ஸ்டீபன் ஹாக்கிங் கற்றுக்கொடுக்கும் 10 விசயங்கள்.!

  புத்திசாலித்தனமான இயற்பியலாளாரான ஸ்டீபன் ஹாக்கிங் சமீபத்தில் தனது 76வது வயதில் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜில் காலமானார். இவர் நோபல் பரிசு பெறவில்லை என்றாலும், இவரின் புத்தகமான 'நேரத்தின் முழுமையான வரலாறு', ஒவ்வொருக்கும் அறிவியலை கொண்டு சேர்த்தது. இது அவரை உலகம் முழுவதும் பிரபலமாக்கியது மற்றும் நகைச்சுவை உணர்வு அவரை அன்பான பாப் கலாச்சார மனிதனாக்கியது.

  ஸ்டீபன் ஹாக்கிங் கற்றுக்கொடுக்கும் 10 விசயங்கள்.!

  தனது 21 வயதிலேயே தசையூட்டமற்ற பக்க மரப்பு நோய் எனவும் அழைக்கப்படும் இயக்கு நரம்பணு நோயால் தாக்குண்டு, வெறும் 5 ஆண்டுகள் தான் வாழ்வார் என மருத்துவர்கள் கூறிய நிலையில், அதை தவிடுபொடியாக்கி பல சாதனைகள் புரிந்தார். அவரின் தனித்துவமான வாழ்க்கை உலகம் முழுக்க அனைவரையும் கவர்ந்திழுத்து, மனிதனின் வெற்றிக்கு சிறந்த எடுத்துகாட்டாக உள்ளது. நம்மைப் பற்றியும் பிரபஞ்சம் பற்றியும் டாக்டர். ஷாக்கிங் நமக்கு கற்றுக்கொடுத்த சில விசயங்கள் இதோ..

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  அறிவு என்பது உங்களின் ஐ.க்யூ இல்லை

  அறிவு என்பது பிறக்கும் போதே தனித்துவமாக இருப்பது அல்ல. மாறாக எவ்வளவு கடினமாக உழைக்க விரும்புகிறோம் மற்றும் எப்படி மாற்றங்கள் நடக்கின்றன என்பதை அறிவதற்கான கவனம் மற்றும் தந்திரம். "மாற்றங்களை ஏற்றுக்கொள்வதற்கான திறனே அறிவு" என்கிறார் ஹாக்கிங்.

  கற்றது கையளவு, கல்லாதது உலகளவு

  எல்லாம் தெரியும் என நினைக்கும் போதெல்லாம், எவ்வளவு குறைவாக உங்களுக்கு தெரியும் என்பதற்கான சம்பவம் அடிக்கடி வரும். அதை தான்" அறிவின் மிகப்பெரிய எதிரி தவிர்த்தல், அது அறிவு என்னும் மாயை" என்கிறார் ஹாக்கிங்.

  கருந்துளைகளில் வெளியேறும் வழியும் உள்ளது

  இவருடைய சிந்தனைகள் அடிக்கடி பிரபஞ்சத்திற்கு மட்டுமல்லாது வாழ்க்கைக்கும் பொருந்தும். ஒருமுறை அவர் ஆற்றிய உரையில் "கருந்துளை கருப்பாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நாம் நினைப்பது போன்று அது நித்திய சிறையும் இல்லை. அதிலிருந்து வெளியேறுவதும் வழி இருக்கலாம், அது வேறொரு பிரபஞ்சமாகவும் இருக்கலாம். எனவே நீங்கள் கருந்துளையில் இருப்பது போல உணர்ந்தால்,விட்டுக்கொடுக்காமல் போராடுங்கள். வெளியேறும் வழி நிச்சயம் உண்டு" என்றார்

  தவறுகள் முக்கியம்

  எப்படியாவது சரியாக இருக்க வேண்டும் என்பதை விரும்பாமல் ,தவறுகளுக்கு முக்கியத்துவம் அளித்தார் ஹாக்கிங். "அடுத்த முறை நீங்கள் தவறு செய்யும் போது யாரேனும் குறை கூறினால், அது நன்மைக்காகவும் இருக்கலாம் என கூறுங்கள். ஏனெனில் குறைபாடில்லாமல் நீங்களே நானோ யாருமே இருக்க முடியாது

  தனித்துவமாக காட்டிக்கொள்வது முட்டாள்த்தனம்

  ப்யர்ஸ் மோர்கன் ஒரு பேட்டியில், பொதுமக்கள் அனைவரும் ஹாக்கிங் தான் உலகிலேயே அதிபுத்திசாலி என நம்புகின்றனர். நீங்களும் அதை நம்புகிறீர்களா இல்லையென்றால் வேறு யார்? என்றார். "நான் எப்போதும் அப்படி கூறியதில்லை. அப்படி தற்பெரும் கொள்பவர்கள் தோல்வியாளர்கள்" என்றார் ஹாக்கிங்.

  ஆர்வமாக இரு

  புத்திசாலித்தனமான ஆர்வம் மற்றும் ஒருவரை நம்புதல் இல்லை என்றால், அவர் ஒன்றுமே இல்லை. சிட்னி ஒபேரா ஹவுஸில் பேசும், "மேலே உள்ள நட்சத்திரத்தை பாருங்கள். கீழே உள்ள பாதத்தை அல்ல. என்ன பார்க்கிறீர்கள் என உணருங்கள் மற்றும் எதனால் இந்த பிரபஞ்சம் உள்ளது என ஆச்சர்யப்படுங்கள். வாழ்க்கை கடினமாக இருந்தாலும், எதையாவது செய்து வெற்றிபெற முடியும்" என்றார்.

  உங்கள் வாழ்க்கையின் போக்கை நம்பாதே

  "எனக்கு 21 வயதாகும் போது, எனது எதிர்பார்ப்புகள் பூஜ்ஜியமாக குறைந்தது. அப்போது முதல் அனைத்தும் போனஸ் தான்" என நியூயார்க் டைம்ஸ் பேட்டியில் கூறுகிறார்.

  உங்களை குறைவாக எடைபோடாதீர்

  "எனது சூழ்நிலையின் வரம்புகளை தாண்டி வர எப்போதும் முயற்சிப்பேன் மற்றும் சாத்தியமானவரை முழு வாழ்வையும் வாழவேன். அண்டார்டிக் முதல் புவிஈர்ப்புவிசை இல்லாத இடம் வரை, உலகம் முழுதும் பயணித்துள்ளேன்" என்கிறார் ஹாக்கிங்.

  நன்றியுடன் இருங்கள்

  ஹாக்கிங் எதையும் அப்படியே எடுத்துக்கொள்ள மாட்டார் மற்றும் இது தான் விதி என விட்டுவிடமாட்டார். அனைத்துக்கும் தானும் மனிதர்களும் தான் பொறுப்பு , இந்த வாழ்க்கைக்கு நன்றியுள்ளவராக இருத்தல் அவசியம் என்பார்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  10 Things The Inspiring Stephen Hawking Taught Mankind: Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more