இந்த 10 பேருக்கும் உள்ள ஒரு ஒற்றுமையை கூறினால் நம்புவீர்களா?

மைக்கேல் டெல், ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக் கழகத்திலிருந்து, முதல் ஆண்டிலேயே அதாவது தனது 19 ஆவது வயதிலேயே டிராப் அவுட் ஆனார்.

|

உலகின் மிகவும் வெற்றிகரமான, பணக்காரர்களான மற்றும் செல்வாக்கு மிக்க மனிதர்கள் அனைவருமே கிளாஸ் டாப்பர்களோ அலல்து கோல்ட் மெடலிஸ்ட்களோ கிடையாது. காலேஜ் ட்ராப் அவுட்களும் உண்டு. அந்த பட்டியலில் நாம் தினம் காலையில் கண் விழிக்கும் முகநூலின் சி இ ஓ ஆன மார்க் ஜுக்கர்பெர்க், மறைந்த ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்றதுமே நம் நினைவிற்குள் வரும் பில் கேட்ஸ் ஆகியோர்களும் அடக்கம் என்பது உங்களுக்கு தெரியுமா?

இந்த 10 பேருக்கும் உள்ள ஒரு ஒற்றுமையை கூறினால் நம்புவீர்களா?

இவர்கள் தங்களது டிப்ளமோக்களை சேகரிப்பதற்கு முன்னரே கல்லூரியை விட்டு வெளியேறினர் என்பதும், பள்ளியிலும் கல்லூரிகளிலும் படிக்கும் காலத்தில் வளர்த்த சுய திறன்களை கொண்டு தொழில்முனைவோர்களின் பட்டியலில் இணைந்து இன்று வெற்றிகரமான மில்லியனர்கள் ஆக திகழ்கினறனர். இந்த மூவருடன் சேர்த்து மீதமுள்ள ஏழு பேர்களும் இந்த பட்டியலில் இடம் பெற்று உள்ளனர். அவர்கள் யார் என்பதை விரிவாக காண்போம்.

1. மைக்கேல் டெல்

1. மைக்கேல் டெல்

மைக்கேல் டெல், ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக் கழகத்திலிருந்து, முதல் ஆண்டிலேயே அதாவது தனது 19 ஆவது வயதிலேயே டிராப் அவுட் ஆனார். பின்னர் அவர் ஒரு அமெரிக்க தொழிலதிபர், ஆசிரியர், பல்லூடகவாதி மற்றும் முதலீட்டாளராக மாறினார். அவர் இப்போது பிரபல டெல் தொழில்நுட்பங்களின் நிறுவனர் மற்றும் சி இ ஓ ஆவார். டெல் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப உள்கட்டமைப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். இப்போது அவர் 28.6 பில்லியன் டாலர் நிகர மதிப்பிலான சொத்துக்களை கொண்டு உலகின் 39 வது செல்வந்தராக உள்ளார்.

2. ஸ்டீவ் ஜாப்ஸ்

2. ஸ்டீவ் ஜாப்ஸ்

தனது 19 ஆம் வயதில் ரீட் கல்லூரியில் இருந்து டிராப் அவுட் ஆனார். அது ஒரு விலையுயர்ந்த பள்ளி மற்றும் அவரது குடும்பம் ஏழ்மையானது என்பதாலும் நிதிச் சுமை காரணமாக டிராப் அவுட் ஆனார். குறுகிய காலத்திலேயே ரீட் கல்லூரியின் சில முக்கியமான சிறப்பான விடயங்களை கற்று அறிந்தார். பின்னாளில் என்னவாக உருமாறினார் என்கிற வரலாற்றை உலகமே அறியும்!

3. ஜூலியன் அசாங்கே

3. ஜூலியன் அசாங்கே

ஜூலியன் அசாஞ்ச் ஒரு ஆஸ்திரேலிய கணினி நிரலாக்குநர் ஆவார். அதற்கு முன் அவர் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் கணிதத்தைப் படித்தார். ஆஸ்திரேலிய இராணுவத்திற்கான கணினித் திட்டங்களில் பணியாற்றும் இவர் தனது 19 ஆம் வயதில் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார்.

4. பில் கேட்ஸ்

4. பில் கேட்ஸ்

பில் கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர், தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார், இதற்கு முன்னர் அவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இரண்டு வருடங்கள் மட்டுமே படித்தார். இன்று உலகின் மிகப்பெரிய செல்வந்தராக இருக்கிறார்.

5. இவான் வில்லியம்ஸ்

5. இவான் வில்லியம்ஸ்

இவான் வில்லியம் ஒரு அமெரிக்க கணினி புரோகிராமர் மற்றும் இணைய தொழிலதிபர் ஆவார், இவர் பல இன்டர்நெட் நிறுவனங்களை நிறுவியுள்ளார். லிங்கன் பல்கலைக் கழகத்தில் அவர் மூன்று செமஸ்டர்கள் மட்டுமே பயின்றார். இவர் ஹௌலெட்-பேக்கர்டு மற்றும் இன்டெல்லுக்கு ஒரு ஃப்ரீலான்ஸ் மென்பொருள் புரோகிராமராக பனி ஆற்றினார், பின் கூகிளுக்குள் குதித்தார். இவர் ட்விட்டரின் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்தார் என்பதும் பிளாகர் மற்றும் மீடியம் நிறுவனத்தையும் நிறுவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

6. மார்க் ஜுக்கர்பென்பர்க்

6. மார்க் ஜுக்கர்பென்பர்க்

மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு அறிமுகமே தேவை இல்லை. ஹார்வர்ட் பல்கலைக்ககத்தில் இருந்து டிராப் அவுட் ஆனார். பின் பேஸ்புக் எனும் சமூக ஊடக வலைத்தளத்தை உருவாக்கி, தற்போது அதன் தலைவர், இணை நிறுவனர், மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டில் வெளியான பணக்கார மனிதர்களின் (பில்லியனர்) பட்டியலில், ஒரு 23 வயது கொண்ட மனிதர் இடம் பெற்று இருந்தார் அவர் தான் - மார்க்!

7. லேரி எலிசன்

7. லேரி எலிசன்

லேரி எலிசன் இல்லினோஸ் பல்கலைக்கழகத்திலும், சிகாகோ பல்கலைக்கழகத்திலும் மருத்துவ படிப்புகளை முடிக்க போராடினார், முடியாமல் டிராப் அவுட் ஆனார். தற்போது இவர் ஒரு அமெரிக்க தொழிலதிபர், தொழில்முனைவர் மற்றும் ஒரு பரோபகாரி ஆவார். மேலும் இவர் ஆரக்கிள் கோஆப்ரேஷனின் தலைவர், இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியும் ஆவார்.

8.ஜான் மெக்ரே

8.ஜான் மெக்ரே

ஜான் மெக்ரே ஒரு அமெரிக்க தொழில் முனைவோர் மற்றும் கணினி நிரலாளர் ஆவார். இவர் தான் வாட்ஸ் ஆப்பின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மதம் மற்றும் தத்துவம் படிக்கும் போது டிராப் அவுட் ஆனார்.

9. டிராவிஸ் கலானிக்

9. டிராவிஸ் கலானிக்

டிராவிஸ் கலானிக் யூ சி எல் ஏ வில் கணினி பொறியியலைப் படித்தார். பட்டப்படிப்பை முடிப்பதற்கு முன்பே கல்லூரியில் இருந்து விலக முடிவு செய்தார், அதற்குப் பிறகு அவர் உபெர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சி இ ஓ ஆனார்.

10. ஜான் மெக்கீ

10. ஜான் மெக்கீ

ஜான் மெக்கீ ஒரு அமெரிக்க தொழிலதிபராக உள்ளார். டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் மதத்தையும் தத்துவத்தையும் படிக்கும் போது டிராப் அவுட் ஆனார். இவர் தான் 1980 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட வ்ஹோல் புட் மார்க்கெட்டின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.

Best Mobiles in India

English summary
10 Successful Millionaires And Billionaires Who Are College Dropouts : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X