Home
News

கூகுள் தடை செய்த 10 ஆபத்தான செயலிகள்: இதோ பட்டியல்.! உடனே டெலீட் செய்யுங்கள்.!

புதிய ஆப் வசதிகள் நமக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக நமது தினசரி வேலைகளை மிகவும் சுலபமாக செய்து முடிக்கிறது ஒரு சில ஆப் வசதிகள். ஆனாலும் பிளே ஸ்டேரில் நீங்கள் ஆப் வசதியை பதிவிறக்கம் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதாவது ஒரு சில ஆப் வசதிகள் நமது தகவல்களை திருடும்.

 கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும்

பயனர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் செயலிகளை (ஆப்) பதிவிறக்கம் செய்வதற்கு முன்பு அதன் பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக ஒரு சில செயலிகள் நமது தகவல்களை திருட வாய்ப்பு உள்ளது.

பிளே ஸ்டோரில் உள்

சமீபத்தில் பிளே ஸ்டோரில் உள்ள செயலிகள் தொடர்ந்து மால்வேர் வைரஸ் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றன. அதன்படி தற்போது hindustantimes வலைதளம் வெளியிட்ட தகவலின்படி, பிளே ஸ்டோரில் 10 செயலிகள் பயனர்களின் தகவல்களை திருடும் மால்வேரால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மால்வேரால் பாதிக்கப்பட்ட

குறிப்பாக இந்த மால்வேரால் பாதிக்கப்பட்ட செயலிகள் யூசர் நேம், பாஸ்வேர்ட் ஆகிய தகவல்களை திருடும் வல்லமை கொண்டது எனறும், பின்பு வங்கி சார்ந்த தகவல்களை திருடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆபத்தான அந்த 10 செயலிகளையும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்துகூகுள் தடை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனாலும் ஏற்கனவே அதிக எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் இந்த ஆபத்தான செயலிகளை வைத்துள்ளனர். எனவே இவற்றை உடனே டெலிட் செய்வது மிகவும் நல்லது. இப்போது இந்த ஆபத்தான 10செயலிகளின் பட்டியலைப் பார்ப்போம்.

நீங்கள் டெலிட் செய்ய வேண்டிய தீங்கிழைக்கும் செயலிகள் இதோ

நீங்கள் டெலிட் செய்ய வேண்டிய தீங்கிழைக்கும் செயலிகள் இதோ

1. Speed Radar Camera

2. Al-Moazin Lite (Prayer times)

3. Wi-Fi Mouse (Remote Control PC)

4. QR & Barcode Scanner Developed by AppSource Hub

5. Qibla Compass - Ramadan 2022

6. Simple Weather & Clock Widget (Developed by Difer)

7. Handcent Next SMS- Text With MMS

8. Smart kit 360

9. Full Quran MP3-50 Languages & Translation Audio

10. Audiosdroid Audio Studio DAW

குறிப்பிடப்பட்டுள்ள இந்த 10 செயலிகளை

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த 10 செயலிகளை இதுவரை 60 மல்லியனுக்கு அதிகமாக பயனர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். எனவே இந்த
தீங்கிழைக்கும் செயலிகளை நீங்கள் பதிவிறக்கம் செய்திருந்தால் உடனே டெலிட் செய்யவும்.

 கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும்

அதேபோல் கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் அனைத்து செயலிகளும் கூகுள் நிறுவனத்தின் பாதுகாப்பு கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும். இல்லை என்றால் அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

News Source: hindustantimes

Best Mobiles in India

English summary
10 malicious apps banned by Google: Here is the list!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X