இந்த மில்லியனர்களின் முதல் தொழில் என்னவென்று சொன்னால் நம்புவீர்களா?

  உலகின் பிரபலமான மனிதராக உருவாக, உங்களின் பெற்றோர் மாபெரும் மில்லியனர்களாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை, உங்களுக்கென்று சொந்த திறமைகள் இருந்தால் போதும். இப்படியான நிலைப்பாட்டின் கீழ் இயங்கும் உலகத்தின், சிறப்பான கால கட்டத்தில் நாம் வாழ்கிறோம்.

  இந்த மில்லியனர்களின் முதல் தொழில் என்னவென்று சொன்னால் நம்புவீர்களா?

  இன்றைய தேதிக்கு, ஒரு திறமையான மாணவன் தூங்கி எழுவதற்குள் பிரபலம் ஆகலாம் அல்லது ஒரு சாதாரணமான தொழில் முனைவோர் கூட்டமானது புதிய யுக்தி ஒன்றின் மூலம் மாபெரும் எழுச்சியை அடைந்து டிவி, பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுக்கலாம். இம்மாதிரியான வெற்றிக்கு ஆயிரமாயிரம் எடுத்துக்காட்டுகளை கூறலாம்.

  இன்னொரு கூட்டம் உண்டு!

  ஆனால் வெற்றி என்பது எடுத்த எடுப்பிலேயே, அதாவது முதல் வேலையிலே அல்லது முதல் தொழிலிலேயே கிடைக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. படிப்படியாக கற்று, பல்வேறு வேலைகளை செய்து இறுதியாக "இதுதான் நான்" என்பதை கண்டறிந்து பின் பிரபலத் தன்மையையும், பேட்டிகளையும் இன்னொரு கூட்டமும் உண்டு. இவ்வகை வெற்றிக்கு சொந்தக்காரர்களான சில பில்லியனர்களின் "முதல் வேலை/ தொழில்" என்ன என்பதை பற்றிய சுவாரசியான தொகுப்பே இது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  10. எலான் மஸ்க்:

  ஒன்பது வயதிலேயே புரோகிராமிங் செய்வது எப்படி கற்று அறிந்தவராக இருந்தார். 28 வது வயதில் (307 டாலர்கள் மதிப்பில்) முதல் ஸ்டார்ட்-அப்பை ஆரம்பித்தார். பின் 30 வது வயதில் பேபால் நிறுவனத்தை நிறுவினார், பின் 32 வது வயதில் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தை திறந்தார். அடுத்த ஒரு வருடம் கழித்து, வருங்காலத்தில் செவ்வாய் கிரகத்தில் காலணிகள் அமைக்கப்படும் என்கிற தொலைநோக்கு பார்வையின் கீழ் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். இப்போது, ​​அவர் 47 வயது மிக்க ஒரு வெற்றிகரமான பொறியாளர், தொழிலதிபர், மற்றும் பில்லியனர் ஆவார்.

  09. பில் கேட்ஸ்:

  கல்லூரியில் பல வகுப்புகளுக்கு செல்லவில்லை என்கிற காரணத்தினால் இரண்டாவது வருடம் கழித்து கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனாலும் கூட அவர் ப்ரோகிராமிங்கை மிகவும் நேசித்தார். இன்னும் சொல்லப்போனால் 21 வயதில் தான் இன்னும் அதிகமாக நேசித்தார். அதன் வெளிப்பாடாய் தான், பில்லும் அவரது நண்பர் பால் ஆலனும் இணைய மைக்ரோசாப்ட் எனும் நிறுவனம் உருவானது. 2018 ஆம் ஆண்டில், விளாமிதிர் புடின், டொனால்ட் டிரம்ப், மற்றும் போப் ஆகியோருக்குப் பிறகு (ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் படி) மிகவும் செல்வாக்கு உடையவர்களில் 7 வது இடத்தில் பில் கேட்ஸ் உள்ளார்.

  08. கிரிஸ் ஜென்னர்

  இவர் மீது எவ்வளவு குறைகள் கூறப்பட்டாலும் சரி, இந்த பெண் தன் சொந்த வாழ்க்கையை உருவாக்கி இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. ஒரு பொறியியலாளர் மற்றும் ஒரு இல்லத்தரசிக்கு பிறந்த இவர் ஒரு விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்தார். எப்பொழுதும் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு நபராக இருந்த இவர், ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞரான ராபர்ட் கர்தாஷியனை மணந்த பிறகு, ஒரு சொந்த கடையை திறந்தார். அதில் வந்த பணத்தை வைத்து ரியாலிட்டி ஷோக்கள் நடத்தி மிகவும் பிரபலம் ஆனார்.

  07 & 06. லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின்

  1995 இல் எடுக்கப்பட்ட இந்த புகைப்பட=த்தில் இருக்கும் 2 திறமையான தோழர்கள், ஸ்டாண்ட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு சுற்றுப் பயணத்தில் ஒருவருக்கொருவரை சந்தித்தனர். அவர்கள் பேசி, கணினி தொழில்நுட்பம் பற்றி விவாதித்தின் விளைவாக நண்பர்களாக ஆனார்கள். சிறிது நேரம் கழித்து, அவர்கள் ஒரு ஆராய்ச்சி திட்டத்தை தொடங்க முடிவு செய்தனர், அது விரைவில் (1998 இல்) இன்றுள்ள சக்திவாய்ந்த நிறுவனங்களில் ஒன்றாக மாறியது, கூகுள் இன்க்.

  05. மார்க் ஸூக்கர்பெர்க்

  இவரை பற்றிய பெரிய அறிமுகம் தேவை இல்லை. ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் உளவியல் துறையில் படித்து கொண்டிருந்த ஒரு 19 வயதான மாணவரின் கதை அப்போதே விட இப்போதைக்கு தான் மிகவும் பிரபலமாக உளள்து. அதற்கு காரணம் - பேஸ்புக். மார்க் உலக வரலாற்றில் மிகவும் இளைய வயதில் பில்லியனர் ஆனவர் ஆவார் என்பதும், ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் படி, மிகவும் செல்வாக்குள்ளவர்களில் இவர் 13 வது இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  04. டிம் குக்

  அலபாமா பல்கலைக்கழகத்தின் அமைதியான மற்றும் உறுதியான மாணவர். பின் மிகப்பெரிய கணினி நிறுவனமான ஐபிஎம் இல் தனது முதல் வேலை. பின்னர், இன்டெலிஜென்ஸ் எலெக்ட்ரானிக்ஸ், காம்பாக், மற்றும் நிச்சயமாக ஆப்பிள் போன்ற நிறுவனங்களில் சில நிர்வாக பதவிகளில் பணியாற்றினார். அவர் 1998 ஆம் ஆண்டில் தான் ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்ற துவங்கினார். பின் ஸ்டீவ் ஜாப்ஸின் வலது கையாக திகழ்ந்த இவர், ஜாப்ஸின் மறைவிற்கு பின் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இறந்தார்.

  03. ரிச்சர்ட் பிரான்சன்

  ரிச்சர்ட் பிரான்சன் எப்பொழுதும் ஒரு வேடிக்கை மிக்க மனிதராக இருந்துள்ளார். இவர் பள்ளி முடித்த நாளில், இவன் சிறைக்கு செல்வான் அல்லது ஒரு மில்லியனர் ஆவான் என்று தலைமை ஆசிரியர் கூறினாராம். அவர் சரியாக தான் சொல்லி உள்ளார். இன்று, சர் ரிச்சர்ட் பிரான்சன், பிரபல பன்னாட்டு நிறுவனமான விர்ஜின் குழுவின் இணை நிறுவனர் ஆவார். எல்லாவற்றிற்கும் மேலாக அவரின் குறும்புத்தனம் கொஞ்சம் கூட குறையவில்லை.

  02. சூசன் வோஜிக்கி

  சூசன் வோஜிக்கி ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்கிய பெண்களின் பிரகாசமான உதாரணங்களில் ஒருவர் ஆவார். முதலில் கூகுள் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மேலாளராக இருந்தார், இவர் தான் யூட்யூப்பை வாங்கும்படி கூகுளுக்கு பரிந்தார், பின்னர் 2014 முதல் அதன் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உருமாறினார்

  01. ஸ்டீவ் வோஸ்நாக்

  இடது பக்கம் உள்ள புகைப்படத்தில் சிரித்த முகமாக இருக்கும் நபர், ஒரு படைப்பு ஆற்றல் மிக்க பொறியியலாளர் ஆவார். உதாரணமாக, வீட்டை விட்டு வெளியேறாமல் தனது நண்பர்களிடம் பேசுவதற்காக அண்டை வீட்டிலுள்ள 6 பிள்ளைகளின் படுக்கையறைகளை இணைக்கும் கம்யூனிகேஷன் சிஸ்டம் ஒன்றை வடிவமைத்தார். 20 ஆண்டுகளுக்கு பின்னர், அதே நபர் ஸ்டீவ் ஜாப்ஸுடன் சேர்ந்து முதல் ஆப்பிள் கம்ப்யூட்டரையும் செய்தார்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  10 Millionaires Who Were Very Different People at the Beginning of Their Careers: Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more