Google-ல் தேடவே கூடாத 10 விஷயங்கள்! வீனா ஆபத்தில் சிக்காதீர்கள்!

|

இணையப் பயனர்களில் பெரும்பாலானோர், அவர்கள் விரும்பும் அடிப்படைத் தகவல், உணவு, சமையல், ஆன்லைன் வங்கி சேவை, ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் மருந்துகளை வாங்குவது வரை அனைத்தையும் கூகிள் சர்ச் என்ஜினை பயன்படுத்துவதையே பழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தேடவே கூடாத 10 பொதுவான விஷயங்கள்

தேடவே கூடாத 10 பொதுவான விஷயங்கள்

கூகுளில் தேடவே கூடாத 10 பொதுவான விஷயங்கள் மற்றும் இதனால் ஏற்படும் ஆபத்துகள் என்ன என்பதை பார்ப்பதற்கு முன்பு, முதலில் கூகுளில் நீங்கள் பார்க்கும் அனைத்து வலைத்தளங்களையும் கூகிள் உருவாக்கவில்லை, உங்களுக்கு தேவையான தகவல்களை வழங்கும் வலைத்தளங்களைத் தேடிப்பிடித்து வழங்கும் ஒரு ஆன்லைன் தளமாக மட்டுமே கூகுள் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

1. ஆன்லைன் வங்கி ஆபத்து

1. ஆன்லைன் வங்கி ஆபத்து

உங்கள் வங்கியின் ஆன்லைன் வலைத்தளங்களைத் Google இல் தேடுவதைத் தவிர்க்கவும். பிஷ்ஷிங் (phishing) செய்வதற்கான வாய்ப்புகள் கடுமையாக அதிகரித்து வருவதால், வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் போல் தோற்றமளிக்கும் போலி வலைத்தளத்தில் சிக்கி, உங்கள் தனிப்பட்ட விபரங்களை பதிவிட்டு ஆபத்தில் சிக்காதீர்கள்.

காத்திருந்தது போதும் இதோ அறிமுகமானது Samsung Galaxy A51: குவியும் வரவேற்புகள்- அப்படி என்ன சிறப்பு?காத்திருந்தது போதும் இதோ அறிமுகமானது Samsung Galaxy A51: குவியும் வரவேற்புகள்- அப்படி என்ன சிறப்பு?

2. கஸ்டமர் கேர் எண்கள் மூலம் ஆபத்து

2. கஸ்டமர் கேர் எண்கள் மூலம் ஆபத்து

உங்களுக்கு தேவையான நிறுவனங்களின் வாடிக்கையாளர் பராமரிப்பு எண்களை ஒருபோதும் கூகிளில் தேட வேண்டாம். மோசடி செய்பவர்கள், அசல் வாடிக்கையாளர் பராமரிப்பு எண்கள் போன்ற போலி எண்களை வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களின் வலைக்குள் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

3. ஆப்ஸ் டவுன்லோட் மூலம் ஆபத்து

3. ஆப்ஸ் டவுன்லோட் மூலம் ஆபத்து

உங்களுக்குத் தேவையான ஆப்ஸ்களை டவுன்லோட் செய்ய, கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர் போன்ற அதிகாரப்பூர்வ தளங்களை மட்டும் பயன்படுத்துங்கள். மால்வேர் உடன் கூடிய ஆப்களை டவுன்லோட் செய்வதற்கான வாய்ப்பு கூகுள் தளத்தில் அதிகமாக உள்ளது. இதனால் ஆபத்தான சிக்கலில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம்.

48 வருட இடைவெளியில் எடுக்கப்பட்ட இந்தியாவின் அட்டகாச புகைப்படம்.! பலே நாசா.!48 வருட இடைவெளியில் எடுக்கப்பட்ட இந்தியாவின் அட்டகாச புகைப்படம்.! பலே நாசா.!

4. ஆன்லைன் மருந்துகள் மூலம் ஆபத்து

4. ஆன்லைன் மருந்துகள் மூலம் ஆபத்து

கூகிளில் மருந்துகள் அல்லது மருத்துவ அறிகுறிகளை ஒருபோதும் தேட வேண்டாம். அது உங்களின் உயிருக்கே ஆபத்தாய் மாறிவிட கூடும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது, மருத்துவரை அணுகுவதே சிறந்தது. மருத்துவ அறிகுறிகள் அனைத்தும் கூகுளில் துல்லியமாக இருக்காது என்பதை நினைவில் வையுங்கள். ஆன்லைன் மருந்துகளை, மருத்துவரின் அறிவுரை இல்லாமல் ஆர்டர் செய்வதையும் தவிர்த்துவிடுங்கள்.

5. தனிப்பட்ட நிதி மற்றும் பங்குச் சந்தை ஆபத்து

5. தனிப்பட்ட நிதி மற்றும் பங்குச் சந்தை ஆபத்து

ஆரோக்கியத்தைப் போலவே, தனிப்பட்ட நிதி ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது, அனைவரையும் பணக்காரர்களாக மாற்றும் ஒரு முதலீட்டுத் திட்டம் ஒருபோதும் இருக்க முடியாது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். எனவே, முதலீடு செய்யும் போது கூகிள் தேடல் முடிவுகளிலிருந்து ஆலோசனையைப் பெறுவதைத் தவிர்த்துவிடுங்கள். இது உங்களுக்கு லாபத்தை தரவில்லை என்றாலும் நஷ்டத்தை தராது.

BSNL: தினமும் 3ஜிபி டேட்டா 436 நாட்களுக்கு வேண்டுமா? அப்போ இதுதான் சரியான திட்டம்!BSNL: தினமும் 3ஜிபி டேட்டா 436 நாட்களுக்கு வேண்டுமா? அப்போ இதுதான் சரியான திட்டம்!

6. அரசாங்க வலைத்தளங்கள் மூலம் ஆபத்து

6. அரசாங்க வலைத்தளங்கள் மூலம் ஆபத்து

வங்கி வலைத்தளங்களைப் போலவே, நகராட்சி வரி, மருத்துவமனைகள் போன்ற அரசாங்க வலைத்தளங்கள் தான் மோசடி செய்பவர்களின் பிரதான இலக்குகளாக இருக்கிறது. எனவே சரியான URL உங்களுக்குத் தெரிந்தால் மட்டும் நேரடியாக அந்த தளங்களுக்குச் செல்லுங்கள். போலியான மோசக்காரர்களின் வலைத்தளங்களில் சிக்கிக்கொள்ளாதீர்கள்.

7. சமூக வலைத்தள லாகின் ஆபத்து

7. சமூக வலைத்தள லாகின் ஆபத்து

சமூக வலைத்தள ஆப்-கள் மூலம் எப்போதும் லாகின் செய்ய அறிவுறுத்தப்படுகிறது, சமூக வலைத்தள அக்கௌன்ட்களை கூகிளில் இருந்து லாகின் செய்யாதீர்கள். கூகுள் மூலம் லாகின் செய்வது ஃபிஷிங்கிற்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

SBI அலெர்ட்: உடனே KYC விபரங்களை புதுப்பியுங்கள் இல்லைனா வங்கி கணக்கு முடக்கப்படும்!SBI அலெர்ட்: உடனே KYC விபரங்களை புதுப்பியுங்கள் இல்லைனா வங்கி கணக்கு முடக்கப்படும்!

8. ஈ-காமர்ஸ் வலைத்தள ஆபத்து

8. ஈ-காமர்ஸ் வலைத்தள ஆபத்து

ஈ-காமர்ஸ் வலைத்தளங்களில் கிடைக்கும் சலுகைகளுக்கான இலவச கூப்பன் தளங்கள் மற்றும் போலி ஈ-காமர்ஸ் வலைத்தளங்கள் கூகுள்லில் அதிகரித்து வருகின்றது. இந்த தளங்களை கிளிக் செய்தால், உங்களின் ஆன்லைன் வங்கி விபரங்கள் திருடப்படும் என்பதை அறிந்து ஆபத்தில் சிக்கி கொள்ளாமல் தப்பித்துக்கொள்ளுங்கள்.

9. ஆன்டி-வைரஸ் ஆபத்து

9. ஆன்டி-வைரஸ் ஆபத்து

ஆபத்திலிருந்து தடுப்பதற்கு தானே ஆன்டி-வைரஸ் பயன்படுத்துகிறோம். அதில் என்னப்பா சிக்கல் என்று கேட்குறீங்களா? காரணம் இருக்கு, இலவசமாகக் கிடைக்கும் ஆன்டி-வைரஸ் இல் ஆபத்து நிச்சயம் இருக்கு. இலவசமாகக் கிடைக்கும் எதோ ஒன்றின் பின்னால், நிச்சயம் நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். உங்களின் விபரங்களை கொடுத்தபின் தான் இந்த இலவசம் உங்களுக்கு கிடைக்கிறது. அப்போ சொன்னது சரி தானே.

10. கூப்பன் கோடு ஆபத்து

10. கூப்பன் கோடு ஆபத்து

ஆன்லைன் ஷாப்பிங்கில் தள்ளுபடிக்கு, உங்களுக்கு ஒரு கூப்பன் கோடு கிடைத்தால், அது நல்லது. ஆனால் கூகுளில் கூப்பன் கோடுகளை தேடி, சிக்கலில் சிக்கி உங்கள் வங்கி விபரங்களை வீணாய் மோசக்காரர்களுக்குக் கொடுக்காதீர்கள். ஆசைக் காட்டி தான் மோசக்காரர்கள் மக்களை தங்கள் வலையில் சிக்க வைக்கின்றனர்.

இந்த ஆப்ஸ்களும் உங்களை ஏமாற்றுகிறது உடனே டெலிட் செய்யுங்கள்.!

இந்த ஆப்ஸ்களும் உங்களை ஏமாற்றுகிறது உடனே டெலிட் செய்யுங்கள்.!

கூகிள் இல் தேடவே கூடாத விஷயங்கள் என்ன என்பதைப் பார்த்தோம், இதேபோல் உங்களை ஆபத்து பல ரூபங்களில் சுற்றிக்கொண்டு தான் இருக்கிறது. உதாரணத்திற்குத் தகவல் திருடர்கள் மற்றும் பணத்தைத் திருட நினைப்பவர்கள் எல்லாம் டிஜிட்டல் காலத்தில் களமிறங்கிவிட்டனர். ஆம், இவர்களின் குறி உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் தான். இந்த அப்ஸ்-கள் மூலம் நீங்கள் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

செயலிகள் பதிவிறக்கம் அத்தியாவசியம்

செயலிகள் பதிவிறக்கம் அத்தியாவசியம்

ஸ்மார்ட் போன்களில் செயலிகள் பதவிறக்கம் என்பது அத்தியாவசியமான ஒன்று. அதில் ஒருசில செயலிகள் பாதுகாப்பற்ற முறையில் இருக்கிறது என்பதை அறிந்திருப்போம். ஆனால் நாம் அத்தியாவசியமாக பயன்படுத்தும் செயலிகளே பாதுகாப்பற்ற முறையில் இருக்கிறது என்பதை செக் பாய்ண்ட் ரிசர்ச் என்ற நிறுவனம் கண்டறிந்துள்ளது.

2014 ஆம் ஆண்டு முதல் ஆபத்தை கண்டறிந்த செயலிகள்

2014 ஆம் ஆண்டு முதல் ஆபத்தை கண்டறிந்த செயலிகள்

கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து சில பாதிப்புகள் தொடர்ந்து இருந்து வந்துள்ளதாகவும் அந்த செயலிகளின் பட்டியலையும் செக் பாய்ண்ட் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யாகூ பிரவுசர் போன்ற பிரபலமான ஆன்ட்ராய்டு செயலிகளிலும் அதிக பாதிப்புகள் இருப்பதை கண்டறிந்துள்ளனர். இந்த பட்டியலில் நூற்றுக்கணக்கான செயலிகள் இருந்தாலும் கூட முக்கியமான சில செயலிகளின் பட்டியலை அந்த நிறுவனம் குறிப்பிட்டு வெளியிட்டுள்ளது.

பேஸ்புக், மெசஞ்சர், சேர் இட்

பேஸ்புக், மெசஞ்சர், சேர் இட்

இந்த மூன்று செயலிகளும் இல்லாத ஸ்மார்ட் போன் மிகவும் சொர்ப்பம். ஆனால் இந்த அனைத்து செயலிகளிலும் அதிகப்படியான பாதிப்பு இருப்பதை செக் பாய்ண்ட் ரிசர்ச் நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்த செயலிகள் மூலம் தனிநபர் தகவலுக்கே ஆபத்து ஏற்படலாம்.

யாஹூ, மோட்டோ வாய்ஸ், லைவ் எக்ஸ் லைவ்

யாஹூ, மோட்டோ வாய்ஸ், லைவ் எக்ஸ் லைவ்

யாஹூ செயலியானது 10,000,000 பதிவிறக்கங்களை கொண்டுள்ளது. மோட்டோ வாய்ஸ் செயலியானது 10,000,000 பதிவிறக்கங்களை கொண்டுள்ளது. லைவ் எக்ஸ் லைவ் செயலியானது 50,000,000 பதிவிறக்கங்கள் கொண்டுள்ளது. இந்த செயலிகளிலும் அதிகப்படியான ஆபத்துகள் இருப்பதை நிறுவனம் கண்டறிந்துள்ளது.

யாஹூ தேடுதளம், மேப், கார் நேவிகேஷன்

யாஹூ தேடுதளம், மேப், கார் நேவிகேஷன்

இந்த அனைத்து செயலிகளிலும் vulnerable library என்று அழைக்கக்கூடிய பாதிப்பை ஏற்படுத்தும் மால்வேர் இருப்பதை செக் பாய்ண்ட் ரிசர்ச் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

மொபைல் லெகன்ட், ஸ்முலே, ஜூக்ஸ் மியூஸிக்

மொபைல் லெகன்ட், ஸ்முலே, ஜூக்ஸ் மியூஸிக்

இந்த செயலிகளும் அதிகப்படியான மொபைகளில் இருப்பதை கண்டறிந்திருப்போம். ஆனால் இதுவும் ஆபத்தான செயலிகளே என கண்டறியப்பட்டுள்ளது.

வீ சேட், அலி எக்ஸ்பிரஸ், வீடியோ எம்பி2 கன்வெர்டர்

வீ சேட், அலி எக்ஸ்பிரஸ், வீடியோ எம்பி2 கன்வெர்டர்

இந்த ஆப்கள் அனைத்தும் பாதிப்பை ஏற்படுத்தும் செயலிகள் தான் எனவே இதை அனைத்தையும் அன் இன்ஸ்டால் செய்வது நல்லது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

லஜாடா, விவா வீடியோ, ரெட்ரிகா, டியூன் இன்

லஜாடா, விவா வீடியோ, ரெட்ரிகா, டியூன் இன்

இந்த செயலிகளில் பெரும்பாலானவை 2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த செயலிகள் மூலம் பாதிப்பு ஏற்படுவதை செக் பாயண்ட் ரிசர்ச் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

சுமார் 1000-க்கும் அதிகமான ஆப்

சுமார் 1000-க்கும் அதிகமான ஆப்

கூகுள் நிறுவனம் கடந்த சில மாதங்களாகவே தனது பிளே ஸ்டோரில்இருந்து சுமார் 1000-க்கும் அதிகமான ஆப்களை நீக்கிவிட்டது. அவற்றில் சில ஆட்வேர், சில மால்வேர் மற்றும் பயனர்களுக்கே தெரியாமல் பதிவு செய்யப்பட்ட சில உரையாடல்கள் மற்றும் சில இடம் சார்ந்த தகவல்கள் ஆகியவைகள் அடங்கும்.

இப்போது வரும் புதிய புதிய ஆப் வசதிகள் நமக்கு பாதுகாப்புடன் வருகிறதா என்றால் சந்தேகம் தான். குறிப்பாக நமக்கு தெரியாமல் சில செயிலகள்(ஆப்) நமது தகவல்களை திருடும். எனவே தான் கூகுள் நிறுவனம் சந்தேகமான ஆப் வசதிகளை கண்டுபிடித்து நீக்கி வருகிறது.

ரகசியமாக திருடும் ஆப்

ரகசியமாக திருடும் ஆப்

இதிலும் மிகவும் ஆபத்தான வகைகளின் ஒன்றுதான் பயனர்களின் ஸ்மாரட்போனில் உள்ள புகைப்படங்களை ரகசியமாக திருடும் ஆப்கள். இந்த வகையின் கீழ் 29செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது கூகுள் நிறுவனம்.

அன்இன்ஸ்டால்

அன்இன்ஸ்டால்

கூகுள் நிறுவனம் அதன் பிளே ஸ்டோரிலிருந்து ஆபத்தான செயலிகளை நீக்கிவிட்டாலும் கூட, அதை டவுன்லோட் செய்த பயனர்கள் இன்னமும் அவைகளை தங்களின் ஸ்மார்ட்போனில் கொண்டுள்ளன. எனவே இந்த 29 ஆப்களில்
ஏதேனும் ஒன்றை நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தி வந்தால் உடனே அன்இன்ஸ்டால் செய்யுமாறு பரிந்துரைக்கப்படுகீறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டியல்-1

பட்டியல்-1

ப்ரோ கேமரா பியூட்டி (Pro Camera Beauty)
போட்டோ எடிட்டர் (Photo Editor)
போட்டோ ஆர்ட் எபெக்ட் (Photo Art Effect)
பிரிஸ்மா போட்டோ எபெக்ட் (Prizma Photo Effect)
செல்பீ கேமரா ப்ரோ (Selfie Camera Pro)
ஹாரிஸான் பியூட்டி கேமரா (Horizon Beauty Camera)
கார்ட்டூன் ஆர்ட் போட்டோஸ் (Cartoon Art Photos)
கார்ட்டூன் எபெக்ட் (Cartoon Effect)
கார்ட்டூன் போட்டோ பில்டர் (Cartoon Photo Filter)

பட்டியல்-2

பட்டியல்-2

ஆஸம் கார்ட்டூன் ஆர்ட் (Awesome Cartoon Art)
கார்ட்டூன் ஆர்ட் போட்டோ (Cartoon Art Photo)
கார்ட்டூன் ஆர்ட் போட்டோ பில்டர் (Cartoon Art Photo Filter)
ஆர்ட் பில்டர் போட்டோ (Art Filter Photo)
ஆர்ட் பில்டர் (Art Filter)
ஆர்ட் ஃபிளிப் போட்டோ எடிட்டிங் (ArtFlipPhotoEditing)

பட்டியல்-3

பட்டியல்-3

ஆர்ட் எபெக்ட்ஸ் ஃபார் போட்டோ (Art Effects for Photo)
ஆர்ட் போட்டோ எடிட்டர் (Art Filter Photo Editor)
ஆர்ட் பில்டர் போட்டோ எபெக்ட்ஸ் (Art Filter Photo Effcts)

பட்டியல்-4

பட்டியல்-4

பிக்ஸ்சர் (Pixture)
சூப்பர் கேமரா (Super Camera)
வால்பேப்பர்ஸ் எச்டி (Wallpapers HD)
ஆர்ட் எடிட்டர் (Art Editor)
மேஜிக் ஆர்ட் பில்டர் போட்டோ எடிட்டர் (Magic Art Filter Photo Editor)
ஃபில் ஆர்ட் போட்டோ எடிட்டர் (Fill Art Photo Editor)

பட்டியல்-5

பட்டியல்-5

ஆர்டிஸ்டிக் எபெக்ட் பில்டர் (Artistic effect Filter)
ஆர்ட் எபெக்ட் (Art Effect)
பியூட்டி கேமரா (Beauty Camera)
எமோஜி கேமரா (Emoji Camera)

வாட்ஸ்ஆப் விடுங்க மக்களே: வருகிறது இந்திய அரசின் ஜிம்ஸ் ஆப்.!

வாட்ஸ்ஆப் விடுங்க மக்களே: வருகிறது இந்திய அரசின் ஜிம்ஸ் ஆப்.!

சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு மக்களின் வாட்ஸ்ஆப் கணக்குகளை பெகாஸஸ் என்னும் ஸ்பைவேர் உளவு பார்த்து மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக உலகம் முழுவதும் சுமார் 1400வாட்ஸ்ஆப் கணக்குகள் உளவு பார்க்கப்பட்டன. குறிப்பாக இதில் இந்தியாவை சேர்ந்த 121முக்கிய நபர்களின் கணக்குகள் அடங்கும்.

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப்

இப்போது அலுவலக வேலைகள் தொடங்கி அனைத்துமே வாட்ஸ்ஆப்-ல் தான் என்பதால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்த நிலையில் இந்திய அரசாங்கம் டெலிகிராம் போன்று தகவல்களை பரிமாகொள்ள தனக்கென பிரத்யேச் செயலி ஒன்றை உருவாக்கி வருகிறது.

குறிப்பாக இந்த செயலிக்கு ஜிம்ஸ் -GIMS(government instant messaging system) என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த செயலி தற்போது ஒடிசா போன்ற மாநிலங்களில் சோதனை கட்டத்தில் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

கேரளா

கேரளா

அதன்பின்பு கேரளாவில் இருக்கும் தேசியத் தகவலியல் மையத்தில் இந்த செயலியின் உருவாக்கமும் ஆராய்ச்சியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது வரை அலுவலங்களில் தொலைபேசி தொடர்புக்காக மட்டுமே பிரத்யேக இன்டர்காம் வசதி இருந்துவந்தது. ஆனால் இன்றைய உலகத்தில் தகவல்களைப் பரிமாறக்கொள்ள பெரும்பாலும் இதர நாட்டு செயலிகளையே நாடவேண்டியதாக இருந்தது.

ஜிம்ஸ் ஆப்

ஜிம்ஸ் ஆப்

எனவேதான இந்திய அரசானது, மத்திய அரசு அலுவலகங்களிலும் மாநில அரசு அலுவலகங்களிலும் தங்களுக்குள் தகவல்கள் பரிமாற்றத்திற்கென இந்த ஜிம்ஸ் ஆப்பை உருவாக்கி வருகிறது. இதன்மூலம் வெளிநாட்டு செயலிகளால் ஏற்படும் தகவல் திருட்டு மற்றும் ஊடுருவலைத் தடுக்கமுடியும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக இதிலும் வாட்ஸ்ஆப், டெலிகிராம் போன்று எண்ட் டு எண்ட் என்கிர்ப்ஷன் முறையில்தான் தகவல்கள் பரிமாற்றப்படும்.

ஒடிசா

ஒடிசா

இந்த ஜிம்ஸ் ஆப் இந்தியாவில் உருவாக்கப்படுவதால் மிகுந்த பாதுகாப்பான செயலியாகக் கருதப்படுகிறது, மேலும் இதன் சோதனைப் பயன்பாடானது தேசியத் தகவலியல் மையத்தில் பணிபுரியும் பணியாளர்களிடையே உட்தகவல் பரிமாற்றத்திற்காக நடத்தப்பட்டது. பின்னர் ஒடிசாவின் நிதித்துறையிலும் தற்போது கப்பல் படையிலும் பயன்படுத்தப்படுகிறது.

Best Mobiles in India

English summary
10 Things You Shouldn't Look For In Google! Do Not Risk Yourself : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X