ஆன்லைனில் 'இதையெல்லாம்' செய்தால், நீங்கள் கைது செய்யப்படுவீர்கள்..!?

|

நீங்கள் எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் இன்டர்நெட் என்பது பொது தான். அப்படியாக பயனாளிகளுக்கு அதிகப்படியான சுதந்திரத்தை வழங்கும் இன்டர்நெட் ஆனது சில குறிப்பிட்ட நாடுகளில் பலவகையான கட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளது என்பது தான் நிதர்சனம்.

<strong>ரெட் பிளானெட்டில் ரெட் ஒயின்.! செவ்வாயில் திராட்சை வளர்க்க ஜோர்ஜியா முடிவு.!</strong>ரெட் பிளானெட்டில் ரெட் ஒயின்.! செவ்வாயில் திராட்சை வளர்க்க ஜோர்ஜியா முடிவு.!

அப்படியாக, குறிப்பிட்ட நாடுகளில் ஆன்லைனில் நீங்கள் 'என்னவெல்லாம்' செய்தால் கைது செய்யப்படுவீர்கள் என்பதைப்பற்றிய தொகுப்பே இது..!

#1 திறந்தவெளி வைபை :

#1 திறந்தவெளி வைபை :

பாஸ்வேர்ட் இல்லாத உங்களின் வெளிப்படையான திறந்தவெளி 'வைபை'யை சமூக விரோதிகள், தீவிரவாதிகள் பயன்படுத்த வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் நீங்களும் கைதாகலாம். இந்த சட்டமானது கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

#2 சேர்ச் ஹிஸ்ட்ரி :

#2 சேர்ச் ஹிஸ்ட்ரி :

ஹேக் (Hack) போன்ற சைபர் குற்றங்களில் (Cyber Crimes) ஈடுபடுபவர்கள் தங்களின் சேர்ச் ஹிஸ்ட்ரியை (Search History) அழிப்பது சகஜம் ஆகையால் இதுபோன்ற குற்ற சம்பவங்களுக்கு கைது சட்டம் அமெரிக்காவில் பயன்பாட்டில் உள்ளது.

இந்தியா :

இந்தியா :

கடைசி 3 மாத சேர்ச் ஹிஸ்ட்ரியை அழிக்க கூடாது என்று இந்தியாவிலும் சட்டம் அமலாக்கப்பட்டு பின் பலத்த எதிர்ப்புக்கு பின், திரும்ப பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

#3 போஸ்ட் அல்லது ட்வீட் :

#3 போஸ்ட் அல்லது ட்வீட் :

மனதை புண்படுத்துகிற, அவமதிப்பான ஃபேஸ்புக் போஸ்ட் அல்லது ட்வீட் செய்தால், நீங்கள் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் அது பிரச்சனையில் தான் முடியும்.

#4 வாய்ஸ் ஓவர் இண்டர்நெட் ப்ரோட்டோகால் :

#4 வாய்ஸ் ஓவர் இண்டர்நெட் ப்ரோட்டோகால் :

வாய்ஸ் ஓவர் இண்டர்நெட் ப்ரோட்டோகால் (Voice over Internet Protocal - VOIP) இணையவழி ஒலி பரிமாற்றம் செய்தால் கைது செய்யப்படுவீர்கள். எத்தியோப்பியாவில் மட்டுமே குறிப்பிட்ட மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் இந்த சட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#5 வீடியோவில் நடனம் :

#5 வீடியோவில் நடனம் :

ஆம். வீடியோவில் நடனம் ஆடினால் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள். ஈரானில் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.

ரஷ்யா :

ரஷ்யா :

ரஷ்யாவில் இரண்டாம் உலகப்போர் நினைவிடம் முன்பு நடனம் ஆடி, வீடியோ வெளியிட்ட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

#6 இன்டர்நெட் கமெண்ட் :

#6 இன்டர்நெட் கமெண்ட் :

சிரியாவில் இன்டர்நெட்டில் கமெண்ட் பதிவு செய்வது கூட குற்றம் தான். அதற்காக நீங்கள் கைது செய்யப்படலாம்.

#7 மொழிமாற்றம் :

#7 மொழிமாற்றம் :

தடை செய்யப்பட்ட புத்தகத்தை மொழிமாற்றம் செய்தால் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள். தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இதுபோன்ற கைது சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

#8 சூதாட்டம் :

#8 சூதாட்டம் :

உலகின் பல நாடுகளிலும் ஆன்லைன்னில் சூதாடுவது சட்டப்படி குற்றமாகும்.

#9 ஃபைல் பரிமாற்றம் :

#9 ஃபைல் பரிமாற்றம் :

ஃபைல் பரிமாற்றம் என்பது சர்ச்சைக்குரிய பிரச்சனையாகும். சில நாடுகளில் பாடல்கள், புகைப்படங்கள், திரைப்படங்கள் என எதையும் பரிமாறிக்கொள்ளமுடியும், சில நாடுகளில் இது முடியாது. மேலும் அது நீங்கள் எதை பரிமாற்றம் செய்கிறீர்கள் என்பதையும் பொருத்தது.

#10 ஃபேஸ்புக்கில் பாடல் வரிகள் :

#10 ஃபேஸ்புக்கில் பாடல் வரிகள் :

அமெரிக்காவில் ஃபேஸ்புக்கில் பாடல் வரிகளை போஸ்ட் செய்ததற்காகவும் ஒருமுறை கைது சம்பவம் நடந்துள்ளது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

<strong>ஆன்லைன் வாங்க, இலவசமாக 'அள்ளிட்டு' போங்க..!</strong>ஆன்லைன் வாங்க, இலவசமாக 'அள்ளிட்டு' போங்க..!

<strong>ஆன்லைனில் பணம் சம்பாதிக்க 10 ஸ்மார்ட் ஐடியாக்கள்..!</strong>ஆன்லைனில் பணம் சம்பாதிக்க 10 ஸ்மார்ட் ஐடியாக்கள்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
10 Online Activities That Can Get You Arrested. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X