Samsung ஒரே குஷி- 2021 இல் இந்த 1 மாடல் மட்டும் 10 மில்லியன் யூனிட் ஏற்றுமதி, அப்படி என்ன மாடல்?

|

2021 இல் மட்டும் 10 மில்லியன் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி செய்துள்ளதாக Samsung தெரிவித்துள்ளது. சாம்சங் நிறுவனத்தின் Galaxy Z Fold மற்றும் Flip ஸ்மார்ட்போனின் புதிய மாடல்கள் அறிமுகமாக இருக்கும் நேரத்தில் சாம்சங் தரப்பில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

புதிய கேலக்ஸி இசட் ஃபோல்ட் மாடல்

புதிய கேலக்ஸி இசட் ஃபோல்ட் மாடல்

சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 மற்றும் இசட் ஃப்ளிப் 4 ஆகிய ஸ்மார்ட்போன்களை அடுத்த மாதம் அறிமுகப்படுத்த இருக்கிறது. நிறுவனம் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள் பிரிவில் எவ்வாறு செயல்பட்டு வருகிறது, இந்த பிரிவில் நிறுவனத்தின் வளர்ச்சி என்ன என்பது குறித்த தகவல் நிறுவனம் தரப்பில் வெளியாகி இருக்கிறது.

இந்த வெற்றி அடுத்த கேலக்ஸி மாடலிலும் தொடரும்

இந்த வெற்றி அடுத்த கேலக்ஸி மாடலிலும் தொடரும்

சாம்சங் MX பிஸ்னஸின் தலைவரான Dr TM Roh இதுகுறித்து தெரிவித்த தகவலை விரிவாக பார்க்கலாம். நிறுவனம் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் பிரிவில் விரைவான வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. இது அடுத்தடுத்த கேலக்ஸி இசட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களிலும் தொடரும் என குறிப்பிட்டார்.

பயனர்களின் தேவையை பூர்த்தி செய்யவே நடவடிக்கை

பயனர்களின் தேவையை பூர்த்தி செய்யவே நடவடிக்கை

சந்தையில் கிடைக்கும் பிற ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களில் இருந்த சாம்சங் மட்டும் ஏன் தனித்து நிற்கிறது என்ற கேள்விக்கும், சாம்சங் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனின் தனித்துவ நோக்கம் குறித்தும் TM Roh கூறினார். அதில், "எங்கள் பயனர்கள் அவர்களின் தினசரி தேவையை தடையின்றி தொடர ஒரு நெகிழ்வான ஸ்மார்ட்போன் தேவை". சாம்சங் நிறுவனத்தை தவிர ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் பிரிவில் வேறு யாரும் ஆதிக்கம் செலுத்தும் சாத்தியக் கூறுகளை முன்வைக்கவில்லை என கூறினார்.

10 மில்லியன் யூனிட் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள்

10 மில்லியன் யூனிட் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள்

மேலும், 2021 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 10 மில்லியன் யூனிட் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், முந்தைய ஆண்டை விட 300 சதவீதம் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். அதேபோல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களை பொறுத்த வரை, 70% பேர் கேலக்ஸி இசட் ஃப்ளிப் மாடலை பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் விரைவில்

புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் விரைவில்

சாம்சங் நிறுவனத்தின் புதிய ஃபோல்டபிள் மாடல் அடுத்த மாதம் அறிமுகமாக இருக்கிறது. அது சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப் 4 மற்றும் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 ஆகும். மேலும் இந்த ஸ்மார்ட்போன்களுடன் கேலக்ஸி வாட்ச் 5 மற்றும் வாட்ச் 5 ப்ரோ ஆகிய சாதனங்களும் அறிமுகமாகும் என தகவல்கள் தெரிவிக்கிறது. புது மாடல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கும் இந்த நேரத்தில் தான் சாம்சங் தரப்பில் 10 மில்லியன் யூனிட்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

சாம்சங் போனில் இதுவரை கண்டிராத ஒரு அம்சம்

சாம்சங் போனில் இதுவரை கண்டிராத ஒரு அம்சம்

சாம்சங் நிறுவனம் Galaxy Unpacked நிகழ்வை அடுத்த மாதம் நடத்த இருக்கிறது. இந்த நிகழ்வில் தான் சாமசங் நிறுவனம் கேலக்ஸி இசட் ஃபோஸ்ட் 4, இசட் ஃப்ளிப் 4 ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இருப்பினும் நிறுவனம் தரப்பில் இருந்து ஃபோல்டபிளுக்கான வெளியீட்டு தேதியை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் ஆனது சாம்சங் போனில் இதுவரை கண்டிராத சிறந்த 3x ஜூம் கேமரா இடம்பெறும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

12 ஜிபி மற்றும் 16 ஜிபி ரேம் வேரியண்ட்

12 ஜிபி மற்றும் 16 ஜிபி ரேம் வேரியண்ட்

சாம்சங் Galaxy Z Fold 4 ஸ்மார்ட்போனானது 50 எம்பி முதன்மை கேமரா உடன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் எனவும் 3x ஜூம் உடனான 12 எம்பி அல்ட்ராவைட் லென்ஸ் மற்றும் 12 எம்பி டெலிஃபோட்டோ கேமரா இதில் இடம்பெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4 ஆனது 12 ஜிபி மற்றும் 16 ஜிபி ரேம், 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட்டில் வெளியாகும் என கூறப்படுகிறது.

தலை சுற்ற வைக்கும் விலை

தலை சுற்ற வைக்கும் விலை

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் புதிய மாடலின் விலை சற்று தலை சுத்த வைக்கும் வகையில் இருக்கிறது. ஆம், சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.1,49,999 எனவும் 16 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.1,57,999 எனவும் அறிமுகமாகும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சாம்சங் ஃப்ளிப் ஸ்மார்ட்போனின் விலை குறித்து பார்க்கையில், இதன் 12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.87,900 ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இசட் ஃபோல்ட் 3 மற்றும் ஃப்ளிப் 3 5ஜி விற்பனையில்

இசட் ஃபோல்ட் 3 மற்றும் ஃப்ளிப் 3 5ஜி விற்பனையில்

சாம்சங் நிறுவனத்தின் இசட் ஃபோல்ட் 3 மற்றும் ஃப்ளிப் 3 5ஜி ஸ்மார்ட்போனை தற்போதே வாங்கலாம். சாம்சங் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 ஆனது இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. அது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆகும். இதன் விலை விவரங்கள் குறித்து பார்க்கையில், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.84,999 ஆகவும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.88,999 ஆகவும் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படும் சலுகையின் மூலம் இதன் விலை ஒவ்வொரு தளத்திலும் வேறுபட்டு இருக்கிறது.

கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 விலை என்ன தெரியுமா?

கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 விலை என்ன தெரியுமா?

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 3 ஸ்மார்ட்போன்கள் இரண்டு வேரியண்ட்களில் வருகிறது. அது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகும். அதேபோல் இதன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.1,49,999 ஆகவும் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.1,57,999 ஆகவும் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
10 million foldable smartphones shipped in 2021: Samsung MX Business Head

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X