ஐன்ஸ்டினிடம் இருந்து படிக்க வேண்டிய பத்து பாடங்கள்

|

ஐன்ஸ்டின் என்பவர் ஒரு மிகசிறந்த விஞ்ஞானி என்பது நம்மில் அனைவரும் அறிந்த ஒன்று. அவரே தனது வயிற்று பிழைப்பிற்காக 1900-ஆம் ஆண்டுகளில் வேலை தேடி அலைந்த ஒரு நபர். என்னதான் நன்கு படித்தாலும், அவருக்கு ஒரு நல்ல வேலை கிடைப்பதற்கு கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் ஆயின. ஹெய்ன்ரிச் வெபர் என்ற பௌதீக பேராசிரியரின் தவறான அறிவுறுத்தலின் பேரிலேயே தனக்கு வேலை கிடைக்கலவில்லை என்று ஐன்ஸ்டின் கூறுவதுண்டு.

 ஐன்ஸ்டினிடம் இருந்து படிக்க வேண்டிய பத்து பாடங்கள்

யாரும் அறியப்படாத தேவைப்படாத ஒரு நபர் எவ்வாறு உறுதியான உள்ளம் படைத்தவராக மாறினார் ?

இந்த கட்டுரையில் ஐன்ஸ்டின் வாழ்வில் இருந்து 10 வழிமுறைகளை தொகுத்து எடுத்துளோம். இவை உங்களின் சபதங்களை நிறைவேற்ற மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

1. தெரிந்துகொள்வதை விட புரிந்துகொள்வதே சிறந்தது

"ஒரு செய்தியை எந்த ஒரு முட்டாளும் தெரிந்து கொள்வான். ஆனால் சிலரால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் " - ஆல்பர்ட் ஐன்ஸ்டின்

நிறைய சமயங்களில் வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள வித்தியாசம் என்பது ஒரு செயலை யார் எப்படி செய்ய போகிறார்கள் என்பதை தெரிந்துகொள்வதை விட யார் எதை பயன்படுத்தி செய்யப்போகிறார்கள் என்பதை புரிந்துகொள்வதில் இருக்கிறது.

2.நிகழ்காலத்தை நினைத்து திருப்தியடையுங்கள்

"மகிழ்ச்சையான மனிதர்கள் எப்போதும் நிகழ்காலத்தை நினைத்து திருப்தி கொள்வார்கள், அவர்கள் ஒருபோதும் எதிர்கால கற்பனை கனவில் வாழ மாட்டார்கள்" - ஆல்பர்ட் ஐன்ஸ்டின்

வெறும் கற்பனை உலகத்தில் வாழ்த்து கொண்டிருந்தால் மட்டும் நம்மால் வாழ்க்கையில் முன்னேற முடியாது. நம் கற்பனையை நிகழ்காலத்தில் நிஜமாக்கி வாழ்க்கை பயணத்தை முன்செலுத்தவேண்டும். நீங்கள் எதைச் செய்தீர்கள் என்பதையும், இன்றைய தினம் செய்துவருவதை எண்ணியும் நீங்கள் வருந்தாமல் இருக்கிறீர்கள் என்பதற்காக உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள்.

3 . சுயமாக சிந்தியுங்கள்

"சரியாக சிந்திக்காமல் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு செய்யும் மரியாதையானது சத்தியத்தின் மிகப்பெரிய எதிரி" - ஆல்பர்ட் ஐன்ஸ்டின்

நீங்கள் இதுவரை அடையாத ஒரு இலக்கை நோக்கி பயணப்பட்டு கொண்டுருக்கிறீர்கள். ஏதவது ஒரு உண்மைக்குப் புறம்பான செயல் உங்களை தடுக்கும் பொழுது, நன்கு சிந்தித்து உங்கள் இலக்கை சரியான வழியில் அடைய வேண்டும்.

4 . எப்படி கற்றுக்கொள்வது என்பதை கற்றுக்கொள்ளுங்கள்

"ஒரு கல்லூரி கல்வியின் மதிப்பானது பல உண்மைகளை கற்றுக்கொள்வதில் அல்ல, ஆனால் மனதை சிந்திக்க அளிக்கப்படும் பயிற்சியில் இருக்கிறது" - ஆல்பர்ட் ஐன்ஸ்டின்

தொடர்ச்சியாக கற்றுக்கொள்ளும் ஒருவர் தொடர்ச்சியாக நிறையவற்றை சம்பாதிக்கிறார்.

5 . படைப்பாற்றலை தொடர வேண்டும்

"ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்பு அதிகம் புத்தகம் வாசிப்பது படைப்பாற்றலை குறைகிறது. திரையரங்கில் அதிக நேரம் செலவிடும் ஒருவன் அவன் சொந்த வாழ்க்கையை வாழ்வதை விடுத்தது கற்பனை உலகில் எப்படி திளைக்கிறானோ, அதே போல் அதிகமாக வாசிப்பவன் தன் மூளையை யோசிப்பதற்கு மட்டும் அதிகம் பயன்படுத்தி சோம்பேறி ஆகிறான்" - ஆல்பர்ட் ஐன்ஸ்டின் பயன்படுத்துவதை காட்டிலும் உற்பத்தி செய்வதே இலக்கை அடைவதற்கு உதவும்.

6. உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள்

"நான் உள்ளுணர்வுகளையும் ஊக்கத்தையும் நம்புகிறேன். நான் தான் சரி என்று எனக்குத் தெரியாது, இருப்பினும் நான் சரியென்று சில நேரங்களில் உணர்கிறேன்" - ஆல்பர்ட் ஐன்ஸ்டின் சில நேரங்களில் உள்ளுணர்வு ஒரு அனுமானத்தை விட சிறந்தது. இது உங்களின் வாழ்நாள் அனுபவம் அல்லது ஒரு முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக இருப்பினும், முதலில் உங்களை நம்புவதே ஞானமுள்ள செயலாகும்.

7. உங்கள் கற்பனையை அதிகமாக பயன்படுத்தவும்

"அறிவை விட கற்பனை மிக முக்கியம். அறிவு என்பது வரையறுக்கப்பட்ட ஒன்று, ஆனால் கற்பனா சக்திக்கு என்று ஒரு வரையறை இல்லை. அது உலகம் முழுவதும் சுற்றி வரக்கூடியது" - ஆல்பர்ட் ஐன்ஸ்டின் கற்பனையின் நீட்சி இல்லாமல் புதிய அல்லது புதுமையான எதையும் உருவாக்க முடியாது. ஒவ்வொரு நாளும் உங்கள் மூளையின் கற்பனைகளை அதிகரிப்பதன் மூலம் விண்ணை முட்டும் இலக்குகளையும் எளிதில் அடையலாம்.

8 . எது எப்படியோ, நகர்ந்து கொண்டேயிருங்கள்

"வாழ்க்கை ஒரு சைக்கிள் சவாரி போல. உங்கள் இருப்பை தக்க வைக்க நீங்கள் நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்." - ஆல்பர்ட் ஐன்ஸ்டின்

உங்கள் உடல் சுமார் 60% தண்ணீரால் ஆனது. தேங்கி நிற்கும் நீர், நோய் மற்றும் கொசுக்கள் ஆகியவற்றைக் கொண்டுவருகிறது. கடினமாக இருந்தாலும் கூட முன்னேறி கொண்டே இருங்கள். உங்கள் உடலை நகர்த்த முடியவில்லை என்றாலும் கூட, உங்கள் மனதை புதிதாக இளமையாக வைத்துக்கொள்ளுங்கள்.

9 . உங்களை ஒரு உணர்வுள்ள சமூகத்தின் உறுப்பினராக ஆக்கிக் கொள்ளுங்கள்

"நான் தினசரி வாழ்க்கையில் ஒரு தனித்துவமான தனி நபர் என்றாலும், உண்மை, அழகு, நீதி ஆகியவற்றிற்கு போராடும் மறைமுக சமூகத்தைச் சார்ந்த என்னுடைய உணர்வு என்னை தனிமையில் தள்ளாமல் பார்த்துக்கொள்கிறது." - ஆல்பர்ட் ஐன்ஸ்டின் தகவல்தொடர்பு தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள் இருந்தாலும், நம்மில் பலர் தனிமையில் உள்ளனர். அதாவது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அல்லது ஒரு கூட்டத்தில் தனியாக இழந்துபோனது போல. நீங்கள் தனியாக இருந்தால், பத்திரிகைகள் எழுதுங்கள். உங்களை புரிந்து கொள்ளும் அல்லது புரிந்து கொள்ள முயற்சிக்கும் ஒரு நனவான சமுதாயத்தை பற்றி எழுதுங்கள். உங்கள் வாழ்க்கை, மற்றவரை ஊக்குவிக்கும் ஒரு வேலை அல்லது ஒரு கலை என்று கற்பனை செய்துகொள்ளுங்கள்.

10 . உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி, உங்கள் இலக்குகளை தைரியமாகவும் நேர்மையாகவும் பகிர்ந்து கொள்ளுங்கள்

"சிறந்த மனிதர்கள் அனைவரும் ஒருகாலத்தில் சாதாரண மனது உள்ளவர்களிடம் இருந்து வன்முறை எதிர்ப்பை எதிர்கொண்டிருக்கின்றனர். வழக்கமான மனோபாவங்களுக்கு கண்மூடித்தனமாக வணங்க மறுத்து, தைரியமாகவும், நேர்மையாகவும் தனது கருத்துக்களை வெளிப்படுத்த விரும்பும் மனிதனை சராசரி மனது உள்ள ஒருவரால் புரிந்துகொள்ள முடியாது" - ஆல்பர்ட் ஐன்ஸ்டின்

ஒரு நிலைப்பாட்டை எடுங்கள். அதில் எப்பொழுதும் உறுதியாக இருங்கள். தைரியமாகவும் நேர்மையாகவும் நீங்கள் கனவு கண்டால் அந்த கனவாக கூடிய விரைவில் நனவாகும்.

முடிவு:

நீங்கள் ஒரு வேலையை விட்டு வெளியேறலாம், யாராவது உங்களை தடுக்கலாம் அல்லது வெறுக்கலாம், என்னவாக இருந்தாலும் முன்னோக்கி நகருங்கள். இது ஐன்ஸ்டினால் முடிந்தது, அனால் அவருக்கு எடுத்து சொல்ல ஒரு ஐன்ஸ்டின் தேவைப்படவில்லை. எனவே உங்களை இலக்கை நோக்கி வீறுகொண்டு நடந்தால், நீங்கள் ஒவொருவரும் ஒரு ஐன்ஸ்டினே!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
10 Lessons from Einstein to Make Your New Year Revolution Stick : Read more about this in Tamil GizBot

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more