ட்போன்களின் வரவு பொது மக்களை தகவல்களை பகிர்ந்து கொள்ள வழி செய்கின்றது, விலங்குகளை கண்கானிக்க ஏற்கனவே பல செயலிகள் பயன்பாட்டில் இருக்கும் நிலையில் விண்கல் பொழிவு சார்ந்த தகவல்களை சேகரிக்க உதவும் செயலியை நாசா கண்டறிந்திருக்கின்றது. இந்த தகவல்கள் வல்லுநர்களுக்கு பரிசுதோனைகளுக்காக அனுப்பப்படும்.

மகிழ்ச்சியான வாழ்க்கை

மகிழ்ச்சியான வாழ்க்கை

மக்களை மகிழ்ச்சியாக்க எமோஷன் சென்ஸ் எனும் செயலியை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர். இதன் மூலம் மக்கள் செல்லும் இடம் மற்றும் அங்கு அவர்கள் எப்படி உணர்கின்றார்கள் என்பதை கேட்டரிந்து கொள்ளும், பின் சேகரித்த தகவல்களை கொண்டு குறிப்பிட்ட நபரின் நடவடிக்கை மற்றும் மனநிலை போன்றவற்றை அறிந்து கொண்டு அதில் இருந்து மீள என்ன செய்ய வேண்டும் என்பதை பரிந்துரைக்கும்.

கணினி

கணினி

அறிவியல் சேகரிக்கும் அதிகப்படியான தகவல்களை பரிசீலனை செய்ய அதிகப்படியான கணினிகள் தேவைப்படும். இதை செயல்படுத்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியிருக்கும் BOINC எனும் செயலி மூலம் கோடிக்கணக்கான ஆண்ட்ராய்டு கருவிகளில் இருக்கும் சக்தியினை அந்த கருவிகள் பயன்படுத்தாமல் இருக்கும் போது எடுத்து கொள்ளும். தற்சமயம் இம்முறை எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் மருந்தை தயாரிக்கும் பணிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

 
Read more about:
English summary
Check out here the 10 Ways Scientists Are Using Your Smartphone To Save The World. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X