கட்டாயம் படிக்க வேண்டிய தொழில்நுட்ப கில்லாடிகளின் வாழ்க்கை வரலாறுகள்..!

By Meganathan
|

தொழில்துறையில் ஆர்வம் மனித வாழ்க்கையை எளிமையாக்கும் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துதல், அதையே வாழ்க்கையாக மாற்றி கொள்வது என புதிய கனவுகளோடு இருப்பவர்களுக்கு இந்த தொகுப்பு பயனுள்ளதாக இருக்கும்.

ரவுட்டர்களின் ராஜா கூகுள் ஆன்ஹப்...!

தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்க ஆர்வம் கொண்டிருக்கும் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய சிறப்பு மிக்க வாழ்க்கை வரலாற்று புத்தகங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம். கீழ் வரும் ஸ்லைடர்களில் தொழில்நுட்ப சந்தையில் சிறந்து விளங்க அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலை பாருங்கள்..

பில் கேட்ஸ்

பில் கேட்ஸ்

ஜேம்ஸ் வல்லஸ் மற்றும் ஜிம் எரிக்ஸன் இணைந்து எழுதிய 'Hard Drive: Bill Gates and the Making of the Microsoft Empire' புத்தகத்தில் பில் கேட்ஸ் குறித்த அறிமுகம் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எழுச்சி குறித்து விரிவான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஸ்டீவ் ஜாப்ஸ்

அமெரிக்க எழுத்தாளரான வால்டர் ஐசக்சன் எழுத்தில் 'Steve Jobs' புத்தகத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் கலந்து கொண்ட 40க்கும் மேற்பட்ட பேட்டி மற்றும் இரண்டு ஆண்டுகளாக அவர் அளித்த பேட்டி சார்ந்து எழுதப்பட்டுள்ளது.

பால் ஆல்லன்

பால் ஆல்லன்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துவக்க நாட்கள் மற்றும் அந்நிறுவனம் சந்தித்த சோதனைகளையும் விரிவாக விவரிக்கும் புத்தகம் தான் 'Idea Man: A Memoir by the Co-Founder of Microsoft' இது.

ஜெஃப் பெசோஸ்

ஜெஃப் பெசோஸ்

ப்ராட் ஸ்டோன் எழுத்தில் உருவாகியிருக்கும் ‘The Everything Store: Jeff Bezos and the Age of Amazon' புத்தகமானது இணைய சந்தை மற்றும் க்ளவுட் கம்ப்யூட்டிங் சார்ந்து எழுதப்பட்டுள்ளது.

வாரென் பஃப்பெட்

வாரென் பஃப்பெட்

அலைஸ் ஸ்க்ரோடெர் எழுதிய 'The Snowball: Warren Buffett and the Business of Life' புத்தகத்தில் வாரென் பஃப்பெட் வாழ்க்கை பயனத்தை விவரித்திருக்கின்றார்.

ஸ்டீவ் வோஸ்நியாக்

ஸ்டீவ் வோஸ்நியாக்

'iWoz: Computer Geek to Cult Icon: How I Invented the Personal Computer, Co-Founded Apple, and Had Fun Doing It' புத்தகத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சியில் பக்க பலமாக இருந்த மற்றொரு ஸ்டீவ் சார்ந்து எழுதப்பட்டுள்ளது.

மார்க் சூக்கர்பர்க்

மார்க் சூக்கர்பர்க்

பென் மெஸ்ரிச் எழுதியிருக்கும் 'The Accidental Billionaires: The Founding of Facebook' புத்தகத்தில் ஒரே இணையதளம் பல கோடி மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உருவெடுத்திருப்பது சார்ந்து பயணிக்கின்றது.

ராபர்ட் நைஸ்

ராபர்ட் நைஸ்

லெஸைல் பெர்லின் எழுத்தில் 'The Man Behind the Microchip: Robert Noyce and the Invention of Silicon Valley' புத்தகம் ராபர்ட் நைஸ் அவர்களின் பல்வேறு திறமைகளை விரிவாக விவிரிக்கின்றது.

லைனஸ் டோர்வால்ட்ஸ்

லைனஸ் டோர்வால்ட்ஸ்

லைனக்ஸ் வரலாற்றை தழுவி 'Just for Fun: The Story of an Accidental Revolutionary' எழுதப்பட்டுள்ளது.

ஜானி ஐவ்

ஜானி ஐவ்

லியான்டர் கஹ்னி எழுதியிருக்கும் 'Jony Ive: The Genius Behind Apple's Greatest Products' புத்தகத்தில் ஆப்பிள் கருவிகளின் வடிவமைப்பாளர் குறித்து பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

Best Mobiles in India

Read more about:
English summary
10 must read biographies tech leaders. Read more in Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X