TRENDING ON ONEINDIA
-
ஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது?
-
கை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...
-
Nayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்
-
கொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான்? அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா?
-
வாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.!
-
Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்
-
வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
-
250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க
மாற்றி மாற்றி கை குலுக்கி கொண்டாலும் கூட, கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்துக் கொண்டாலும் கூட, அச்சுறுத்ல் அல்லது அத்துமீறல் என்று வந்துவிட்டால் வெள்ளை கொடி காட்ட எந்தவொரு உலக நாடும் தயாராக இல்லை என்பது தான் நிதர்சனம்.
அதிலும், சூப்பர் பவர் நிலையை அடைந்து விட்ட நாடுகள் பற்றி சொல்லவே வேண்டாம். பிற நாடுகளுக்குள் நுழைந்து, நல்லுறவு என்ற பெயரில் தனது கட்டுப்பாட்டை கொண்டு வரவே பெரும்பாலான சூப்பர்பவர் நாடுகள் முயன்று கொண்டிருக்கிறது. குறிப்பாக எல்லா விதமான உலக பிரச்சனைகளுக்குள்ளும் தலையிடும் அமெரிக்கா - அடுத்த யுத்தம் ஒன்று வந்தால் அதில் தனக்கு சாதகமான எந்தெந்த விதமான 'சூட்சமங்களை' களத்தில் இறக்கும் என்பதை பற்றிய தொகுப்பே இது..!
01. ஹெலிகாப்டர் :
ஏகப்பட்ட ரகசிய தாக்குதல்களை நிகழ்த்துவதில் அமெரிக்கா முன்னிலை வகிக்கிறது அம்மாதிரியான தாக்குதல்களில் இருந்து நிறைய பாடங்களையும் அமெரிக்கா கற்றுக்கொண்டுள்ளது.
அதிகம் சத்தம் எழுப்பாத ஹெலிகாப்டர் :
அதில் இருந்து மிகவும் வேகமான மற்றும் அதிகம் சத்தம் எழுப்பாத அதே சமயம் மிகவும் பாதுகாப்பான ஹெலிகாப்டர்களை அடுத்த யுத்த களத்தில் இறக்க அமெரிக்கா முனைந்து கொண்டிருக்கிறது.
02. கொலை செய்யா ஆயுதங்கள் :
குறிகளை கொலை செய்யாது உயிரோடு பிடிப்பது என்பது மிகவும் அசாத்திய மானது அதை மிகவும் எளிமையாக சாத்திய ப் படுத்த அமெரிக்க வகுத்துள்ள நவீனம் தான் - நான்லீதல் வெப்பன்ஸ் (Nonlethal weapons)
ரப்பர் தோட்டாக்கள் :
அதாவது, ரப்பர் தோட்டாக்கள் மற்றும் லேசர்கள் மிளகு ஸ்ப்ரே , உயர் அழுத்த ஸ்பீக்கார்கள் மற்றும் தன்னிலை இழக்க வைக்கும் ஒளி வீச்சு போன்ற ஆயுதங்கள்.
03. எடை குறைவு :
யுத்த களத்தில் வீரர்கள் வேகமாக செயல்படும் வண்ணம் உதவும், மிகவும் எடை குறைவான ஆயுதங்கள் மற்றும் யுத்த கள பொருட்களை உருவாக்குவதிலும் அமெரிக்கா கவனம் செலுத்தி வருகிறது.
04. பக்கீஸ் :
அல்ட்ரா ஒளி வேகம், அதிகம் நிலைத்திருக்கக்கூடியதாகவும் டூன் பக்கீஸ் வாகனங்கள்.
உயிர்இழப்பு :
ஹூம்வீ வாகனங்களை (Humvees) யுத்த களத்தில் பயன்படுத்தி பெரிய அளவிலான உயிர்இழப்புகளை சந்தித்ததால் அமெரிக்கா டூன் பக்கீஸ் வாகனங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
05. நீர் மூழ்கி :
உலகிலேயே மிகவும் சிக்கலான நீர்மூழ்கி கப்பல்களை கொண்ட நாடு அமெரிக்கா தான். அதனால் அதிக செலவு எடுக்கும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே இருக்கும்.
சிறிய வடிவம் :
அதிக எண்ணிக்கையில் நீர்மூழ்கிகளை உருவக்கவும் அதை மிகவும் சிறிய வடிவத்தில் ஆளில்லா நீர்மூழ்கியாக உருவக்கவும் அமெரிக்கா முனைந்து கொண்டிருக்கிறது.
06. கப்பல்கள் :
திறந்தவெளி கடலில் யுத்தம் என்று வந்துவிட்டால் எதிரிகளை திணறடிக்கும் வகையிலான தோட்டா துளைக்காத ஹை-ஸ்பீட் போர் கப்பல்களை உருவாக்குவதிலும் அமெரிக்க அதிக கவனம் செலுத்தி வருகிறது.
07. தொடர்பு :
யுத்த களத்தில் எந்த நேரத்திலும், எந்தவொரு இடத்திலும் இருந்து தொடர்பு கொள்ளும் வகையில் இன்னும் வலுவான ஹை-ஸ்பீட் மொபைல் ப்ராட்பேண்ட் வசதியை உருவாக்குவதிலும் அமெரிக்கா அதிக கவனம் செலுத்தி வருகிறது.
08. ரோபோட்கள் :
தானாக சிந்தித்து செயல்படும் செயற்கை நுண்ணறிவு ரோபோட்களை யுத்த களத்தில் விரைவில் அமெரிக்கா பயன்படுத்த இருக்கிறது.
09. எரிபொருள் :
மிகவும் குறைவான செலவில் எரிபொருள்களை தயாரிப்பதிலும் அமெரிக்கா அதிக கவனம் செலுத்துகிறது.
10. கடுமையான மேற்பார்வை :
எவ்வளவுக்கு எவ்வளவு உயரமான ஆளில்லா உளவு விமானங்கள் பறக்கிறதோ அதிக அளவிலான கண்காணிப்பை நிகழ்த்த முடியும்.
ஆர்வம் :
ஆகையால் மிக உயரமாக பறக்கும் யூஏவி (UAV - Unmanned Aerial Vehicles) விமானங்களை வடிவமைப்பதிலும் அமெரிக்க ஆர்வம் செலுத்தி வருகிறது.
மேலும் படிக்க :
ரஷ்யா : யாரையும் கொல்லும், எதையும் அழிக்கும்..!
சர்வ நாசம் : 'காத்திருக்கும்' 10 அதிநவீன ஆயுதங்கள்..!
'இதையெல்லாம்' இப்போ சொன்னால் யாரும் நம்ப மாட்டாங்க..!
தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!