ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி வங்கி கணக்கில் ஆன்லைன் மூலம் ரூ.10 லட்சம் மோசடி: எப்படி தெரியுமா?

|

வங்கியில் இருந்து பேசுகிறோம், உங்களுக்கு புதிய ஏடிஎம் கார்ட் தருகிறோம், எனவே உங்களுக்கு வந்துள்ள ஓடிபி எண்ணை சொல்லுங்கள் என்று எந்த வங்கியும் கேட்காது. இதைப் பற்றி பல வங்கிகள் விழிப்புணர்வு அறிவுறுத்தல்களை வெளியிட்டாலும் சூழ்நிலையை பயன்படுத்தி இதுபோன்ற நடக்கின்ற மோசடிகள் தொடரவே செய்கின்றன என்று தான் கூறவேண்டும்.

க்காரணம் கொண்டு நமக்கு வரும்

அதாவது எக்காரணம் கொண்டு நமக்கு வரும் ஓடிபி எண்ணை மற்றவர்களிடம் பகிரக் கூடாது. குறிப்பாக வங்கியில் இருந்துபேசுகிறோம் ஓடிபி-ஐ சொல்லுங்கள் என்று கூறி ஒரு சில கும்பல் நாம் வைத்திருக்கும் பணத்தை எளிமையாக திருடி விடுவார்கள். எனவே இதுபோன்ற திருட்டு கும்பலிடம் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

ஒய்வுபெற்ற தொடக்கக்கல்வி அதிகாரி

இந்நிலையில் ஒய்வுபெற்ற தொடக்கக்கல்வி அதிகாரி வங்கி கணக்கில் ஆன்லைன் மூலம் ரூ.10 லட்சம் வரை மோசடி செய்த மர்ம நபரை கண்டுபிடிக்க வலியுறுத்திசேலம் சைபர் கிரைம் காவல்துறையிலும், கலெக்டர் அலுவலகத்திலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த 8 வழிகளில் உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்படலாம்.. உஷார் மக்களே.! இது ரொம்ப முக்கியம்..இந்த 8 வழிகளில் உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்படலாம்.. உஷார் மக்களே.! இது ரொம்ப முக்கியம்..

அருகே இருக்கும்

சேலம் மேட்டூர் அருகே இருக்கும் கருமலைக்கூடல் பகுதியை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 73). இவர் உதவி தொடக்கக்கல்வி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேலும் இவரது கணவர் அன்பழகன் கொரோனா பாதிப்புக்குள்ளாகி சேலம் இரும்பாலை கொரோனா சிகிச்சைமையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறப்படுகிறது.

கூகுள் பயனர்களுக்கு எச்சரிக்கை: உடனே இதை அப்டேட் செய்யுங்கள்- பாதுகாப்பு முக்கியம்!கூகுள் பயனர்களுக்கு எச்சரிக்கை: உடனே இதை அப்டேட் செய்யுங்கள்- பாதுகாப்பு முக்கியம்!

கொரோனா பாதிப்பு

மேலும் கணவருக்கு கொரோனா பாதிப்பு வந்துவிட்டதே என கவலையுடன் வீட்டில் இருந்துள்ளார் செல்லம்மாள். அந்த சமயம் அவரது தொலைபேசியில் அழைத்த மர்ம நபர் ஒருவர், தான் எஸ்பிஐ வங்கியில் இருந்து பேசுவதாகவும், தங்களுக்கு புதிய வங்கி புத்தகம் மற்றும் ஏடிஎம் அட்டை ஆகியவற்றை தயார் செய்து வைத்து இருப்பதாகவும்,எனவே அதனை சிஸ்டத்தில் ஆக்டிவேட் செய்ய தங்களது செல்போன் நம்பருக்கு ஓடிபி நம்பர் வந்திருக்கும் அதனை கூறுங்கள் என்று கூறியுள்ளார்.

மீன் குழம்பு, சிக்கன் குருமா, ஹல்வா என்று 200 டிஷ்களை சமைக்கும் இந்திய ரோபோட்.. விலை இவ்வளவு தான்..மீன் குழம்பு, சிக்கன் குருமா, ஹல்வா என்று 200 டிஷ்களை சமைக்கும் இந்திய ரோபோட்.. விலை இவ்வளவு தான்..

 வைப்பு நிதியில் இருந்த 10 லட்ம் ரூபாயும், சேமிப்பு வங்கி கணக்கில் இருந்த 4

வங்கியில் இருந்து தான் பேசுகிறார்கள் என நினைத்து ஓடிபி நம்பரை கூறியுள்ளார் செல்லம்மாள். பின்பு சிறிது நேரத்தில் அவரது வைப்பு நிதியில் இருந்த 10 லட்ம் ரூபாயும், சேமிப்பு வங்கி கணக்கில் இருந்த 42 ஆயிரத்து 300 ருபாயும் என மொத்தமாக ஆன்லைன் மூலமாக வேறோருவர் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுவிட்டதாக செல்போனுக்கு குறுஞ்செய்திவந்தது. இதை தொடர்ந்து சேலம் சைபர்கிரைம் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார் செல்லம்மாள்.

'உலகின் மிக சக்திவாய்ந்த எக்ஸ்பாக்ஸ் மினி ஃப்ரிட்ஜ்' சாதனத்தை அறிமுகம் செய்கிறது மைக்ரோசாப்ட்..'உலகின் மிக சக்திவாய்ந்த எக்ஸ்பாக்ஸ் மினி ஃப்ரிட்ஜ்' சாதனத்தை அறிமுகம் செய்கிறது மைக்ரோசாப்ட்..

 வைத்திருக்கும் பயனர்கள்

வங்கி கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் மிகவும் கவனமான இருக்க வேண்டும். குறிப்பாக ஓடிபி எண், உங்களது வங்கி ஏடிஎம் கார்டு நம்பர்கள் உள்ளிட்ட தகவல்களை மற்றவர்களிடம் கூறவேண்டாம். அதேபோல் அதிக தொகையை நீங்கள் எடுக்க விரும்பினால் வங்கிகளுக்கு செல்வது மிகவும் நல்லது.

Best Mobiles in India

English summary
10 lakh fraud in online bank account of retired education officer: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X