2016-ல் இதெல்லாம் நடந்தே தீரும்..!
ஆட்டோமட்டிக் கார்கள், ஸ்மார்ட் வீடுகள், வியரபில்ஸ், விர்ச்சுவல் ரியாலிட்டி, ட்ரோன்கள், விண்டோஸ் 10, பெரிய திரை ஸ்மார்ட்போன்கள், மற்றும் பகிர்வு பொருளாதாரம் என அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஒரு அற்புதமான ஆண்டாய் இருந்தது 2015..!
முக்கியமாக இவையெல்லாம் சாத்தியமாகலாம் என்று 2014-ஆம் ஆண்டிலேயே காணிக்கப்பட்டவை களில் சில 2015-ஆம் ஆண்டில் சாத்தியமானது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல இந்த 2016-ஆம் ஆண்டில் என்னென்னவெல்லாம் சாத்தியமாகும் என்ற டாப் 10 டெக் கணிப்புகள் சார்ந்த தொகுப்பே இது..!

கணிப்பு 01 :
சாப்ட்வேர் பிளாட்பார்ம்கள் (Software Platforms) எல்லாம் முடிவுக்கு வரும் மெட்டா ஓஎஸ் (Meta Os) காலம் ஆரம்பிக்கும்.

கணிப்பு 02 :
குறிப்பிட்ட வடிக்கையாளர்கள் மீது அதிக கவனம் செலுத்து அவர்களுக்கான சிறப்பான தயாரிப்புகள் உருவாக்கப்படும்.

கணிப்பு 03 :
ஆப்பிள் நிறுவனம் பெரிய அளவிலான முதலீடுகளை செய்யும்..!

கணிப்பு 04 :
மாபெரும் வன்பொருள் (Hardware) நிறுவனங்கள் மெனபொருள் மற்றும் மென்பொருள் சேவைகளுக்காக இயங்கும் நிலை ஏற்படலாம்.

கணிப்பு 05 :
தானியங்கி கார்களை காட்டிலும் - புறப்படும் எச்சரிக்கைகள், தானியங்கி பிரேக்குகள், அதிநவீன கட்டுப்பாடுகள் போன்றவைகளை உள்ளடக்கிய அட்வான்ஸ் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (advanced driver assistance systems ) மீது அதிக கவனம் ஏற்படும்.

கணிப்பு 06 :
வியரபில் கேட்ஜெட்ஸ் (Wearable Gadgets), அதாவது அணியக்கூடிய கருவிகள் 2015-ஆம் ஆண்டில் பிரபலமடைந்த நிலையில் 2016 ஆம் ஆண்டில் வியாபார சந்தையை ஒரு கலக்கு கலக்கும் என்று கணிக்கப்படுகிறது.

கணிப்பு 07 :
ஃபோல்ட்டபில் டிஸ்ப்ளே (Foldable Display) அதாவது மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேக்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும்.

கணிப்பு 08 :
இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (Internet of things) எனப்படும் ஐஓடி (IoT)-யின் புதுமைகள் ஆனது வணிக மாதிரிகளாக உருவெடுக்கும்.

கணிப்பு 09 :
கனெக்டட் ஹோம் (Connected Homes) தொழில்நுட்பமானது வழக்கம் போல இந்த ஆண்டும் தோல்வி அடையும்.

கணிப்பு 10 :
விர்ச்சுவல் ரியாலிட்டி (Virtual Reality - VR) சந்தையை கலக்கும், ஆக்மன்டட் ரியாலிட்டி (Augmented reality) பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க :

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications