வாட்ஸ்ஆப் அடிமைகளுக்கான அறிகுறிகள்

By Meganathan
|

உலகில் வேகமாக வளர்ந்து வரும் பயனாளிகளை கொண்டுள்ள வாட்ஸ்ஆப் செயலியை நீங்களும் நிச்சயம் பயன்படுத்தலாம். எதிலும் தேவையை மீறினால் அதன் மூலம் ஏற்படும் தீமை பல மடங்கு அதிகரிக்கும். அதே போல தான் தொழில்நுட்பங்களும்.

அந்த வகையில் வாட்ஸ்ஆப் செயலிக்கு நீங்கள் அடிமைகளாகி விட்டீர்கள் என்பதை உணர்த்தும் 10 அறிகுறிகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

குருந்தகவல்

குருந்தகவல்

மிகவும் முக்கியமான கூட்டத்தில் நீங்கள் இருந்தாலும் வாட்ஸ்ஆப் குருந்தகவல் வந்தவுடன் அதை பார்த்து விடுவார்கள்.

நேரம்

நேரம்

நடு இரவில் எழுந்தும் வாட்ஸ்ஆப் குருந்தகவலை பார்ப்பதும், காலை எழுந்தவுடன் முதலில் வாட்ஸ்ஆப் குருந்தகவலை பார்ப்பதும் நீங்கள் வாட்ஸ்ஆப் செயலிக்கு அடிமைகள் ஆகிவிட்டீர்கள் என்பதற்கான அறிகுறிகள் தான்.

ஆன்லைன்

ஆன்லைன்

ஆன்லைன் இருப்பவர்கள் யார் யார் என்பதை அடிக்கடி பார்ப்பதும் இந்த பட்டியலில் வருகின்றது. உங்களுக்கு யாரேனும் குருந்தகவல் அனுப்ப வேண்டும் என்றால் அவர்கள் அனுப்புவார்கள், இல்லை என்றால் நீங்கள் எத்தனை முறை பார்த்தாலும் பயன் இல்லை.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

நண்பர்களின் ப்ரோபைல் படங்களை அடிக்கடி வாட்ஸ்ஆப்பில் பார்த்து, அதற்கு ஏதேனும் குருந்தகவல் அனுப்புவது, குருந்தகவல் எதுவும் வராத சமயங்களில் இது நடைபெறும்.

ஸ்டேட்டஸ்

ஸ்டேட்டஸ்

தினமும் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் மற்றும் புகைப்படங்களை மாற்றி கொண்டே இருப்பது உங்களுக்கு ஒரு பழக்கமாகவே மாறி இருக்கும்.

 குருந்தகவல்

குருந்தகவல்

ஒருவருக்கு குருந்தகவல் அனுப்பி மீண்டும் பதில் வரும் வரை ஒவ்வொரு நொடியும் பதில் வந்துள்ளதா என்பதை பார்த்து கொண்டே இருப்பதும் இச்செயலிக்கு அடிமையாகி விட்டீர்கள் என்று கூறலாம்.

பார்வேர்டு மெசேஜ்

பார்வேர்டு மெசேஜ்

உங்களுக்கு வரும் அனைத்து குருந்தகவல் மற்றும் புகைப்படங்களை உங்கள் கான்டாக்ட்டில் இருக்கும் அனவருக்கும் அனுப்புவதும் அடிமை தனத்தை எடுத்து காட்டும் பழக்கம் தான்.

நோட்டம்

நோட்டம்

உங்கள் வாட்ஸ்ஆப் செயிலியில் இருக்கும் அனைவரது ஸ்டேட்டஸ் மற்றும் பதிவுகளை விடாது படித்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்த்து கொண்டே இருப்பதும் ஒரு விதமான அடிமை தனத்தை வெளிப்படுத்தும் போக்கு தான்.

பிங்

பிங்

உங்கள் நண்பர்கள் யாரேனும் உங்கள் குருந்தகவலுக்கு பதில் அனுப்பவில்லை என்றால் அவர்களை சண்டைக்கு இழுக்கும் பட்சத்தில் நிச்சயம் நீங்கள் வாட்ஸ்ஆப் அடிமை தான் என்பதை வெளிக்காட்டும்.

பதில்

பதில்

நீங்கள் சாப்பிடும் போதோ அல்லது, வேலை பார்க்கும் போதோ அல்லது உறங்கும் போது என எப்பொழுது குருந்தகவல் வந்தாலும் அதற்கு உடனே பதில் அளித்தால் நீங்கள் வாட்ஸ்ஆப் அடிமை எந்பதை உணர்த்தும்.

Best Mobiles in India

English summary
10 signs you are addicted to WhatsApp. Check out here are you addicted to whatsapp or not.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X