காதலர் தினம் ஸ்பெஷல் OFFER.. 108MP கேமரா.. 67W சார்ஜிங்.. இந்த ஒன்பிளஸ் போனை அள்ளுங்க.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் இன்று பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அமேசான் சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதன்படி ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.17,999 விலையில் வாங்கலாம். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.150 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.17,849 விலையில் வாங்க முடியும்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி அம்சங்கள் (OnePlus Nord CE 3 Lite 5G specifications): 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே கொண்டு இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் ப்ரொடெக்ஷன் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 695 ப்ராசஸர் மூலம் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி போன் இயங்குகிறது. எனவே கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக மேம்பட்ட செயல்திறன் வழங்குகிறது ஸ்னாப்டிராகன் ப்ராசஸர். ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட நிறுவனத்தின் சொந்த ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.1 உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதேபோல் அட்ரினோ 619 ஜிபியு வசதி இதில் உள்ளது.
இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் 108 மெகாபிக்சல் மெயின் கேமரா + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா + 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்.
67W சூப்பர்வூக் வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதேசமயம் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமானது வெறும் 30 நிமிடங்களில் 0 - 80% வரை பேட்டரியை சார்ஜ் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner), கேம் ஃபோகஸ் மோட், நாய்ஸ் கேன்சலேஷன் ஆதரவுடனான டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் போன்ற அசத்தலான வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, 3.5மிமீ ஆடியோஜாக், ப்ளூடூத் 5.1, யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி விருப்பங்களைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன்.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
photo courtesy: amazon


Click it and Unblock the Notifications








